இந்த வரலாறு தெரிந்தால் படித்த வரலாறு மாறும் – Hidended Indian Independence History – Loganspace Tamil Editorial

Facebook இல்லை, Twitter கிடையாது, எந்த விதமான Communication உம் அதிகளவில் இல்லை. நான் சொல்றது 1946. இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைப்பதற்கு ஒரு வருடத்திற்கு முன்னாடி. ஆனா இந்தியர்கள் நிறைய பேர் திடீர் என்று ஒரு போராட்டத்தில் குதிக்குறாங்க. கலகம் என்ற விஷியம் புரட்சியாக மாறிவிடுமோ? என்று British காரங்க யோசிக்குறாங்க. என்ன, ஏது என்று யோசிப்பதற்கு முன்னாடி பிரிட்டிஷ்க்கு ஒரே ஒரு information வெளில வருது, இப்படியே போனால் நம் கையை விட்டு இந்தியா மாறிவிடும். விடுதலை அடைந்துவிடும். அவுங்க சொல்ற விஷியம் என்ன?

உண்மை வரலாறு மறைக்கப்பட்டிருக்கிறது

போராட்டக்காரர்கள் முன் வைக்கும் ஒரு விஷியம் என்னவென்றால், எங்களின் தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களை விடுதலை செய். உடனே எங்கள் நாட்டை விட்டு காலி பண்ணுங்க, இப்படினு சொல்ற சாதாரண இந்தியா வீரர்கள், இந்தியர்கள்.

இப்படி போராடினார்கள் எனும் வரலாறே நம்முடைய புத்தகத்தில் இருந்து மறைக்கப்பட்டிருக்கிறது. 1946 ஆம் ஆண்டு Royal Indian Navy எனும் கப்பற்படை மிக பெரிய போராட்டத்தில் ஈடுபடறாங்க. இதுக்கு முன்னாடி நடந்தவை என்ன. முதல் உலக போர், இரண்டாம் உலக போர் இதில் இந்தியாவிற்கு எந்த சம்மந்தமும் இல்லை என்று சொன்ன History Book ஐ இன்றே தூக்கி தூரப்போடுங்க.

முதல் உலக போரில் 76 ஆயிரம் இந்தியர்கள் இறந்தார்கள், கொல்லப்பட்டார்கள். இரண்டாவது உலக போரில் 67 ஆயிரம் – 90 ஆயிரம் இந்தியர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று சொல்றாங்க. 25 லட்ச இந்திய வீரர்கள் அவர்களின் உயிரை பணயம் வைத்தார்கள் என்பது வரலாறாக இருக்கிறது. வெறும் 25 லட்சம் மட்டும் தானா? மீதம் இருக்கும் கணக்குகள் என்ன? இன்றும் நமக்கு உயிர் பிச்சை போட்ட பல நாட்டு வீரர்கள் இருக்கிறார்கள். அவர்களை பற்றிய ஒரு வரலாறு.
indian freedom fighters file image – 3- 1946
இந்தியாவிற்கு சுதந்திரம் எப்படி கிடைத்தது?
கண்களை மூடிக்கொண்டு நிறைய பேர் சொல்லும் பதில், அகிம்சை வழியில் போராடியதால் கிடைத்தது என்று. நாமும் இதை தான் நம்பி கொண்டிருக்கிறோம் என்பது ஒரு விஷியம்.

அகிம்சை வழியில் போராடியது ஒரு காரணம். அதுவும் ஒரு காரணம், ஆனால் அது மட்டும்தான் காரணம் என்று சொல்லாதீர்கள். எத்தனையோ வீரர்களின் உயிர், அந்த தியாகம். அவற்றை நாம் கொச்சைப்படுத்துகிறோம் என்று சொல்லலாம். வெறும் அகிம்சை வழியில் தான் நாம போராடினோம் என்று சொல்லும் அந்த வார்த்தை.

