The Man Who Sold The World – ARTHUR
சதுரங்க வேட்டையை போல் நிஜக்கதை
தாஜ்மஹாலை விற்க போறாங்கலாம் பா! ஒரு லட்சம் ரூபாய்க்கு! Maintenance பண்ண முடியலையாம் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது என்று சொன்ன எப்படி இருக்கும்? ஒரு லட்சம் ரூபாயா? வாங்கி வச்சுக்கலாமே… என்று ஒரு யோசனை வரும்ல. கிணற்றை காணவில்லை என்று சொல்லும்போதும், பேருந்தை விற்பனை செய்யும் போதும் வடிவேலு சொல்லும்போது, என்னடா, இப்படி எல்லாம் ஒரு காமெடி எடுத்து வச்சுருக்காங்களே? என்று தோணுச்சு. ஆனால் இன்று இந்த செய்தியை பார்க்கும் போது, கடந்த ஒரு வருடத்தில் நாம எப்படியெல்லாம் ஏமாந்து இருக்கோம்? ஏமாற்றப்பட்டிருக்கோம் போன்ற யோசனை உங்களுக்கு வரலாம். இந்த மனுஷன் எப்படி இவ்வளவு பேரை ஏமாத்திருப்பாங்க? சதுரங்க வேட்டை எல்லாம் இவர் கால் தூசுக்கு சமம் எனும் அளவிற்கு இவருடைய ஏமாற்று வேலைகள் என்பது இருக்கப்போகிறது.
பல திறமைகள் பெற்றவர் Arthur

இந்த ஒரு உண்மை சம்பவத்தில் நாம் பார்க்கக்கூடிய நபர் யார் என்று கேட்டீங்கன்னா? Arthur Furguson என்பவர் தான். இவர் ஒரு ஸ்காட்லாந்து நாட்டை சேர்ந்தவர். இங்கிலாந்தில் இருக்கிறார். இங்கிலாந்தில் 1923ல் வேலை வெட்டிக்கே போறது கிடையாது. மனுச அங்க அங்க சுத்திகிட்டு இருக்காரு. ஒரு Artist என்று சொல்றாங்க, நடிகர் என்று சொல்றாங்க, இல்ல அவருக்குள்ள ஏதாவது திறமை இருக்கா என்று 1923 வரை அவருக்கே தெரியாது. நம்மில் பலர் நமக்குள்ள என்ன திறமை இருக்கு என்று தெரியாதது போல அவருக்கும் தெரியல. அவரிடம் இருக்கும் மிகப்பெரிய திறமை என்னவென்றால் நல்லபடியாக வியாபாரம் செய்து விடுவார். யாரை வேண்டும் என்றாலும் சுலபமாக நம்பவைத்து விடுவார்.
Project Pegasus Explained – THE NEW GLOBAL WEAPON – Editorial from Author Logan

Trafalgar Square விற்றக்கதை

அவரின் பேச்சாற்றல் அவ்வளவு அபரிவிதமான இருந்துருக்கு. அது அவருக்கு தெரியாததால் சும்மா சுத்திட்டு இருந்துருக்கார். எந்த இடத்தில் சுத்திட்டு இருந்தார் என்றால் Trafalgar Square எனும் மிக முக்கியமான சுற்றுலா தலத்தில் தான். அங்கே நிறைய சுற்றுலா பயணிக்கள் வருவார்கள். அங்கிருக்கக்கூடிய நிறைய சுற்றுலா தலங்களுக்கு செல்வாங்க. குறிப்பாக அங்கே உயரமான ஒரு தூண் இருக்கிறது.

