ஆப்கானிஸ்தான்Afghanistan – இந்தியா தெரிந்துகொள்வது நம் கடமை

afghanistan vs taliban war Afgan flag file image
afghanistan vs taliban war Afgan flag file image

ஆப்கானிஸ்தான் கிட்டத்தட்ட எல்லா இந்தியர்களும் கேட்கக்கூடிய ஒரு கேள்வி, ஆப்கானிஸ்தான் இந்தியாவிற்கு எதற்கு important ஆனா நாடு? ஏன் அமெரிக்கா ஆப்கானிஸ்தானை விட்டு வெளிய போறாங்க? ஆப்கானிஸ்தானின் அடுத்தகட்ட நிலைமை என்னவாக இருக்கும்? சிரியா மாதிரி ஆப்கானிஸ்தான் மாறிடுமா? தாலிபான்கள் யார்?

afghanistan vs taliban war taliban terorist with their flag file image
afghanistan vs taliban war taliban terorist with their flag file image

இவர்கள் ஏன் ஆப்கானிஸ்தானை ஆளக்கூடிய ஒரு குழுவாக மாறினார்கள். ஆப்கானிஸ்தானின் வரலாறு என்ன? கேள்விகள் நிறைய இருக்கலாம். ஆனால் பதில்கள் நமக்கு சாதககமாக, நம் நாட்டிற்கு தேவையான பதில்களா இருந்தா நிச்சயமாக அதை நாம் தெரிந்து கொள்ள வேண்டியது கடமையாகும். அதே கடமை தான் இப்போ நமக்கு ஆப்கானிஸ்தான் மேல இருக்கு.

ரகசியமாக வர வேண்டிய காரணம்?

Afghanistan vs taliban war kandhahar map file image
Afghanistan vs taliban war kandhahar file image

ஆப்கானிஸ்தானில் கண்டஹார் எனும் இடத்தில் மிக முக்கியமான சில நபர்கள், கிட்டத்தட்ட 80 நபர்கள் இருந்தாங்க. ஆப்கானிஸ்தானுக்கும்ம் இந்தியாவிற்கும் ஆனா அந்த தூதரக உறவில் இருக்கக்கூடிய 80 நபர்கள். ஒரு 5,6 தினங்களுக்கு முன்பாக அவர்களை ரகசியமாக நாம் இந்தியாக்குள்ள கொண்டு வரணும்.

afghanistan vs taliban war taliban terorist with their flag file image
afghanistan vs taliban war taliban terorist with their flag file image

எதற்காக ரகசியமாக கொண்டுவரனும்? என்ற கேள்விக்கு தாலிபான்கள் அந்த இடத்தையும் ஆக்கிரமிப்பு செய்ய ஆரமித்துவிட்டார்கள் என்ற பதில் தான்.

ரகசிய விமான பயணம்

Afghanistan vs taliban war indian chief defence advicer Ajith Doval file image
Afghanistan vs taliban war indian chief defence advicer Ajith Doval file image

இதே மாதிரியான ஒரு operation அ கொஞ்சம் வருடங்களுக்கு முன்பாக அஜித் டோவல் அவர்களும் செஞ்சுருந்தாங்க. ஆனா எந்த முறை நாம செஞ்சது மிக பெரிய operation என்று சொல்லலாம். ஏன் என்றால் 80 நபர்களை ஒரு Flight ல அனுப்பி, அந்த flight யாருக்கும் தெரியாமல் ஆப்கானிஸ்தான் குள்ள இறங்கி,அங்கிருக்க கூடிய மனிதர்களை கொண்டுவர வேண்டும் என்பது தான்.

afghanistan vs taliban war Indian Recue flight coceptual file image
afghanistan vs taliban war Indian Recue flight coceptual file image

ஆப்கானிஸ்தான் குள்ள நம்முடைய விமானத்தை எப்படி அனுப்புறது என்ற கேள்வி நமக்குள்ள வருகிறது.அதுவும் எல்லாமே 24 – 32 மணி நேரத்தில் முடித்து வைக்கப்படுகிறது என்று சொல்றாங்க.

