தமிழ்நாட்டுல Hydrocarbon திட்டங்கள திரும்பவும் கொண்டு வரதா செய்திகள் வெளியாயிட்டு இருக்கு. அத வச்சு நிறைய விவாதங்களும் எழுந்துட்டு இருக்கு. டெல்டா மாவட்டங்களை தான் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களா அறிவிச்சுட்டாங்களே! அப்படி இருந்தும் இந்த Hydrocarbon திட்டங்கள கொண்டு வர முடியுமா? பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்கள்னா என்ன? இத பத்தி தான் நான் சொல்லப்போறேன்.

ஒரு செய்திக்கு பின்னாடி பல பிரச்சனைகள் இருக்கும். பல நகர்வுகள் இருக்கும். பல திட்டங்கள் இருக்கும். ஆனா நாம பெரும்பாலும் அந்த செய்திய ஒரு செய்தியா மட்டுமே கடந்து போயிட்டு இருக்கோம். நா சொல்றதுல அந்த செய்தியோட அடுத்தடுத்த நகர்வுகளை உன்னிப்பா கவனிக்க உங்களுக்கு உதவும்னு நம்புறேன். வாங்க concept குள்ள போலாம்.

காவிரி டெல்டா பகுதியின் வளங்கள்

காவிரி டெல்டா பகுதியில எண்ணெய், இயற்கை எரிவாயு இன்னைக்கு நேத்து எடுத்துட்டு இல்ல. கிட்டத்தட்ட 1970,80களில் இருந்தே ONGC நிறுவனத்தால எண்ணெய் எடுக்கப்பட்டுட்டு தான் இருக்கு.ஏறக்குறைய 600 எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கிணறுகள் டெல்டா மாவட்டங்கள இருக்கு.

இதுல 400 முதல் 450 கிணறுகள் இப்பவும் இயங்கிட்டு இருக்கு. இந்த எண்ணெய் எடுக்கும் process ல கச்சா எண்ணெயோட துணைப்பொருளா வரத்துது தான் Natural Gas.

அதாவது இயற்கை எரிவாயு. இதுவும் சந்தைப்படுத்தப்படுத்து. ஒரு கட்டத்துல எண்ணெய், இயற்கை எரிவாயு தவிர இன்னும் சில gasகள் எடுக்க முடியும்னு உலக அளவுல கண்டுபிடிப்புகள் நடக்குது.

Hydrocarbon Gas and its orgin

அந்த gasகள் என்னென்னனா Shale GasCoal Bed Methane, Tight Gas இப்படி சில காஸ்கள் இருக்கு. இந்த காஸ்கள் எல்லாத்துலையுமே commonஅ ஹைட்ரோகார்பன் இருக்கும். அதனால தான் இது எல்லாத்தையும் பொதுவா Hydrocarbon Gas அப்படினு சொல்றாங்க.

1991ல தாராளமையக் கொள்கைக்கு பிறகு,1993ல் ஹைட்ரோகார்பன் பொது இயக்குனரகம் உருவாக்கப்படுது. இந்த இயக்குநராகத்தோட வேலை என்னனா, இந்தியா முழுவதும் எங்கெங்க ஹைட்ரோகார்பன் இருக்கு, எவ்வளவு இருக்குனு கண்டுபுடிக்கனும். அத  சர்வதேச டெண்டர் அறிவிச்சு business ஆக்கி அரசுக்கு வருவாய் கொண்டுவர திட்டமிடணும். ஒட்டுமொத்தமா ஹைட்ரொகார்போன்உற்பத்திய நிர்வகிக்கிறது இந்த இயக்குநரகத்தோட வேலை. 1998ல தனியார் நிறுவனங்களும் ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதிக்கப்படுத்து. அதையும் இந்த இயக்குனரகம் தான் கட்டுப்பாட்டுல வச்சுக்கும்.