இரண்டாம் உலக போர் விதிகள்

1939 – 1945, இரண்டாவது உலக போர் நடைபெறுகிறது. இதில் இந்தியாவிற்கு பங்கில்லை என்று சொன்னார்கள், முதல் உலக யுத்தத்திலும் பங்கில்லை என்று சொல்றாங்க நிறைய வரலாற்று ஆய்வாளர்கள், ஆசிரியர்கள் (அ) நமது பாடப்புத்தகம். ஆனால் அதே இந்தியா இரண்டாவது உலக யுத்தத்தில் போராடியதா? என்று கேட்டால், ஆம் போராடியது என்று சொல்கிறது வரலாறு. யாருக்காக போராடியது? என்றால் France, UK அதாவது Great Britain எனும் British அரசாங்கம், America இந்த நாடுகளுக்காக இந்தியா போராடியது என்று சொல்றாங்க.

இந்தியா தன்னிச்சையான யுத்தத்தில் ஈடுபட்டதா என்று கேட்டால், கிடையவே கிடையாது. அந்த நேரத்தில் நம்மளை ஆட்சி செய்திருப்பவர்கள் யார்? British என்ற பிரிட்டன் (அ) England, என்ற நாட்டை சேர்ந்த ராஜ குடும்பம் தான் நம்மை ஆட்சி செய்தது. அப்போது நீ யுத்தத்தில் பங்கு பெற வேண்டும் என்ற கட்டளை Indirect ஆக இந்தியர்களுக்கு விதிக்கப்படுகிறது.

கட்டாயத்தில் இராணுவ ஆள் சேர்ப்பு
1939 ல் வெறும் 2 லட்சம் இந்திய இராணுவ வீரர்கள் தான் இருக்காங்க. ஆனால் 1940 ல் 10 லட்சம் இராணுவ வீரர்களாக எண்ணிக்கை உயர்கிறது. அது எப்படி திடிரென்று 8 லட்சம் இராணுவ வீரர்கள் இந்திய இராணுவத்தில் இணைந்தார்கள்? என்ற கேள்வி இருக்கலாம்.

இந்த ஒரு வரலாறு நம்மிடையே சொல்லப்படாமலே இருக்கிறது. நிறைய வீட்டிற்கு சென்று British அதிகாரிகள் “நீ நம் இராணுவத்தில் ஈடுபட்டு வரவேண்டும், அதற்கான உத்தரவில் கையெழுத்து போடு” என்று சொல்லுவார்களாம். ஒருவேளை அவர்கள் கையெழுத்து போடவில்லை என்றால் அவர்களின் நீர்ப்பாசன வசதி தடை செய்யப்படும். அவர்களுக்கான பலவிதமான வசதிகள், வரிகள் கூட்டப்படும். ஆணாக இருந்தால் அவனுடைய உடை அப்படியே அகற்றப்பட்டு குடும்பத்தார் முன்னிலையில் நிறுத்தப்படுவார்கள். முட்கள் நிறைந்த காட்டில் நடக்க விடுவார்களாம். எப்போது இராணுவத்தில் சேர சம்மதம் என்று ஒப்புக்கொள்கிறானோ அது வரை ஒவ்வொரு இந்தியனும் Torture செய்யப்பட்டான் என்பது வேறொரு வரலாறாக இருக்கிறது.

கவசமாக இந்திய வீரர்கள்

இரண்டாம் உலக போரில் British (ம) நட்பு நாடுகளை சேர்ந்த வீரர்கள் பயந்து புறமுதுகை காண்பிக்க ஆரம்பிக்கிறார்கள். ஜப்பான் (ம) ஹிட்லரை எதிர்த்து அவர்களால் போரிட முடியவில்லை. அப்போது தான் British அரசாங்கத்திற்கு ஒரு யோசனை வருகிறது. ஏன் இந்தியர்களை ஒரு கவசமாக பயன்படுத்தக்கூடாது? இந்தியர்களுக்கு ஒன்றுமே இல்லாத மாதிரி ஆக்கிவிட்டார்கள். அங்கே பணம் கிடையாது, வறுமை, ஒரு செயற்கையான வறட்சி என்பது ஏற்படுத்தப்பட்டுள்ளது.