ஒரே வழி ஈரான்

afghanistan vs taliban war Iran flag file image
afghanistan vs taliban war Iran flag file image

So, ஆப்கானிஸ்தானுக்கு நாம போகணும்னா Pakistan வழியாக போகவேண்டும். இந்திய அரசாங்கம் பாகிஸ்தான் கிட்ட போய் நாம டைம் கேட்கனுமா? எதற்காக அவர்களின் வான்வெளியை பயன்படுத்தினோம் என்ற முழு விவரம் அவர்களுக்கு சொல்லணும், பெரிய ஒரு பிரச்சனை வரலாம். அதனால பாகிஸ்தான் வழியாக போகவேண்டாம். வேறு என்ன வழி இருக்கு என்று பார்த்தால், ஈரான் வழியாக வழி போகலாம்.

afghanistan vs taliban war Iran secret agreement file image
afghanistan vs taliban war Iran secret agreement file image

ஈரான் அரசாங்கத்துகூட இந்தியா பல விதமான ரகசிய ஒப்பந்தம் போட்டு ஈரான் நாட்டு வழியாக நம்முடைய விமானம் செல்கிறது. சென்ற விமானம் கந்தகார் என்ற இடத்தில் இறங்கி அங்குள்ள மனிதர்களை, தூதரக அதிகாரிகளை இந்தியாவிற்கு கொண்டு வருகிறோம்.

afghanistan vs taliban war Indian Recue flight landing coceptual file image
afghanistan vs taliban war Indian Recue flight landing coceptual file image

Danish Sidique – ஒரு பத்திரிகையாளர்

Journalist  Danish Sidique - Reuters News Reporter / photographer
Journalist Danish Sidique – Reuters News Reporter / photographer

இப்படி ஆப்கானிஸ்தான்ல இருந்த நம்முடைய தூதரக அதிகாரிகளை நாம எடுத்துட்டோம் என்று சொல்லலாம். மிக முக்கியமான ஒரு நபர், Danish Sidique என்பவர் கொல்லப்பட்டிருக்கிறார். என்ன காரணம் என்று பார்க்கும்போது அவர் ஆப்கானிஸ்தான் குள்ள பல விதமான செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருக்கும் போது தாலிபான்களால் சுட்டு கொல்லப்பட்டார்.

afghanistan vs taliban war taliban terorist with their machine guns file image
afghanistan vs taliban war taliban terorist with their machine guns file image

பத்திரிகையாளர் மத்தியில் Danish Sidiqueஅவர்கள் எடுத்து கொண்ட புகைப்படம் மிகவும் பிரபலம். அது இந்தியாவாக இருக்கட்டும், உலக நாடுகளாக இருக்கட்டும், பல விதமான புகைப்படங்கள் அவருக்காகவே பல விருதுகளையும் தேடி கொடுத்திருக்கு என்று கூறலாம்.

afghanistan vs taliban war Man with gun file image
afghanistan vs taliban war Man with gun file image

அப்படிப்பட்ட ஒரு பத்திரிகையாளரை இழந்து நிற்கிறோம். ஆனால் ஒரே ஒரு பத்திரிகையாளர் தான் அங்கு கொல்லப்பட்டாரா? என்ற கேள்வியை கேட்க மறந்து விடுகிறோம். இது வரை அப்கானிஸ்தான்ல 72க்கும் அதிகமான பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

Afghanistan vs Taliban war 72 Journalists killed News source for your reference  file image
Afghanistan vs Taliban war 72 Journalists killed News source for your reference file image

அடேங்கப்பா! இவ்வளவு குண்டுகளா?

Afghanistan vs Taliban war USA USED 58,600 BOMBS USED  News source for your reference  file image
Afghanistan vs Taliban war USA USED 58,600 BOMBS USED News source for your reference file image
afghanistan vs taliban war taliban terorist with their flag file image
afghanistan vs taliban war taliban terorist with their flag file image

2001 ஆம் வருடம் இரட்டை கோபுரம் தாக்குதல் என்பது நடைபெறுகிறது. அதற்கு ஆப்கானிஸ்தானில் இருக்க அல்கோய்டா தான் காரணம், அவர்களுக்கு உறுதுணையாக தாலிபன்கள் இருக்கிறார்கள். நாங்க ஆப்கானிஸ்தான் குள்ள நுழைய போகிறோம் என்று சொல்லி அமெரிக்கபடைகள் உள்ளே வந்த பிறகு 5 வருடம் 2006, 2006-2021 வரை கிட்டத்தட்ட அவுங்க போட்ட குண்டுகளின் எண்ணிக்கை மட்டுமே அப்கானிஸ்தான் மண்ணில் 60,000 க்கும் மேற்பட்டது என்று சொல்லலாம்.