New Exploration Policy

அரசுக்கும், தனியார் நிறுவங்களுக்கும் வாய்ப்பு குடுக்கணும் அப்படிங்கிற நிலைமை இப்ப எற்பட்டிருச்சு. அதனால New Exploration Policy அப்படினு ஒன்ன 1998ஆம் ஆண்டு கொண்டுவந்து அதன்முலம் ஒழுங்கம் குடுக்க ஆரமிச்சது இந்த இயக்குனரகம். 2009ல Great Eastern Energy Corporation(GEEC) அப்படின்ற நிறுவனத்துக்கு, மன்னார்குடி பகுதியில Coal Bed Methane, அதாவது நாம மீத்தேன் வாயுனு சொல்றோம் இல்லையா?, அந்த மீத்தேன் வாயு இருக்கானு கண்டுபிடிக்கவும், ஆராயவும் மத்திய அரசு Exploration License அ அந்த நிறுவனத்துக்கு குடுக்குது. 

2011 ஜனவரியில் அப்போது இருந்த திமுக அரசும் இந்த ஆராய்ச்சிக்காக அனுமதி கொடுக்குது. இந்த ஆராய்ச்சி நடந்ததுக்கு அப்புறம் அங்க Cold bed methane இருக்குறத அந்த நிறுவனம் கண்டுபிடிக்குது. இதுக்கு அப்புறம் சுமார் 667 சதுர கிலோமீட்டர் பரப்பளவுள்ள டெல்ட்டாவுடைய முக்கியமான பகுதிகள ஒருங்கினைச்சு ஒரு பெரிய மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்தினை GEEC propose பன்றாங்க. அதற்கு மத்திய அரசு Environment Clearance கொடுக்குது. ஏற்கனவே எண்ணெய் எடுக்கும் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிச்சுட்டு வந்த டெல்டா மக்கள், இந்த மீத்தேன் திட்டத்துக்கும் கடுமையா எதிர்ப்பு தெரிவிச்சு முழுவீச்சுல களம் இறங்குறாங்க.

நெடுவாசலில் ஹைட்ரோகார்பன்

போராட்டத்தின் விளைவா 2013 அக்டொபர் மாசம் அதிமுக அரசாங்கம் இந்த மீத்தேன் திட்டத்துக்கு தடை விதிக்குது. 2016 Gem Labaratories அப்படின்ற நிறுவனத்துக்கு சிறிய அளவு கிணறுகள் திட்டத்தின்படி,

நெடுவாசல் பகுதியில ஹைட்ரோகார்பன் எடுக்க இந்திய அரசு contract குடுக்குது. இதை எதிர்த்து 2017ல நெடுவாசல் போராட்டம் தொடங்குச்சு. 174 நாள் நீடிச்ச போராட்டத்தின் விளைவா அந்த திட்டமும் தடுத்து நிறுத்தப்பட்டுச்சு. விவசாயிகள் தற்காலிகமா போராட்டத்த நிறுத்துறதா அறிவிச்சாங்க.

ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு டெல்டா மக்கள் ஏன் ரொம்ப எதிர்ப்பு தெரிவிக்குறாங்க? காரணம் அந்த gas எடுக்கப்படற Hydraulic fracturing என்ற முறை. ஹைட்ரோகார்பன் gas எப்பவுமே பூமியின் ஆழத்தில பாறைகளின் இடுக்கில்ல தான் இருக்கும். Hydraulic Fracturingல என்ன பண்ணுவாங்கனா, தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு இடத்துல பல்லாயிரம் அடி ஆழத்துக்கு போர் போடுவாங்க. இதுல செங்குத்தான போரிங், பக்கவாட்டு போரிக்னு இரண்டு முறை இருக்கு. போர் பண்ணி அதுக்குள்ள பலவகையான chemicals அ அந்த போர் வழியா விட்டு, ஹைட்ரோகார்பன் gasகள வெளிய எடுப்பாங்க.

நீர்வளமும் நிலவளமும் பாதிக்கப்படும் அபாயம்!