1804 – 1805, Trafalgar வச்சு நடக்கக்கூடிய ஒரு யுத்தத்தில் Nelson என்பவர் மிக முக்கியமாக போராடி உயிரை விட்டுவிடுகிறார். அவருக்காக அங்கே ஒரு தூண் ஏற்படவேண்டும் என்று சொல்லி 1843 ல் இருந்து நிறைய பிரைவேட்டில் இருக்கக்கூடிய நபர்கள் அவர்களுடைய டொனேஷன் எல்லாம் கொடுத்து ஒரு 200 ஆடி உயரத்தில் தூண் என்பது ஏற்படுத்தப்படுகிறது. அந்த தூணை சுற்றி சிங்கங்கள் அங்க அங்க உட்காந்துருக்க மாதிரியும், அதில் Water Fountain அப்படின்றதும் இருக்கும். இதை பார்த்த கொண்டிருந்த ஒரு அமெரிக்க சுற்றுலா பயணியிடம் Arthur க்கு ஒரு யோசனை வருகிறது.

நாம் சும்மா இருப்பதற்கு இதன் வரலாறை அந்த சுற்றுலா பயணியிடம் சொல்லலாமே என்று தோன்றுகிறது. அங்கு இருந்தவரிடம் தூணின் வரலாற்றை சொல்லி, ஆனால் என்ன செய்வது? இந்த தூணை விற்க போகிறார்கள் என்று சொல்கிறார். துணை விற்க போகிறார்களா? நம்ம முடியவில்லையே! என்ற அமெரிக்க சுற்றுலா பயணிக்கு ஒரு யோசனை வருகிறது. ஆனால் இவர் ஒரு நல்ல Sales person என்பதை பார்த்தோம். ஏனென்றால் இவருக்கு திடீரென்று பணம் தேவைப்பட்டிருக்கிறது.

பணத்தை எப்படி சம்பாரிக்கலாம். சுற்றுலா பயணிகளிடம் இந்தந்த விஷயங்கள் இதற்குதான் செய்யப்பட்டிருக்கு என்று சொன்னால் பணம் கிடைக்கும். ஆனால் extra வாக யார்க்கும் தெரியாத சில விஷயங்கள் சொன்ன கூடுதலாக பணம் கிடைக்கும் என்று சொல்லி விற்பனைக்கு இது இருக்கிறது என்று சொல்லிவிட்டார் Arthur. அதுவும் அந்த சுற்றுலா பயணி, விற்பனைக்கு தான் இது இருக்கா? எதற்காக விற்பனை செய்றாங்க? என்று கேட்டுவிட்டார். ஆனால் இப்படி சொல்லிவிட்டோமே என்று யோசிக்கவே இல்லை ஆர்தர். 1919 – முதல் உலக போர் உங்களுக்கு தெரியாதா? அந்த முதல் உலக போரினால், பல விதமான பிரச்சனைகள் காரணமாக England அரசாங்கத்துக்கு பெருத்த நஷ்டமாயிருக்கு. அவர்களால் இந்த மாதிரி சுற்றுலா தளங்களை பராமரிக்க முடியவில்லை. அதனால் இதை விற்க போறாங்க. ஆனால் Top Secret. இதை விற்பனை செய்வதற்கான அங்கீகாரம் எனக்கு இருக்கு என்று சொல்கிறார். உங்களுக்கு இருக்கா? அப்படினா கூடுதலா சில விசியங்கள் சொல்லுவிங்களா? என்று கேட்கிறார் அமெரிக்க சுற்றுலா பயணி. அவர் அதோட வரலாறு, எப்போது ஏற்படுத்தப்பட்டது போன்ற நிறைய விசியங்கள் சொல்லறாரு.