1943 ல் நடந்த மிகப்பெரிய வறட்சிக்கு காரணமே 1940 இரண்டாம் உலக யுத்தம் என்று சொன்னால் நம்புவீர்களா? நம்பித்தான் ஆகவேண்டும். நிறைய வீரர்கள், இந்த British அரசாங்கத்தால் பிரிட்டன் இந்திய இராணுவ படைக்கு சேர்க்கப்படுகிறார்கள். அங்கே பிரிட்டிஷின் உண்மையான இராணுவ வீரர்கள் புறமுதுகிட்டு ஓடுவதற்கு காரணமாக சொல்லபட்டது என்ன தெரியுமா? British இராணுவ வீரர்களின் வீடுகள் ரொம்ப அழகானது. அவர்களுக்கு என்று தனியாக குடும்பம் இருக்கு. So, இந்த யுத்தத்தில் நாம கொல்லப்பட்டு விடுவோம். எனவே ஜெர்மனியை எதிர்த்து போராடக்கூடாது என்று சொல்லி ஓடினார்களாம். ஆனா இந்தியர்கள் என்று சொல்லும்போதே, அவர்களின் வறுமையான ஒரு நிலைமை, அவர்கள் வீட்டிற்கு ஏதாவது நம்ம கொடுக்க முடியுமா என்று இந்தியர்கள் கொஞ்சம் கொஞ்சமாக யோசிக்கிறார்கள். அந்த அளவுக்கு நம் யோசனையை திசை திருப்பி விட்டுவிட்டார்கள் British காரர்கள். நம்ம இந்திய வீரர்களை கொண்டு போய் நிறுத்தினால், இனி போறதுக்கு ஒன்றுமே கிடையாது, இழப்பதற்கு எதுவுமே கிடையாது, உயிரை தவிர என்று சொல்லி அவன் கண்டிப்பா போராடுவான், அவனை ஒரு கேடயமாக பயன்படுத்தி இந்த யுத்தத்தில் நாம ஜெயித்துவிடலாம் என்று மிக முக்கியமான யோசனைக்கு வருகிறார்கள்.

விடுதலைக்காக உயிரை தரவும் அஞ்சாதவர்கள் இந்தியர்கள்

இரண்டாவது உலக யுத்தம் வருகிறது. 25 லட்சம் இந்திய வீரர்கள் எனக்கு தந்து யுத்தத்தில் எங்க கூட நின்றால் யுத்தம் முடிந்தவுடன் விடுதலையை தருகிறேன் என்று சொல்றாங்க. இந்த Deal நல்லா தான் இருக்கு. கோடிக்கணக்கான இந்திய மக்களுக்கு விடுதலை கிடைக்கும் என்றால் நான் என் உயிரை கொடுக்க தயாராக இருக்கின்றேன் என்று சொல்லி கொஞ்சம் நபர் தன்னிச்சையாக அங்கே செல்கிறார்கள். இப்படி 25 லட்சம் நபர்கள் இந்த British அரசாங்கத்தால் பல்வேறு நிலைகளில் நிறுத்த படுகிறார்கள். இத்தாலியை எதிர்த்து, ஜெர்மனியை எதிர்த்து, Japan ஐ எதிர்த்து நம் இந்திய வீரர்கள் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.

இந்த போராட்டத்தில் கிட்டத்தட்ட 60,000 – 80,000 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டிருக்கலாம். 80,000 துக்கும் மேற்பட்ட இந்திய வீரர்களுக்கு காயங்கள் ஏற்பட்டிருக்கலாம். 12,000 க்கும் மேற்பட்ட வீரர்கள் காணவில்லை என்ற ரிப்போர்ட் மட்டுமே வந்திருக்கிறது.
மறைக்கப்பட்ட வரலாறு! மறுக்கப்பட்ட உரிமை!
ஆனால் இந்த வரலாறை பல பாடப் புத்தகங்களிலும், உலகத்தில் நீங்கள் எந்த பாடப் புத்தகத்தை எடுத்தாலும், British அவர்களின் Subject ஆக இருக்கக்கூடிய எந்த பாடப்புத்தகத்தை எடுத்தாலும் இந்த வரலாறு இருக்காது. ஏனென்றால் இந்தியர்களை கேடயமாக பயன்படுத்தி தான் நாங்கள் வெற்றி பெற்றோம் என்பதை உலக நாடுகள் தெரிந்து கொண்டது என்றால் அது British என்ற நாட்டிற்கே அவமானம். அதுமட்டுமின்றி போர் வீரர்களை கொண்டுபோய்ட்டீங்க, எங்களுக்கான பணத்தை நீங்கள் தானே தர வேண்டும் என்று கோடிக்கணக்கான பணம் வசூலிக்கப்படுகிறது.