இந்த processla வெளியாகிற மீத்தேன் வாயு, சில நேரத்துல வெடிச்சு விபத்துக்குள்ளாகவும் வாய்ப்பு இருக்கு. பூமிக்கு அடியில நிலத்தடி நீர் இருக்க அளவை தாண்டி, போர் போட்டு chemical அனுப்புறதால, நிலத்தடி நீர் வீணாகவும், நீர் மட்டம் பாதாளத்துக்கு போகவும் வாய்ப்பிருக்கு. பல லட்சம் லிட்டர் தண்ணியும் இந்த திட்டத்துக்கு செலவாகும்.இதனால சுற்றியிருக்க பகுதியில நீர்வளமும், நிலவளமும் பாதிக்கப்படும். காற்று மாசு ஏற்படும். புவி வெப்பம் அதிகரிக்கும். இப்படி ஏகப்பட்ட பிரச்சனைகள் hydraulic fracturing மேல இருக்கு. 

நாட்டுக்கே சோறு போடற எங்க மண்ணுக்கு, இந்த திட்டம் வேணுமா?னு மக்களும், விவசாயிகளும் இதனாலதான் எதிர்க்குறாங்க.

காவிரி போன்ற ஒரு பெரிய நதிக்கரையோரம் இருக்குற நிலப்பகுதிகள பல்லாயிர வருஷங்களா படிமங்கள் சேர்ந்துருக்கும். அதனாலதான் டெல்டா பகுதியில ஹைட்ரோ கார்பன் வாயு கிடைக்குது.

டெல்டா பகுதியில இந்த ஹைட்ரோகார்பன் திட்டங்கள தவிர்க்கணும்னா தமிழக அரசு டெல்டா பகுதிகளை “பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் “ அ அறிவிக்கணும்னு சொல்லிட்டு விவசாயிகளும், அந்த பகுதி மக்களும் பல நாளா கோரிக்கை வச்சுட்டு இருந்தாங்க. ஒரு வழியா 2020 பிப்ரவரியில டெல்டா மாவட்டங்கள பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமா அறிவிச்சாரு, அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி.

இதுக்கு பின்னாடி ஒரு அரசியல் காரணமும் இருந்துச்சு. 2019 நாடாளுமன்ற தேர்தல் தோல்வி, உள்ளாட்சி தேர்தல்ல சரிவு, கஜா புயல் மீட்பு பணியில மக்களுக்கு ஏற்பட்ட அதிருப்த. இதையெல்லாம் சரி செஞ்சு தன்னுடைய செல்வாக்கை மீட்டெடுக்கனும்னு நினைச்சாரு எடப்பாடி பழனிசாமி. அதுக்காக இந்த சட்டத்த சட்டு சட்டுனு சட்டமன்றத்துல நிறைவேத்தி முடிச்சாங்க.

இந்த சட்டம் என்ன சொல்லுது?

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்கள்

தஞ்சாவூர், திருவாரூர், நாகை, கடலூர் மாவட்டத்துல சில பகுதிகள், புதுக்கோட்டை மாவட்டத்துல சில பகுதிகள் என மொத்தம் ஐந்து மாவட்டங்கள டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களா அறிவிக்குறாங்க. இந்த மண்டலத்துல விவசாய உற்பத்தி அதிகரிப்பு, பண்ணை உற்பத்தி அதிகரிப்பு, நீர் மேலாண்மை திட்டங்கள், வேளாண் பொருட்களை சார்ந்த தொழில்களை ஊக்குவிக்குறேனு பல வேளைகளை அரசு செய்யும். இதற்கு 30 பேர் கொண்ட அதிகார அமைப்பும், அந்த அமைப்புக்கு உதவ மாவட்ட குழுவும் அமைக்கப்பட்ருக்கு.

எதெற்கெல்லாம் தடை?