புலி வாலை பிடித்த கதை தான்!

அமெரிக்காவின் வரலாற்றில் இவ்வளவு நீளமான யுத்தம் நடைபெற்றதே கிடையாது. அமெரிக்காவிற்கு இதனால் ஆனா செலவு, இரண்டுல இருந்து இரண்டரை டிரில்லியன் அமெரிக்கன் டாலர் செலவு ஆகியிருக்கும் என்று சொல்றாங்க.

afghanistan vs taliban war America holding tail of tiger satier file image
afghanistan vs taliban war America holding tail of tiger satier file image

வேறு வகையில் அமெரிக்கா அங்க இருக்கக்கூடிய கனிம வளங்களை எடுத்தாலும் அவர்களுடைய செலவு கூடுதல் என்று சொல்றாங்க. 19 (அ) 20 வருடங்கள் நடந்த யுத்தம் ஒரு முடிவுக்கு வருகிறதா என்று கேட்டால் இல்லை, புலி வாலை பிடித்த அமெரிக்கா அதிலிருந்து எப்படி தப்பிப்பது என்று ட்ரைனிங் எடுத்துட்டு இருக்காங்க.

அப்படி எடுக்கும் போது தான் அதை யார் தலையிலாவது வச்சுட்டு தான் இந்த அப்கானிஸ்தானை விட்டு வெளியேற முடியும் என்று அமெரிக்காவிற்கும் தெரியும். அதன் காரணமாக அது முழுவதுமாக தாலிபான்கள் தலையில் வைக்கப்படுகிறது. அது எப்படி சாத்தியம் என்று கேட்டீங்கன்னா, இது நாள் வரையில் தாலிபான்களை அழிக்க முடியாத அமெரிக்கா இனி என்ன செய்ய போகிறது.

afghanistan vs taliban war Taliban Terorist operating heavy fire wepons file image
afghanistan vs taliban war Taliban Terorist operating heavy fire wepons file image

19, 20 வருடங்களாக அமெரிக்காவின் படை, NATO வின் படை, ஜெர்மனியின் படை இவையெல்லாம் எங்கே இருக்கு? அப்கானிஸ்தான் குள்ள இருந்துட்டே இருக்காங்க. தாலிபான்களை அழிக்க முடியாது என்பது அமெரிக்காவிற்கு தெரிந்துவிட்டது. அவர்களை அழிக்க நினைத்தால் நாம் தான் நம் பணம், பல உயிர்களை தியாகம் செய்ய வேண்டியிருக்கும் என்பதை உணர்ந்து கொண்ட அமெரிக்கா இன்று பின் வாங்குகிறது.

இந்தியா – ஆப்கானிஸ்தான் நட்பு அணை

afghanistan vs taliban war India Afgan Partenership and indian Aids file image
afghanistan vs taliban war India Afgan Partenership and indian Aids file image

செப்டம்பர் மாதம் அமெரிக்காவின் படைகள் அப்கானிஸ்தானை விட்டு வெளியே வரும்போது, இந்தியாவின் நிலை தான் ரொம்ப பரிதாபம் என்று சொன்னாங்க. கிட்டத்தட்ட 23,000 – 30,000 கோடி நாம அங்க ஒதிக்கிருக்கோம். இல்லாட்டி நாம நிறைய நல்ல விஷயங்கள் செஞ்சுருக்கோம். சில அணைகளுக்கு இந்தியா – ஆப்கானிஸ்தான் நட்பு அணை என்று பெயர் போட்ருக்காங்க. அங்க இருக்கக்கூடிய energy, மிக முக்கிய சாலைகள், நிறைய பள்ளிக்கூடங்கள், துறைமுகம் ஆகிய அனைத்துக்கும் இந்தியா மிக பெரிய அளவில் உதவிருக்காங்க.

afghanistan vs taliban war India Afgan Partenership and indian Aids vs terorist actions  file image
afghanistan vs taliban war India Afgan Partenership and indian Aids vs terorist actions file image