அறிவான ஒரு மனுஷன் சொல்லும்போது இந்த அமெரிக்கருக்கு ஒரே ஒரு விஷயம், இந்த இடத்தை மட்டும் நாம வாங்கி போட்டுட்டோம்னா செம்மையா இருக்கும்டா! என்று சொல்லி எத்தனை ரூபாய்? என்று கேட்கிறார். ஒரு 10,000 பவுண்ட் கேட்குறாங்க என்கிறார் Arthur. வெறும் 10,000 பவுண்ட் தானா? என்கிறார் அமெரிக்க சுற்றுலா பயணி. ஆமாங்க இதை செய்யும் போது 47,000 பவுண்ட் ஆச்சு. இப்போ நம்ம கணக்குப்படி பார்த்தால் 2,3 மில்லியன் அமெரிக்க டாலர் இல்லாட்டி பவுண்ட் விலை இருக்கும். நாங்க வெறும் 10,000 பவுண்ட்க்கு கொடுக்க போறோம் என்று சொன்னவுடன் அமெரிக்க சுற்றுலா பயணி கொஞ்சமா bargain பண்ணியிருக்காரு, 6,000 பவுண்ட்க்கு கிடைக்குமா பா? என்று. 6,000 பவுண்ட்க்கு நீங்க ஏன் கேட்குறீங்க? நாங்க இதை சாதாரண மனிதர்களுக்கு விற்கமாட்டோம் என்ற வேறொரு குண்டை தூக்கி போட்டுட்டாரு Arthur. சாதாரண மனிதனா!
எனக்கு பெரிய பெரிய வரலாறு எல்லாமே தெரியும் என்று சொல்லி ஆரமிச்சுட்டாரு, அவரின் வரலாறு, அவுங்க பணம் எப்படி சம்பாரிக்குறாங்க போன்ற details எல்லாம் Arthur கிட்ட சொல்லிட்டாரு. So, Arthur அவர்கிட்ட நில்லுங்க சார், நான் நிறைய பேர்கிட்ட contact பண்ண வேண்டியிருக்கு என்று கூறி பக்கத்தில் இருக்கும் STD பூத்துக்கு சென்று ஒரு 10 நபர்களுக்கு மேல கால் பண்ணி, சார், நான் எல்லார்கிட்டயும் பேசி முடிச்சுட்டேன். 6,000 பவுண்ட்க்கு அவுங்க ஒத்துகிட்டாங்க, Check கிடைச்சா மட்டும் தான் நாங்க சீக்கிரமா அந்த Document எல்லாம் தருவோம். அதுவும் ஒரு அமெரிக்கர் வாங்குகிறார் என்றால் ரொம்ப secret ஆக வைக்க சொல்லிருக்காங்க. காரணம் இங்கிலாந்து நாட்டிற்கு இது மிகப்பெரிய மனஉளைச்சலாக மாறிவிடும். ஏன்னா நாங்க கடனாலதான் இந்த மாதிரி தூண்களை எல்லாம் விற்கிறோம் என்று உலக நாடுகளுக்கு தெரிந்து விடக்கூடாது. So, யார்கிட்டயும் சொல்லிடாதீங்க என்று கூறுகிறார் Arthur.

எல்லா விஷியத்தையும் நம்பிட்டார், 6,000 பவுண்ட்க்கு செக்கும் எடுத்து கொடுத்துவிட்டார் அமெரிக்க சுற்றுலா பயணி. 1 மணி நேரம் ஆச்சு, 2,3 மணி நேரம் ஆச்சு. Arthur வரவே இல்லை. அமெரிக்க சுற்றுலா பயணிக்கு ஒரு Doubt, ஒரு வேலை இவன் பொய் சொல்லிருப்பானோ? கிட்ட இருக்க Police Station க்கு போன, நீ என்னடா பைத்தியக்காரன் மாதிரி பேசிட்டு இருக்க, இந்த தூணை எப்படிடா விற்கமுடியும் என்று கூறி அங்க ஒரு வழக்கை பதிவு பன்றாங்க. Arthur என்னும் ஒரே ஒரு பெயர் மட்டும் தான் இருக்கு. யார் இந்த Arthur என்பது தெரியவே தெரியாது. ஆனால் இந்த பெயரை அங்கிருக்கும் காவல்துறை அதிகாரிகள் எல்லாமே அடுத்தடுத்து பேச அராமிக்குறாங்க.
Big Ben மணிக்கூண்டு விற்றக்கதை