இந்த சட்டம் நடைமுறைக்கு வர நாள்ல இருந்து, இந்த மண்டலத்துல காப்பர்,அலுமினியம், ஜின்க, ஸ்டீல், இரும்பு ஆலைகள் தொடங்கமுடியாது. விலங்குகள் பதனிடும் தொழிற்சாலைகள், தோல் பதனிடுதல், கப்பல் உடைக்கும் தொழிற்சாலைகள் இங்க தொடங்க முடியாது. அதோடு சேர்த்து அனைத்து விதமான எண்ணெய் , ஹைட்ரோகார்பன் வாயுக்கள், அந்த வாயுக்களுடைய துளைத்தெடுத்தல், பிரித்தெடுத்தல் பணிகள் எந்த இடத்துல அனுபவிக்கபடாது அப்படினு எந்த சட்டம் சொல்லுது.

கேட்கவே நல்லாருக்குள்ள.

இந்த சட்டம் வந்துட்டா, இனிமே டெல்டா வந்து செழிப்பா இருக்குமே அப்படினு சொல்லிட்டு நமக்கு தோணலாம். ஆனா உண்மை அது கிடையாது. இதுல சில பிரச்சனைகளும் இருக்கு. என்னென்ன பிரச்சனைகள்? திருச்சி, கரூர், அரியலூர் இந்த மாவட்டங்கள் வந்து வேளாண் மண்டலத்துக்குள்ள இணைக்கப்படல. காரணம் , இங்கு அதிக தொழிற்சாலைகள் இருக்கு, தொழில் வாய்ப்புகள் இருக்கு அப்படினு அரசு அந்த நேரத்துல சொல்லிருந்தாங்க. இரண்டாவது பிரச்சனை என்னனா? புதிய எண்ணெய், ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு தான் அனுமதி இலையேன்னு சொன்னாங்களே தவிர பழைய activeஅ இருக்க திட்டங்களுக்கு தடைவிதிக்களை இந்த சட்டம்.

இதனால ஏற்கனவே ONGC எண்ணெய் கிணறுகளால விவசாயிகள் என்னென்ன பிரச்சனைகள் எல்லாம் சந்திச்சுட்டு வந்தாங்களோ, அந்த பிரச்சனைகள் தொடர்த்துடே தான் இருக்க போகுது. பழைய திட்டங்களுக்கும் சேர்தே தடை விதிக்கணும்ன்றது தான் விவசாயிகளுடைய கோரிக்கையா இருக்கு. அப்பதான் டெல்டா பகுதி முழுவதுமாக பாதுகாக்கப்பட்டத உணர முடியும் அப்படின்றது அவுங்க சொல்ற வாதம். மூணாவது பிரச்சனை என்னனா? காவிரி ஆற்று படுகையில மணல் குவாரிக்களுக்கான தடையை இந்த சட்டம் விதிக்கல. மணல் எடுக்க அனுமதிக்கப்படுது.

நிலத்தடி நீர்வளத்தை காக்க மணலுடைய பங்கு ரொம்ப முக்கியமானது. அப்படி இருக்கும்போது மணல் குவாரிகளுக்கு தடை விதிக்காதது பிரச்சனையா பார்க்கப்படுது. இதைத்தாண்டி அங்க சில நடைமுறை சிக்கல்கள் இருக்கு. ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு தடை விதிச்சது, தொழிற்சாலைகளுக்கு தடை விதிச்சது, இதெல்லாம் சரி. இது எல்லாமே ஒரு வகையில உபயோகமான விசயங்கள் தான். ஆனா அதைத்தாண்டி, விலைபொருளுக்கான சரியான விலை இல்லாம எப்படி வந்து விவசாயி அங்க வந்து விவசாயம் பண்ண முடியும். விவசாயம் லாபகரமான தொழிலாகவே இல்ல அப்படின்ற பட்சத்துல, விவசாயி எப்படி அதை தொடர்ந்து செய்வான் அப்படின்ற கேள்வி அங்க வருது. சரியான விலை கிடைக்க அரசாங்கம் அதற்கான ஏற்பாட செய்யணும்.