1940 – 42, இந்த காலகட்டத்தில் மட்டும் வரி என்பது 3 மடங்கு, 4 மடங்கு என்று அதிகரிக்கிறது. இந்த வரி அனைத்தும் இந்தியர்கள் கட்டவேண்டும். எதற்காக இந்த வரி என்றால் British காரர்கள் அங்கே போரிட்டு கொண்டிருக்கிறார்கள், அதற்கான பணம் இங்கிருந்து சென்று கொண்டிருக்கிறது. இப்படி இந்தியாவிற்கு மட்டும் British அரசாங்கம் தரவேண்டிய தொகை 2 பில்லியன் அமெரிக்க டாலர். இன்றைய கணக்குப்படி பார்த்தால் சுமார் 7 – 8 ;லட்சம் கோடி. கடைசி தருணத்தில் இந்தியாவிடம் இருந்து கொள்ளையடித்து போனது என்று சொல்லலாம். இந்த பணத்தை நாங்க தந்துவிடுவோம், நீங்க வீரர்களையும் அனுப்பி வைங்க, நாம ஜெயித்த பிறகு பணமும் திருப்பி தரப்படும், விடுதலையும் தரப்படும். இது தான் அவர்கள் கூறிய நம்பிக்கை வார்த்தைகள்.

வீரர்கள் சென்றுவிட்டார்கள். 1945, இரண்டாம் உலக யுத்தம் ஜெர்மனி முடிந்துவிட்டது. ஹிட்லரை அழித்து விட்டோம். இந்தியர்கள் கொஞ்சம் கொஞ்சமாக வராங்க. இந்தோனேசியாவில் கொஞ்சம் வீரர்கள் பிடித்து வைக்கப்படுகிறார்கள். அவர்களை இந்தியாவிற்கு கொண்டு வாருங்கள் என்று அவர்களின் குடும்ப மக்கள் கேட்டு வருகின்றனர். கொண்டுவருவோம் பொறுமையாக இருங்க என்று மட்டுமே சொல்றாங்க. உங்களுக்காக தானப்பா போராட வந்தாங்க? நீங்க கண்டுகொள்ளாமல் இருக்கீங்களே என்ற கூக்குரல் எழுகிறது. இதை கேட்க யாருமே கிடையாது. இந்த தருணத்தில் சுபாஷ் சந்திர போஸ் அவர்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்து வைக்கப்படுகிறார்.
வெள்ளையனே வெளியேறு!

1942 ல் நடைபெற்ற Quit India Movement, வெள்ளையனே வெளியேறு! என்ற வீரமுழக்கம் பல இடங்களிலும் பேசும் பொருளாக மாறுகிறது. 1945 ல் இரண்டாம் உலக யுத்தத்தில் ஜெயிச்சுட்டீங்கள, எங்கள் விடுதலையை தாருங்கள் என்று சொல்லி கேட்கும் போது, உங்களுக்கான விடுதலையை தந்துவிடுகிறோம்.

ஆனால் Trade (ம) Defense இது எங்க பக்கம் இருக்கும் என்று சொல்றாங்க British. வர்த்தகம் (ம) பாதுகாப்பு உங்க பக்கம் இருந்தால் நாங்க எப்படி எங்கள் சுதந்திர காற்றை சுவாசிக்க முடியும்?, எங்கள் இயற்கை வளங்களை அனைத்தும் நீங்க சுரண்டிட்டு போயிட்டீங்க. இன்னுமா சுரண்ட பார்க்குறீங்க? என்று எதிர்ப்பு தெரிவிக்குறாங்க இந்தியர்கள்.

ஒரு கட்டத்தில் இந்தியாவின் கப்பல் படை என்பது Royal Indian Navy ஆக அறியப்படுகிறது. இந்த RIN என்ற கப்பற்படையில் நிறைய இந்தியர்கள் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது அங்கே ஒரு வீரர் V. C. தத் என்பவர் HNIS தல்வார் என்ற கப்பலில் ஒரு வார்த்தையை எழுதுகிறார். வெள்ளையனே வெளியேறு! Quit India என்ற வார்த்தை தான்.