Big Ben என்ற மிகப்பெரிய மணிக்கூண்டு இருக்கு. அந்த மணிக்கூண்டை 1,000 பவுண்ட்க்கு நான் விற்பனை செய்கிறேன் என்று வேறொரு அமெரிக்க சுற்றுலாப்பயணிக்கு ஒருத்தர் விற்பனை செய்துள்ளார். அது மட்டும் தானா. Buckingham Palace எனும் அரண்மனையை வெறும் 2,000 பவுண்ட்க்கு விற்பனை செய்யப்படுவதாக சில நபர்களிடம், ஒரே இடத்தை 10, 15 தடவை விற்பனை செய்திருக்கார் Arthur. இந்த விற்பனை செய்த நபர்கள் எல்லாருமே Police Station ல complaint கொடுக்கவும் தான், யாருப்பா இந்த Arthur? என்று அவரை தேட அராமிக்குறாங்க. ஆனால் பெயரை தவிர எதுவும் தெரியாத காரணத்தால் தேடுதல் அப்படியே முடங்கி போனது.
ஈபிள் டவரையும் ஒரு கை பார்த்தார் Arthur

அடுத்ததாக பிரான்ஸ்க்கு செல்கிறார். அங்கே இருக்கும் ஈபிள் டவரை பார்த்தவுடன் அங்கேயும் ஒரு அமெரிக்கர் சிக்கினார். என்னப்பா ஈபிள் டவரை பார்த்துட்டு இருக்க, நாங்க இதை பழைய இரும்புக்கு போடா போகிறோம். உனக்கு வேண்டுமா? என்று கேட்கிறார். அமெரிக்கர், அய்யயோ! ஈபிள் டவரை பழைய இரும்புக்கு போட போறிங்களா? நான் ஒரு பழைய இரும்பு எல்லாம் விற்பனை செய்யும் ஒரு நபர் தான். எனக்கு Partner எல்லாம் இருக்காங்க. எத்தனை ரூபாய்க்கு என்று கேட்கிறார். ரொம்ப துட்சமான amount க்கு நாங்க விற்க போகிறோம். எத்தனை ரூபாய் தருவியோ அதனை ரூபாய்க்கு தந்துவிடுகிறோம் என்று சொல்லறாரு Arthur. இதெல்லாம் நம்பின உடனே அவரும் ஒரு 10,000 பவுண்ட் Arthur கிட்ட கொடுத்துருக்காரு.

வெள்ளை மாளிகையையே விற்றுவிட்டார் Arthur
இப்படி பல நேரங்களில் பல விதமான நினைவு சின்னங்களை மட்டுமே பல Tourist க்கு, எல்லாமே அமெரிக்கர்கள், அவர்களுக்கே விற்பனை செய்துள்ளார் Arthur. So, Arthur க்கு 1925 ல் ஒரு ஐடியா. என்னடா எப்போ பார்த்தாலும் அமெரிக்க tourist ஐயே நாம ஏமாத்திட்டு இருக்கோம், அமெரிக்காவிற்கே சென்றால் அங்க தான் நிறைய அமெரிக்கர்கள் இருப்பாங்கள்ல என்று கூறி அமெரிக்காவிற்கே வந்துவிட்டார் Arthur. வந்தவுடன் எதை விற்கலாம் என்று ரொம்ப பெரிய யோசனை. முதலில் அவர் அமெரிக்காவில் விற்றது என்ன தெரியுமா? வெள்ளை மாளிகை.

White House ங்க! நம்புங்க! அங்கிருக்கும் மிக பெரிய பண்ணை முதலாளியை பார்த்து வெள்ளை மாளிகையை விற்க போகிறோம், அதற்கான உத்தரவு எனக்கு தான் கிடைச்சிருக்கு. இப்படி நிறைய பொருட்களை விற்று கொடுக்கக்கூடிய ஒரு தலைமை பொறுப்பில் நான் இருக்கேன். Top Secret Mission. உங்களுக்கு வேணுமா? நீங்க வாங்கினீங்கனா உங்கள் பண்ணை எல்லாத்தையுமே நீங்க வெள்ளை மாளிகைக்கு மாத்திக்கலாம். அதிபர் எல்லாம் மிக பெரிய பிரச்சனையில் இருப்பதால் காலி பண்ண வேண்டும் என்று விரும்புறாங்க. நீங்க எடுத்துக்குறீங்களா? 99 வருஷ லீஸ் என்று சொல்லறாரு Arthur. உடனே நான் எடுத்துக்குறனே. அப்படினா ஏதாவது Advance கொடுக்க வேண்டுமா? என்று கேட்கும்போது, ஒரு வருடத்திற்கு 1 லட்சம் அமெரிக்க டாலர். அதை மட்டும் இப்ப அட்வான்ஸ் ஆக தந்துவிட்டிங்கனா 99 வருஷத்துக்கு White House உங்களுடையது என்று சொல்லி ஒரு லட்ச அமெரிக்க டாலரை வாங்கி தன் Bank Account க்கு மாத்திக்கிட்டார் Arthur.