இந்தியாவை பொறுத்த வரைக்கும் அங்கே 1980 – 85 இந்த காலகட்டத்தில், அங்கே பாகிஸ்தான் கை ஓங்கி இருக்கும்போது, அப்கானிஸ்தானில் இருக்கும் ஒரு சில கூட்டத்திற்கு இந்தியா ஆதரவு தெரிவித்தது. தாலிபான்களை போல் 100 – 150 இயக்கங்கள் அங்கே உள்ளது. அதில் ஏதாவது ஒரு இயக்கத்திற்கு நாம் சப்போர்ட் குடுக்கலாம் என்று சொல்லியிருந்த இந்தியா, காலப்போக்கில் ஆப்கானிஸ்தானுக்கு யாரு நல்லது செய்றாங்களோ, அவர்களுக்கு தான் நாங்க ஆதரவு தெரிவிப்போம் என்று சொல்றாங்க. இன்று அப்கானிஸ்தான் அரசாங்கத்துக்கு இந்தியா ஆதரவு தெரிவிக்கிறது, நாளைக்கு அதே அப்கானிஸ்தான் குள்ள தாலிபான்கள் வந்துவிட்டால் அவர்களுக்கும் நாம் ஆதரவு கொடுத்துதான் ஆக வேண்டும்.

எதற்காக இந்தியா ஆதரவு தர வேண்டும்?

afghanistan vs taliban war - why India need Afgan Partenership concptual rute map  file image
afghanistan vs taliban war – why India need Afgan Partenership concptual rute map file image

இந்த அப்கானிஸ்தானை விட்டுட்டா நாம் Central Asia போறதுக்கு வேற நாடுகள் கிடையாது. ஈரானில் பல விதமான குழப்பங்கள் இருந்து வருகிறது, ஈரான் வழியாக அப்கானிஸ்தான் சென்று அங்கிருந்து Central Asia செல்வது தான் நம்முடைய நீண்ட காலத்திட்டம் என்று சொல்லலாம். இதுக்காக அப்கானிஸ்தான் நமக்கு மிக முக்கிய நாடக நமக்கு இருந்தது.

afghanistan vs taliban war - china & pak Falg - for their partenership  file image
afghanistan vs taliban war – china & pak Falg – for their partenership file image

இந்தியாவை அழிக்கவேண்டும் என்று சொல்லும் 2 நாடுகள் உள்ளது. ஒன்று பாகிஸ்தான், மற்றொன்று சீனா. இந்த இரண்டு நாடுகளுமே அப்கானிஸ்தான் மீது கண் வைத்துகொன்டே இருக்காங்க.

கனிம வளங்களின் சுரங்கம்

அப்கானிஸ்தான் என்பது கிட்டத்தட்ட 600 வருடங்கள் அமெரிக்காவிற்கு தேவையான அதனை கனிம வளங்களையும் கொடுக்கும் ஒரு நிலப்பரப்பு. 600 வருடங்களுக்கு தேவையான கனிம வளங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது,

afghanistan vs taliban war - Survey of raw materials  file image
afghanistan vs taliban war – Survey of raw materials file image

இன்னும் எடுக்கப்படவில்லை. இன்னும் பல இடங்களை சர்வே செய்தால் கனிம வளங்கள் இருப்பது பல உலக நாடுகளுக்கு தெரியவரும். இப்படி ஒரு பொக்கிஷமான இடத்தை விட்டு அமெரிக்கா செல்ல காரணம், செலவுகள் அங்கே அதிகரித்து வருகின்றது, பல நேரங்களிலும் மேற்குலக நாடுகளுக்கு தோல்வி என்பது இன்றியமையாததாக இருக்கிறது.

afghanistan vs taliban war - world with covid concptual file image
afghanistan vs taliban war – world with covid concptual file image

தோல்வி என்பதற்கு சிறந்த உதாரணங்கள், முதல் விஷயம், இந்த ரஷ்யாவை அடக்கவே முடியவில்லை. வட கொரியாவின் எச்சரிக்கையை நிறுத்த முடியவில்லை. சீனாவின் தென் சீன கடலின் ஆதிக்கத்தை நிறுத்த முடியவில்லை. கொரோனா வைரஸ் எனும் போது அதில் இருக்கும் பொருளாதார சிக்கலில் இருந்து வெளிவரவே முடியவில்லை. ஜோர்ஜியா (அ) இஸ்ரேல் பாலஸ்தீன பிரச்சனையோ இன்றளவும் முடிவு பெறாமலே இருக்கிறது. ரஷ்யா உக்ரைன் பிரச்சனை, அதுவும் ரஷ்யாவின் கை ஓங்கி நிற்கிறது. இப்படி எடுத்த இடத்தில் எல்லாமே மேற்குலக நாடுகளுக்கு கடந்த 10, 15 வருடங்களாக இழப்புகள் அதிகரித்து வருகிறது.