இந்த வார்த்தையை பார்த்த British அதிகாரிகள் கோவமாக சில கேள்விகள் கேட்கின்றனர். ஏனென்றால் அது வரைக்கும் அந்த இராணுவத்தில் (அ) கப்பற்படையில் இருக்கக்கூடிய இந்தியர்களை மதிக்காத இந்த British காரர்கள், “ இதை யார் எழுதியது டா அடிமைகளா? நீங்கள் அடிமைகளாக பிறக்கப்பட்டவர்கள் டா, உங்கள் தந்தையிலிருந்து அனைவரும் எங்கள் அடிமையடா” போன்ற வார்த்தைகளை உதிர்கிறார்கள்.

அது வரையிலும் சாப்பாடு சரியில்லை, சரியான பராமரிப்பு இல்லை என்று சொன்ன இந்திய வீரர்களுக்கு உடம்புக்குள் கோபம் எரிமலையாக கிளம்புகிறது. நீங்க என்ன சொல்றது? நாங்க இந்த கப்பலை தூக்கிட்டு போறோம்டா என்று HNIS தல்வார் கப்பலை கடலுக்குள் கொண்டு செல்கிறார்கள் வெறும் 1100 இந்தியர்கள். அப்போது அவர்களிடம் Wireless Machine எல்லாமே இருக்கு. உடனே கொஞ்சம் கப்பலுக்கு Information கொடுக்குறாங்க. நாங்க இப்படி கப்பலை கொண்டு வந்துவிட்டோம். நமக்கான உரிமை மறுக்கப்படுகிறது. நீங்க என்ன செய்யப்போறீங்க? என்ற Information தான்.

அது கல்கத்தா, மும்பை, சென்னை என்று எல்லா இடத்திற்கும் பரவுகிறது. கிட்டத்தட்ட 10,000 – 30,000 கடற்படை வீரர்கள் அங்கு கிடைக்கும் கப்பல்கள் அனைத்தையும் கொண்டு நாடுகடலுக்கு செல்கிறார்கள். மிகப்பெரிய அளவிற்கு British இராணுவத்திற்கு பயத்தை ஏற்படுத்துகிறது. இந்த மாதிரி கப்பலில் நிறைய British காரர்களும் இருந்தாங்க. அப்போது British காரர்களிடம் ஒரு கேள்வி கேட்கப்படுகிறது. “ எங்கள் உரிமைக்காக நாங்கள் போராடுறோம், எங்களுடன் நிற்கின்றாயா? (அ) இல்லை இதை எதிர்கிறாயா? என்று. நான் எதிர்க்கிறேன், British காரர்களுடன் தான் இருப்பேன் என்று கூறினால் நடுக்கடலில் வீசப்படுவான், வீசப்பட்டான்.
புரட்சி பொங்கியது!

இப்படி பல பிரிட்டிஷர்களை இந்தியர்கள் “அப்படியே திரும்ப ஓடிவிடு, இது எங்களுக்கான புரட்சி” என்று சொல்லி கெத்தாக நின்றார்கள். இவை அனைத்தையும் பார்த்து வெறும் 5 தினங்களில் எல்லா இடத்துக்கும் இந்த செய்திகள் பரவி பல விதமான புரட்சியை ஏற்படுத்துகிறது. அரண்டு போனார்கள் பிரிட்டிஷ்காரர்கள். “என்னடா! இப்படி எல்லாம் செய்றீங்க. இப்படி பண்ண நாங்க எப்படி டா உங்களை அடிமைப்படுத்துவது”. என்ற கேள்வி நிற்கிறது.
அடுத்ததாக அவர்கள் கேட்கின்ற சமாதான உடன்படுக்கையில் உங்களுக்கு என்னதான் வேண்டும்?, அதில் முதல் கோரிக்கையாக வைக்கப்படுவது நேதாஜி சுபாஷ் சந்திர போஸை விடுதலை செய்யுங்கள், எங்களுக்கான உரிமையை தாருங்கள், எங்களுக்கான கப்பற்படையில் நல்ல சாப்பாடு தாங்க, போன்ற பல உரிமைகள் அங்கே கோரப்படுகிறது. இதில் வேதனையான விஷயம், 1947ல் நமக்கு விடுதலை கிடைக்கிறது.

