முதல் வேர்ட்பிரஸ் blog தொடங்கிருக்கிறீர்கள் என்றால், கண்டிப்பாக சில plugins இன்ஸ்டால் செய்வது அவசியம்.

உங்கள் தளத்தை மேம்படுத்தவும், எளிதில் கூகிளில் நல்ல ரேங்க் ஆகவும், பக்கத்தை ஓபன் செய்ய ஆகும் நேரத்தை அதிகரிக்கவும், உங்களின் பார்வையாளர்கள் அவர்களுக்கு பிடித்துப்போன பக்கங்களை ( ஆர்டிகிள்ஸ்) சமூக வலை தளத்தினில் ஷேர் செய்யவும், இன்னும் என்ற செயல்பாடுகளுக்கு இந்த plugins மிக உபயோகமாக இருக்கும்.

அவை என்னென்ன என்று கீழே பாப்போம்.

அவசியம் install செய்யவேண்டிய plugins

 1. Yoast SEO
 2. Google Sitemaps
 3. Jetpack
 4. ShareThis
 5. W3Total Cache
 6. AMP WP
 7. Thirsty Affiliate
 8. Shortcodes
 9. QuickAdsense

இந்த லிஸ்டில் முதல் 5 அவசியம் இன்ஸ்டால் செய்வது நல்லது. மற்ற மூன்றும் உங்கள் தேவைக்கேற்ப பயன்படுத்தி கொள்ளலாம்.

இதனையும் படிக்கலாம்,

Yoast SEO :

இது ஒரு SEO Plugin – உலகில் பல மில்லியன் வேர்ட்பிரஸ் பயன்பாட்டாளர்கள் தங்கள் தளங்களில் இன்ஸ்டால் செய்து பயன்படுத்தி வருகிறார்கள் .

இதன் பயன்பாடு,

 • உங்கள் தளத்தை கூகிள் சர்ச் கன்சோல்லில் இணைக்க உதவும்,
 • ஒவ்வொரு போஸ்ட் / பேஜ்ஜிற்கும் நீங்கள் title , description கொடுக்க உதவும்.
 • ஒரு பதிவை கூகிள் ( சர்ச் என்ஜின் ) இன்டெஸ் செய்யணுமா வேண்டாமா என்றும் செட் செய்து கொள்ள முடியும்.
 • அதே போல, ஒரு பதிவில் வரும் லிங்க்களை follow பண்ணவேண்டும் அல்லது nofollow பண்ணனுமா என்றும் செட் செய்து கொள்ளலாம்.

Google Sitemaps Plugin :

இந்த plugin பயன்படுத்தி தலத்தில் உள்ள பதிவுகளை கூகிள் இன்டெஸ் செய்யவேண்டுமா, வேண்டாமா , என்று ரூல் செட் செய்து இதனை கூகிள் சர்ச் கன்சோல் ( Google Search Console ) லில் சமர்ப்பிக்கலாம்.

நம் தளத்தின் sitemap url : domain.com/sitemap.xml என்று உருவாக்கப்படும்.

இதனை நாம் GSC யில் சமர்பிக்கணும்.

Jetpack Plugin :

இது வேர்ட்பிரஸ் டெவெலப்பர்ஸ் உருவாக்கிய ஒரு பயனுள்ள plugin , இதன் மூலம்,

 • உங்கள் தளத்தின் கமெண்ட் பாக்ஸ் கொடுக்கவும்,
 • இமேஜ்களை வேர்ட்பிரஸ் சர்வர்களில் ஏற்றி, பார்வையாளர்களுக்கு மிக வேக்மாக லோட் செய்யும்
 • நம் தளத்தின் சர்வர் முடங்கி போனால் உடனடியாக கண்டறியவும்,
 • பதிவுகளில் ஷேர் பட்டன் பொருத்தவும்,
 • ஹாக்கர்ஸ் களிடம் இருந்து தளத்தை பாதுகாக்கவும்,

என்று இவ்வளவு பயன் உள்ளது.

W3 Total Cache

இந்த plugin install செய்து தளத்தின் வேகத்தை அதிகரிக்க முடியும், இதன் மூலம் பார்வையாளர்கள் நல்ல அனுபவத்தை ஏற்படுத்த முடியும்.

scriptsகளை தேவை ஏற்பட்டால் மட்டும் லோட் ஆகும் வகையில் செட் செய்தால் அது ஸ்பீட் அதிகரிக்கும்.

இதனை எப்படி செட் செய்வது என்று இனொரு தனி பதிவில் தருகிறேன்.

ShareThis Plugin ;

உங்களின் பதிவுகளை எளிதில் மக்கள் தங்கள் நண்பர்களுக்கும், சமூக வலை தளத்திலும் ஷேர் செய்ய இந்த plugin உதவுகிறது.

AMP Plugin :

இந்த AMP WP plugin இன்ஸ்டால் செய்வதன் மூலம், நம் வேர்ட்பிரஸ் தளத்தை AMP டெக்னாலஜிக்கு பொருத்தமாக மாற்ற முடியும்.

இதன் மூலம், நம் தளம் கூகிள் ரேங்க் ஆகும்போது மின்னல் குறியுடன் அதாவது AMP குறியுடன் காண்பிக்கப்படும்.

அதனால் நம் தளத்திற்கு அதிக pageviews வர சாத்தியம் உள்ளது.

பக்கங்களும் மிக வேகமாக லோட் ஆகும்.

Thirsty Affiliate Plugin :

இது யார் பயன்படுத்தலாம் என்றால், affiliate சைட் நடத்துவார்கள், இதனை இன்ஸ்டால் செய்து தங்கள் outgoing லிங்க்களை SEO friendly யாக மாற்றலாம்.

அதாவது, இதனை link cloaking என்று சொல்வார்கள்,

இதன் மூலம், பார்வையாளர்கள், எளிதில் புரிந்து கொள்ள கூடிய URL நாம் பயன்படுத்தமுடியும்.

QuickAdsense Plugin :

Google adsense பயன்படுத்தும் நபர்கள் இந்த plugin install செய்து கொள்ளலாம்.

இதனுள், google adsense code பேஸ்ட் செய்து நம் தலத்தில் எந்த இடத்தில விளம்பரம் தெரியவேண்டுமா அதனை தேர்வு செய்து கொள்ளலாம்.

எடுத்துக்காட்டுக்கு, ஒவ்வொரு பதிவின் டைட்டில் கீழ் விளம்பரம் தெரியவேண்டும் , மற்றும் இரண்டு பாராக்களுக்கு பிறகு ஒரு விளம்பரம் தெரிய வேண்டும் என்றால் அதனை நம் செய்து கொள்ள முடியும்.

இப்படி இன்னும் எண்ணற்ற plugins இருக்கின்றது.

ஏதேனும் முக்கியமாக விட்டுவிட்டேன் என்றால் , கமெண்ட்டில் பதியவும். நன்றி.

Leave a Reply