ஆப்கானிஸ்தான் தாலிபன்கள் பிடியில்

afghanistan vs taliban war - Rusia and neigbour countries actions file image
afghanistan vs taliban war – Rusia and neighbor countries actions file image

So, இதே போல் சென்று கொண்டே இருந்தால் நம்முடைய படைகள், செலவுகள் முழுவதுமாக தாலிபன்களுக்கு செய்ய வேண்டியதாக இருக்கும். இப்பொது தாலிபன்கலுக்கே அதை கொடுத்து விடலாம் என்று அமெரிக்கா வெளிவர ஆரமிக்கின்றது. ஒரு கட்டத்தில் இந்தியா இராணுவம் ஆப்கானிஸ்தானுடைய அரசாங்கத்திற்கு உதவி செய்யுமா? எனும் கேள்வி கூட கேட்கப்பட்டது. ஆனா இப்பொது இருக்கும் நிலைமையை பார்க்கும் போது அதற்கு வாய்ப்பே இல்லை.

afghanistan vs taliban war taliban terorist with their flag file image
afghanistan vs taliban war taliban terorist with their flag file image

காரணம் என்னவென்றால் மொத்தம் 421 district இருக்கு ஆப்கானிஸ்தானில். அவற்றில் 300 க்கும் அதிகமானவற்றை தாலிபன்கள் புடிச்சுட்டாங்க. 85% நிலப்பரப்பு இப்போது எங்க கட்டுப்பாட்டில் உள்ளது என்று தாலிபன்கள் சொல்றாங்க. மேலும் இதை ஒரு இஸ்லாமிய நாடக மாற்ற போவதாக தாலிபான்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தாலிபன்கள் யார்?

afghanistan vs taliban  taliban terorist Founder and leader Mulla Muhammad Umar  file image
afghanistan vs taliban taliban terorist Founder and leader Mulla Muhammad Umar file image

1994ல் முதலாம் முகமத் உமர் என்பவர், குரானின் மாணவர்கள் என்று அர்த்தம் தரக்கூடிய தாலிபன்கள் என்ற அமைப்பை ஏற்படுத்துகிறார். இந்த அமைப்பு வருவதற்கு காரணமே ரஷ்யா (அ) அமெரிக்கா என்று கூறலாம். 1978 – 79 இந்த காலகட்டத்தில் ஆப்கானிஸ்தானில் ரகசியமாக ஒரு கோபுரத்தை அமைகிறது அமெரிக்கா. இந்த காலகட்டத்தில் எதற்காக கோபுரம் என்ற கேள்வி ரஷ்யாவிற்கு எழும்பியது.

afghanistan vs taliban war taliban terorist with their flag file image
afghanistan vs taliban war taliban terorist with their flag file image

அப்போது தான் ரஷ்யாவிற்கு புரிந்தது, ஆப்கானிஸ்தானுக்கு அருகில் இருப்பது ரஷ்யா, அந்த நாட்டில் ஒரு கோபுரத்தை வைத்துவிட்டோம் என்றால் ரஷ்யாவை உளவு பார்க்க முடியும் என்று சொல்லி அமெரிக்கா அந்த கோபுரத்தை அமைத்தது.

Afghanistan vs Taliban war Taliban terrorist with portable rocket conceptual file image
Afghanistan vs Taliban war Taliban terrorist with portable rocket conceptual file image

இதை எதிர்பார்க்காத ரஷ்யா, ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்தது. ஆப்கானிஸ்தானின் கனிம வளங்கள், அமெரிக்காவின் சித்து விளையாட்டு, இதற்கு எப்படியாவது எதிர்வினை ஆற்ற வேண்டும் என்று 1980 – 85, இந்த காலக்கட்டத்தில் மெதுவாக ரஷ்யா ஆப்கானிஸ்தானுக்குள் வருகிறது.