கடைசி திருட்டு-அமெரிக்க சுதந்திர தேவி

Arthur கிட்ட நிறைய பணம் இருக்கு. இருக்கும் பணத்தில் நிறைய செலவு செய்து அமெரிக்க குடிமகனாக மாற வேண்டும் என்று பலவிதமான ஆசை. இந்த ஆசைக்கு மத்தியில் கடைசியாக ஒரே ஒரு தப்பு செய்யணும். எதையாவது ஒன்றை விற்றுவிட்டு நாம செட்டில் ஆய்டனும் என்று நினைக்கிறார். Arthur கொஞ்ச நேரமா பார்த்துட்டு இருந்தார் அங்கே இருக்கக்கூடிய அமெரிக்கா தேவி, சுதந்திர தேவி சிலை கிட்ட போறாரு. அங்கே ஒரு ஆஸ்திரேலிய busniess man நிற்கிறார். இவரோட கண்ணோட்டத்தில் யாரிடம் பணம் இருக்கு, இல்ல. நம்புவார்களா?, நம்பமாட்டாங்களா?, இந்த மனிதர்களை எப்படி ஏமாற்றுவது? அவருடைய பிறப்பில் இருந்தது என்று சொல்லலாம். So, ஆஸ்திரேலிய Business Man ஐ பார்த்தவுடன் இவர்கிட்ட நிறைய பணம் இருக்கு என்பது புரிந்துவிட்டது.

நேராக சென்று ஆஸ்திரேலிய Business man கிட்ட இந்த துறைமுகத்தை பார்த்திங்களா சார் என்று கேட்கிறார். அதற்கு அவர் ஆமா sir, ரொம்ப நாளா பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்று சொல்லறாரு. இத நாங்க expand பண்ண போறோம், அந்த project எனக்கு தான் கிடைச்சிருக்கு, ஆனால் அதில் ஒரு சின்ன சிக்கல் இருக்கு sir என்று சொல்லறாரு Arthur. என்னவென்று கேட்கும் போது, அங்கே சுதந்திர தேவி சிலையை யாராவது எடுத்துட்டு போய்ட்டாங்கன்னா, நாங்க எங்க துறைமுகத்தை expand பண்ணிக்குவோம், ஆனா யாருமே கிடைக்க மாட்டிக்குறாங்க, ரொம்ப துட்சமான விலைக்கு தான் கொடுக்க போறோம் என்று சொல்லறாரு. ஆஸ்திரேலிய Business man க்கு ஒரு ஐடியா, இதை நாம வாங்கி அப்படியே பெயர்த்தெடுத்து வேறு பக்கம் கொண்டு போய்ட்டோம் என்றால் நிச்சியமாக நல்லா கல்லா கட்டும் என்று யோசிக்கிறார். எவளோ ரூபாய் என்று கேட்டதிற்கு 1 லட்ச அமெரிக்க டாலர் என்கிறார் Arthur.