அதிலிருந்து ஒரு வருடத்திற்கு முன்பு, British அரசாங்கம் நம் நாட்டை விட்டு ஓடுவதற்கு அந்த சவப்பெட்டியில் அறைஞ்ச கடைசி ஆணி என்பது இந்த ஒரு போராட்டம் தான். இந்த போராட்டத்தில் எத்தனை இந்திய வீரர்கள், கடற்படை வீரர்கள் இருந்தார்கள். அதனை வீரர்களுக்கும் Court தண்டனை கொடுக்கிறது. பல வீரர்களும் சுதந்திரம் அடைந்த இந்தியாவின் கப்பற்படையில் சேரக்கூடாது என்ற தடைகள் விதிக்கப்படுகிறது.
வனத்தை அழித்து வளங்களை திருடியது பிரிட்டிஷ்
நம் வரலாறு எந்த அளவுக்கு மாற்றப்பட்டிருக்கிறது என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ளுங்கள். முதல் (ம) இரண்டாம் உலக யுத்தத்தில் நம்முடைய பல காட்டு பகுதிகள் அழிக்கப்படுகின்றது.

வனம் என்பதை அழித்து தான் பிரிட்டிஷ்க்கு தேவையான கப்பல் இங்கிருந்து ஆயுதங்களை ஏற்றுமதி செய்கின்றது. கிட்டத்தட்ட 14 லட்சம் இந்தியர்கள் 24 மணி நேரமும் வேலை செய்தார்கள். British (அ) America போன்ற நாடுகளுக்கு தேவையான ஆயுதங்களை உற்பத்தி செய்வதற்காக இரவு பகலாக வேலை செய்கிறார்கள்.

கிட்டத்தட்ட 19 கோடி டன் நிலக்கரி என்பது British அரசாங்கத்தால் கொண்டு செல்லப்படுகிறது. அதே மாதிரி 60 லட்சம் டன் இரும்பு தாது என்பது இந்தியாவில் இருந்து பல நாடுகளுக்கு, குறிப்பா, Britain சார்ந்த நாடுகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

நம்முடைய பருத்தி, ஒரு வருடத்திற்கு எவ்வளவு உற்பத்தி செய்கின்றோமோ, அதில் 25 – 40% பருத்தி அங்கே கொண்டு செல்லப்படுகிறது.

வீரம், ஈரம் இருந்தால் வரலாறை புரட்டிப்பார்!
1942 – 43, இந்த காலகட்டத்தில் நம்முடைய விலை பொருட்கள் அனைத்துமே வேறு நாடுகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதன் காரணமாக தான் இந்தியாவில் வறட்சி என்பது ஏற்படுகிறது, பல லட்சம் பேர் உயிரிழந்தார்கள் என்கிற வரலாறு இங்கே இந்தியர்களுக்கு தெரிய வேண்டும்.

நாட்டை பிரித்து விடலாமா? மாநிலத்தை பிரித்து விடலாமா? என்று பல நபர்கள் எங்கே சண்டை போட்டு கொண்டிருக்கும்போது, பல உயிர்களை காவு வாங்கித்தான் நாடு, மாநிலம் ஒன்றாக இருக்கின்றது என்ற மிக முக்கியமான வரலாறை நாம் திரும்பி பார்க்க மறந்துவிடுகிறோம். இன்னும் நிறைய விடுதலை சார்ந்த பதிவுகள் இருக்கு என்பதை பார்த்துவிட்டு கொஞ்சமாவது நெஞ்சில் வீரம், ஈரம் எல்லாம் இருந்தது என்றால் இந்த வரலாறை தெரிந்து கொண்டு அடுத்ததாக என்ன முடிவு எடுக்கணுமோ எடுத்துக்கொள்ளுங்கள்.
ஜெய்ஹிந்த்!
நல்லதை பகிர்வோம்!
நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!