இனக்குழுவின் ஆதிக்கம்

Afghanistan vs Taliban war Russia vs USA  WITH FLAG AND MAP  conceptual file image
Afghanistan vs Taliban war Russia vs USA WITH FLAG AND MAP conceptual file image

1990 – 91 ல் ரஷ்யா கம்யூனிசம் என்பதை உலகளவில் பரப்புகிறது எனும் பெயருக்கு மத்தியில் அங்கே இருக்க கூடிய பல நபர்கள், ஆப்கானிஸ்தான் எடுத்து பார்த்தீங்கன்னா 14 இனக்குழுக்கள் இருக்கு. அதில் மிக முக்கியமான இனக்குழுக்கள் என்று பஸ்ரூன் இனக்குழுவை கூறலாம். இவர்கள் தான் தாலிபன்கள் உருவாவதற்கு காரணம். அங்கு இருக்கக்கூடிய தாலிபன்களில் 50 – 60% பஸ்ரூன் இன மக்கள் தான் இருப்பார்களாம். இது ஒரு சன்னிப்பிரிவு மக்கள் என்றும் சொல்லலாம்.

Afghanistan vs Taliban war NO TV, NO RADIO NO NEWS PAPPER   conceptual file image
Afghanistan vs Taliban war NO TV, NO RADIO NO NEWS PAPPER conceptual file image

ஆப்கானிஸ்தானை ஒரு இஸ்லாம் நாடக குரானுக்கு தகுந்தாற்போல் மாற்ற வேண்டும். அதில் கம்யூனிசம், சோசலிசம் எதுமே இருக்கக்கூடாது. பெண்கள் படிக்கக்கூடாது, அவர்களின் உடை இப்படி தான் இருக்க வேண்டும். வேற்று மதத்தவரின் பண்டிகையை கொண்டாடக்கூடாது. படம், பாட்டு இது எதுமே கேட்க கூடாது. இப்படி Extremist என்று சொல்வங்கள, அந்த மாதிரி ஒரு சட்டத்தை ஆப்கானிஸ்தானில் உருவாக்கவேண்டும்.

Afghanistan vs Taliban war Army practising against Taliban terorist file image
Afghanistan vs Taliban war Army practising against Taliban terorist file image

ஒரு கட்டத்தில் தாலிபன்கள் உருவாகிவிட்டார்கள், ஆப்கானிஸ்தானுக்கு பெயரே மாற்றிவிட்டார்கள். அதற்கு பெயர் இஸ்லாமிய அமீரகம் ஆப்கானிஸ்தான் என்று ஒரு நாடக அறிவிச்சுட்டாங்க. அதற்கு United Arab Emirites, பாகிஸ்தான், சவுதி அரேபியா இந்த மூன்று நாடுகள் மட்டும் அதை நாடக அங்கீகரித்து கொண்டது.

இரட்டை கோபுர தாக்குதல்

afghanistan vs taliban war taliban terorist with their flag file image
afghanistan vs taliban war taliban terorist with their flag file image

இஸ்லாமிய அடிப்படை வாதம் தான் ஆப்கானிஸ்தானை ஆள வேண்டும் என்பது தான் தாலிபன்களின் குறிக்கோளாக இருந்தது. இந்த குறிக்கோளுக்கு மத்தியில் தான் ரஷ்யாவிற்கு சொந்தமாக, ஆதரவாக இருக்கக்கூடிய நபர்கள் அங்கே கொல்லப்படுகிறார்கள். இந்த தருணத்தில் 2001 ஆம் ஆண்டு இரட்டை கோபுர தாக்குதல் என்பது நடத்தப்படுகிறது. அதனால் ஆப்கானிஸ்தானை விட்டு ரஷ்யாவை ஓட வைப்பதற்கும், ஆப்கானிஸ்தானின் இயற்கை வளங்களுக்காக அமெரிக்கா வராங்க. அமெரிக்கா வந்த பிறகு NATO படைகள் வருகிறது, அங்கே குண்டுகள் வீசப்படுகிறது, ஆனாலும் தாலிபன்கள், முஜாஹூய்த்தான்கள், அல்கோய்டா அவர்களை ஆப்கானிஸ்தான் மண்ணை விட்டு விரட்டமுடியவில்லை.