ஆஸ்திரேலிய Business man க்கு ஆசை வந்துவிட்டது. 2 தினங்கள் கொடுத்தீங்கனா, நான் நீங்க கேட்கின்ற பணத்தை தரேன் என்று கூறி பணத்திற்காக பாடப்படுறாரு மனுஷன். 2 நாள் கழித்து ஆஸ்திரேலிய Business man க்கு போன் பன்றாரு Arthur. பணம் ரெடி ஆகவில்லை அதனால் இன்னும் இரண்டு தினங்கள் டைம் கேட்கிறார். அதை கேட்டவுடன் Arthur க்கு பொறுக்கவில்லை. ஏனென்றால் கடைசி business இப்படி சொதப்பிட்டு இருக்கே என்று சொல்லி திரும்ப திரும்ப போன் பன்றாரு. திரும்ப திரும்ப போன் வரவும் ஆஸ்திரேலிய Business man க்கு ஒரு யோசனை. ரொம்ப Secret ஆகா இருக்கட்டும்னு சொல்றான், பணம் எப்போ வரும் என்று தொல்லை பண்ணிட்டே இருக்கான். உண்மையாகவே இவன் Government Agent தானா? எதுக்கும் police station க்கு சென்று நாம விசாரிச்சரலாமே என்று செல்கிறார். இதனை நாள் செஞ்ச தப்பை அவர் ஒரு evidence கூட இல்லாம செஞ்சுட்டார்.
மமதை காட்டிக்கொடுத்தது
ஆனால் கடைசி தப்பு என்பதால் அவருக்கு அந்த மமதை என்பது வந்துவிட்டது. எந்த தப்பு செய்தாலும் யாராலயும் என்னை பிடிக்க முடியாது என்ற கெத்தான மனநிலையில் வந்துவிட்டார். அதன் காரணமாக அந்த ஆஸ்திரேலிய Business man கூட சேர்ந்து போட்டோ எல்லாம் எடுத்துகிட்டாரு.

அந்த போட்டோவை எடுத்துக்கொண்டு தான் ஆஸ்திரேலிய Business man Police Station க்கு போகிறார். அப்படி போகும் போது இவர் பெயர் என்னவென்று சொன்னார் என்று கேட்கிறாங்க போலீஸ். Arthur என்று சொன்னவுடன், இவன் தான் Arthur ஆ! என்று நேராக information இங்க இருக்க Police officers, France, UK என்று எல்லா இடத்துக்கும் பகிரப்படுகிறது. Arthur ஐ கண்டுபிடித்து விட்டோம் வாங்கப்பா. இங்கு ஒரு ஆஸ்திரேலிய Business man கிட்ட இப்படி ஒரு business பண்ணி வச்சிருக்காரு என்று சொல்றாங்க. 2 தினங்களில் பணம் ரெடி ஆகும்னு சொன்னதால் ஒரு பார்க்கில் வந்து பணத்தை வாங்கிக்கோங்க என்று சொல்லுங்கள். நாம எல்லாரும் அங்கு சென்று அவரை பிடிக்கவேண்டும் என்று சொல்லி Arthur இன் வண்டவாளங்கள் எல்லாமே தண்டவாளங்கள் ஏற்ற படுகிறது. பார்க்கில் Arthur காத்துக் கொண்டிருக்கிறார். ஆஸ்திரேலிய Business man வராரு. பின்னாடி 2 பேர் வராங்க. Arthur க்கு பார்த்தவுடனே தெரிந்துவிட்டது,