2001 ஆம் ஆண்டு இரட்டை கோபுர தாக்குதல் file image
2001 ஆம் ஆண்டு இரட்டை கோபுர தாக்குதல் file image

ஒரு கட்டத்தில் IS தீவிரவாதிகளின் ஆதிக்கம் இங்கு அதிகமாக இருக்கும், ஆப்கானிஸ்தானை இப்படியே விட்டீர்கள் என்றால் வேறு வழியே இல்லை, தாலிபன்களை கொன்று குவித்து விடுகிறீர்களா? என்ற கேள்விக்கு அமெரிக்கா, தாலிபன்கள் மீது கை வைக்க முடியவில்லை. அப்படி கை வைத்தால், எங்கெங்கெல்லாமோ அடிபடுகிறது என்பது தான்.

NATO ARMY WITH HELICOPTERS FILE IMAGE

தாலிபான்கள் என்ற அமைப்பு கொரில்லா தாக்குதலை நடத்தினாலும், அமெரிக்காவால் கூட அதை கட்டுப்படுத்த முடியாத நிலைமை வரும்போது, ஆப்கானிஸ்தானின் படை வீரர்கள் என்ன செய்வார்கள். அதனால் தான் என்று பல மாவட்டங்களை இழந்து நிற்கிறது ஆப்கானிஸ்தானின் அரசாங்கம். இப்பொது தாலிபன்கள் இதை பிடித்துவிடுவார்கள், அதன் பிறகு என்ன நடக்கும் என்பது தான் கேள்வி? அமெரிக்கா வெளியேறும், அமெரிக்கா கொஞ்ச நாள் வேடிக்கை மட்டும் தான் பார்ப்பார்கள், இன்னும் கொஞ்சநாட்களுக்கு அமெரிக்கா ஆப்கானிஸ்தான் பக்கத்தில் வராது. ஆனால் சீனா என்ன செய்வார்கள்? அங்குள்ள கனிம வளங்களை தேர்ந்தெடுப்பதற்காக, எடுக்கிறதற்காக இப்போதே பல டென்டெர்ஸ் என்பதை எடுத்துகிட்டாங்க.

Taliban vs America file image

பல நிறுவனங்கள் ஆப்கானிஸ்தான் உள்ளே நுழைய ஆரம்பிக்கும். பாகிஸ்தான் இரட்டை வேடம் போடுகிறது என்பது தெரியும். ஒரு கட்டத்தில் தாலிபன்கள் (அ) தீவிரவாதத்திற்கு எதிராக நாங்கள் நிற்போம் என்று சொல்கிற பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானுக்கு பல உதவிகள் செய்வார்கள். ரஷ்யா மறுபடியும் ஆப்கானிஸ்தானுக்குள் நுழைய வாய்ப்புகள் இருக்கின்றன.

Afgan Soldier with full uniform and gun file image for refernce

ரஷ்யா, சீனா, பாகிஸ்தான் இந்த மூன்று நாடுகள் தான் ஆப்கானிஸ்தான் மீது ஆளுமையை செலுத்த போகிறார்கள். இவற்றை ஓரமாக இருந்து பார்க்கக்கூடியது அமெரிக்காவாக இருக்கும். அமெரிக்காவிற்கு சிம்மசொப்பனமாக இருக்கும். அல்லது இஸ்ரேலுக்கு சிம்மசொப்பனமாக இருக்கக்கூடிய ஈரானும் ரஷ்யா, சீனா, பாகிஸ்தான் கூட சேர்வதற்கான வாய்ப்புகளும் அதிகமாக இருக்கின்றன.

Pak & Russia & china Flag to show importance of their role in this war
Pak & Russia & china Flag to show importance of their role in this war

இது இந்தியாவிற்கு மிக பெரிய Loss. இல்லை என்று சொல்லமுடியாது. நம்ம இந்த ஒரு பத்து இருபது வருடங்களாக செய்து வந்த நல்ல விஷியங்கள் எல்லாமே ஒரு 100 வருடத்திற்கு பின் நாம போய்ட்டோம் என்று சொல்லலாம், இப்படி தாலிபன்கள் கையில் ஆப்கானிஸ்தான் கிடைப்பது எனும் ஒரே ஒரு விஷயத்திற்காக.

இந்தியா என்ன செய்யபோகிறது?

Afgan & Chinese Partnership
Afgan & Chinese Partnership

இந்தியாவின் நட்பு நாடுகளான ரஷ்யா கிட்டயோ, இல்ல ஈரான் கிட்டயோ, நமக்கும் சின்ன சின்ன வேலைகள் இருக்கு, எங்களுடைய presance உம் இருக்க வேண்டும் என்பதை force பண்ணுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. உஷ் பேகிஸ்தான், அல்லது கஜிகிஸ்தானாக இருக்கட்டும், இல்லாட்டி ஈரானாக இருக்கட்டும், இவை எல்லாமே ஆப்கானிஸ்தானை எல்லைகளாக பகிரும் நாடுகள். இவற்றுடன் இந்தியா என்ன செய்ய வாய்ப்பிருக்கிறது. இன்னும் கூடுதலாக அவர்களின் strategy மாற்றுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

india & Iran & Rusia  Partnership
india & Iran & Rusia Partnership

யாருடைய கை அங்கே ஓங்க போகிறது, அங்கிருந்து விலக போகிறது என்ற கேள்விக்கு மத்தியில், அங்கே தாலிபன்கள் வளர்ந்துவிட்டால், ஒரு நாடு கிடைத்துவிடும். அந்த நாட்டு வழியாக பல நபர்களுக்கு ட்ரைனிங் என்பது கிடைக்கும். இந்த தீவிரவாதிகளுக்கு உதவுவதற்காக பல நாடுகள் அவர்களின் ஆயுதத்தை ஏற்றுமதி செய்வார்கள். மறுபடியும் மேற்குலக நாடுகளுக்கு நாங்கள் சவால் விடுக்க போகிறோம் அப்படின்ற ஒரு முக்கியமான குழு இங்கிருந்து பிறபதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

Afgan Vs British war
Afgan Vs British war

இவர்களை சரியாக வழிநடத்த ஈரான் மட்டும் தயாராக ஆகிவிட்டது என்றால், நிச்சயமாக உலக அரசியலில் ஒவ்வொரு நாளும் பல விதமான மாற்றங்களை இங்கே நாம் பார்க்கலாம்.

இப்பொது உங்களுக்கு சில விஷியங்கள் புரிந்திருக்கும். ஆப்கானிஸ்தான் என்றால் என்ன, தாலிபன்கள் ஏன் வந்தார்கள், அவர்களுக்கு எதிராக ரஷ்யா ஏன் வந்தார்கள், அதை எதிர்த்து அமெரிக்கா ஏன் வந்தார்கள், இந்தியாவின் நிலைமை என்ன? என்பது எல்லாமே புரிஞ்சுருக்கும். பிரிட்டனால கூட ஆப்கானிஸ்தானை 80 வருடங்கள் போரிட்ட பிறகு தான் கொஞ்சம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடிந்தது. அதனை இன குழுக்கள் இருக்கின்றது ஆப்கானிஸ்தாக்குள்ள. அவர்களுக்கான பாக்ஸி யுத்தமாக பல நேரங்களிலும் மாற வாய்ப்புகள் இருக்கின்றன.

world map image with Afgan map highlighted

இனி என்னென்ன குழுக்கள் ஆப்கானிஸ்தானுக்குள் வந்து செல்லப்போறாங்க என்பது தெரியவில்லை. ஆனால் அடிக்கடி ஆப்கானிஸ்தானின் பெயர் பல செய்திகளாக வருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. ஆப்கானிஸ்தான் எப்படி உருவாகிறது, IS தீவிரவாதிகள் எப்படி உருப்பெறுவார்கள், எப்படி ட்ரைனிங் கொடுக்கப்படுகிறது. யார் இந்த மாதிரியான ஆயுதங்களை ஏற்றுமதி செய்கிறார்கள் போன்றவற்றை தேடி பாருங்கள். உங்கள் நாடும் பாதிப்படையும் என்பது உங்களுக்கே புரியும். அப்போது தான் ஆப்கானிஸ்தான் வரலாறு, அவர்களுடைய வரலாறு மட்டுமன்று, உலக நாடுகள் பாதிக்கப்போகும் பல விஷயங்கள் இங்க இருந்து ஆரமிக்க போகிறது என்ற உண்மை நமக்கு தெரியும் போது, ஆப்கானிஸ்தானை பற்றி ஆராய்வோம்.

நல்லதை பகிர்வோம்! நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!

உங்கள் லோகன்.

credits: Ramya & viki 

Leave a Reply