போலீஸ் அதிகாரிகள் தான், நம்மளை புடிச்சுருவாங்க. Arthur எதுவுமே செய்யவில்லை. கெத்தாக அந்த இடத்துலயே நின்னாரு. என்ன சார்! இவளோ லேட்டா பிடிக்குறிங்க என்று சொல்லறாரு. போலீசார் அவரை arrest பன்றாங்க. Police Officers னால எதுமே செய்ய முடியல Arthur ஐ. அடிக்கவில்லை, எதுமே செய்யல. அவர் ஒத்துக்கொண்டார். ஆமா நான் தான் இவரைத்தான், இவரை மட்டும் தான் ஏமாற்ற நினைத்தேன், மாட்டிக்கொண்டேன் என்று சொல்லறாரு. இவ்வளவு பெரிய விசியத்தை செய்த Arthur க்கு கடுங்காவல் தண்டனை, தூக்கு தண்டனை ஏதாவது கிடைத்ததா என்றால், வெறும் 5 வருடங்கள் சாதாரண சிறை தண்டனை. எதற்காக என்றால் இவர் தான் இவர் கிட்ட பணம் வாங்கினார் என்பதற்கான எந்த எவிடென்ஸ் சப்மிட் பண்ண முடியவில்லை. கொஞ்சம் கொஞ்சம் எவிடென்ஸ் ஏமாற்றிவிட்டார் என்று மட்டும் தான் இருக்கே தவிர அந்த பணம் என்ன ஆச்சு? யார்கிட்ட இருக்கு அந்த பணம்? எப்படி வந்தது என்பதற்கான full details யாராலயும் குடுக்க முடியாத காரணத்தினால் 5 வருடம் மட்டும் சிறை தண்டனை அனுபவிச்சு ரிலீஸ் பன்னிறாங்க. அதாவது 1935 ல் வெளியே வருகிறார். வந்தவுடன், அப்பவே நல்ல வயசாயிடுச்சு, அவரிடம் இருக்கும் பணத்தை வைத்து அமெரிக்காவில் பெரிய பங்களா ஒன்று வாங்குகிறார். பெரிய பங்களா வாங்கி நிம்மதியாக ஒரு வாழ்கை 3 வருடங்கள். 1938 ல் மரணம் அடைகிறார். இயற்கையாகத்தான் மரணம் அடைகிறார்.
பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்
இந்த ஒரு விசியத்தை நன்றாக கவனிக்கும் போது இங்கு யார் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள்? எப்படிப்பட்ட மனிதர்கள் எல்லாம் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள்? இவர் செய்த குற்றம் மட்டும், கடைசியாக செய்த குற்றத்தை மட்டும் நீங்கள் கவனித்தால் போதும். எப்பவுமே அமெரிக்கர்களை மட்டும் தான் ஏமாற்றும் இவர் கடைசி தவறு என்பதால் யாரை வேண்டுமானாலும் ஏமாற்றலாம் என்ற மனநிலைக்கு வந்துவிடுகிறார். அதன் காரணமாக ஆஸ்திரேலிய Business Man ஐ தேர்ந்தெடுத்தார். அவர் செய்த முதல் தப்பு. இரண்டாவது தப்பு, Photos எதுமே எடுத்துக்கொள்ளதா Arthur அவர்கள் கடைசியாக இவர் முன்னாடி வந்து எடுத்த போட்டோ அடுத்த தவறாக கருதப்படுகிறது. மூன்றாவது மூன்றாவது தவறு 2 தினங்களில் பணம் கிடைக்கவில்லை என்ற பின்னும் மறுபடியும் மறுபடியும் phone பண்ணி, eagerness, அந்த பணத்தின் மேல் இருந்த ஆசை, அது அந்த ஆஸ்திரேலிய business man க்கு சந்தேகத்தை வரவழைத்தது. இப்படி பல நேரங்களிலும் எப்படிப்பட்ட திருடன் என்றாலும் எப்பாவது ஒரு நாள் சிக்குவான் என்பதற்கு எடுத்துக்காட்டாக மிக முக்கியமான நபராக இருக்கிறார் Arthur Furguson என்னும் இவர்.

நான் ரொம்ப பெரிய அளவில் ஏமாற்றப்பட்டிருக்கிறேன் என்ற நபர் நீங்களாக்க இருந்தால், Arthur Furguson மாதிரி உங்களை யார் ஏமாற்றினார்கள் என்னும் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள். இனி ஏமாற்றம், ஏமாற்று பேர்விழி எனும் பெயர் கேட்டவுடன் யார் நியாபகத்துக்கு வருவார்? Arthur Furguson அவர்கள் தான். இந்த பதிவை பற்றிய உங்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
நல்லதை பகிர்வோம்!
நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
நல்லதை பகிர்வோம்! நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!உங்கள் லோகன்.
Also, Read: Afghanistan war யாருக்கு லாபம்? நஷ்டம்?