முன்னாடி ஒரு விவசாயிக்கு சரியான லாபம் இல்ல, விவசாயத்த தொடர்ந்து பார்க்க முடில அப்படினா, அந்த நிலத்தை இன்னோருத்தற்கு வித்துட்டு போயிருவாரு. இப்போ இந்த பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் கொண்டுவரப்பட்ட பிறகு, அந்த நிலத்தை விக்குறதுலையும் அவுங்களுக்கு ஒரு சிக்கல் ஏற்படுது. கடைசியில விவசாயமும் இல்லாம, நிலத்தை வித்தும் நம்மளால காசு பார்க்க முடியாம , நகரத்துக்கோ, வெளிநாட்டுக்கோ சொற்ப சம்பளதுக்கு வேலை பார்குற நிலைமை ஏற்படும்.

அடுத்த விஷயம், காவிரி தண்ணீர். சரியான நேரத்துல கர்நாடகவுல இருந்து காவிரி நீர் தமிழகத்துக்கு கிடைக்க வேண்டும். அப்பதான் விவசாயம் பண்ணமுடியும். அந்த உரிமையை அரசு வாங்கித்தரனும். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமா இந்த பகுதி அறிவிக்கப்பட்டபிறகும், நெடுவாசல ஹைட்ரோகார்பன் திட்டம் கொண்டு வர சர்வதேச டெண்டர் விற்றுக்கு இந்திய அரசு. இந்த பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் சட்டத்தையும் தாண்டி இந்திய அரசால அந்த திட்டத்தை கொண்டு வர முடியுமா? நிச்சியமா முடியாது.

மாநில அரசோட ஒத்துழைப்பு இல்லாம, எந்த விசயமும் இங்க நடக்காது.

மாநில அரசு, இந்த விசியத்துல ரொம்பவே ஸ்டராங்கா இருக்கும். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்துக்குள்ள வராத அரியலூர் மாவட்டத்துல 10 ஹைட்ரொ கார்பன் கிணறுகள் திறக்கறதுக்காக தமிழக அரசுகிட்ட அனுமதி கேட்ருக்கு ONGC நிறுவனம். தமிழக அரசு அந்த அனுமதியை கொடுக்கிற இடத்துல இருக்கு. எப்பவுமே பூமிக்கு அடியில நடக்குற எந்த ஒரு திட்டத்துக்கும் மத்திய அரசு Exploration and Production License கொடுக்கனும். அதுக்குப்புறமா Environmental clearance கொடுக்கனும். இதுக்கு அப்புறம் அடுத்த ஸ்டெப்பா தமிழக அரசுகிட்ட தான் அந்த நிறுவனம் வந்து நிக்கனும்.

தமிழகத்துடைய Pollution Control Board அதாவது மாசு கட்டுப்பாடு வாரியம், அவுங்க ஒரு அனுமதியை கொடுக்கனும். நிலம், நீர், காற்று, மின்சாரம், சாலைவசதிகள் இது எல்லாமே தமிழக அரசுடைய மாசு கட்டுப்பாட்டுவாரியத்தின் கட்டுபாட்லா வருது. இங்கனு கிடையாது, தமிழ்நாட்ல எந்த இடத்துலையுமே மாசு கட்டுப்பாட்டு வாரியத்தோட அனுமதி இல்லாம எந்த ஒரு திட்டமுமே செயல் படுத்த முடியாது. இருந்தாலும் தமிழ்நாட்டுக்குள்ள ஹைட்ரோகார்பன் திட்டங்களை நுழைய விடக்கூடாது அப்படினா தமிழக அரசு உடனடியா சட்டமன்றத்தை கூட்டி, ஒரு கொள்கை முடிவு எடுக்கனும் அப்படினு சொல்றாங்க சூழலியல் செயற்பாட்டாளரும், மக்கள் உரிமை இயக்கங்களும்.

அப்பதான் இந்த ஹைட்ரோகார்பன் திட்டத்தை உள்ள நுழைய விடமாட்டோம்னு சொல்ற வலுவான நிலையில நம்மள நிறுத்தி வைக்க முடியும்னு சொல்றாங்க. எந்த ஒரு அரசாங்கமா இருந்தாலும் சரி, அவுங்க இந்த ஹைட்ரோகார்பன் திட்டங்களை, தேச வளர்ச்சிக்கான நலனாகத்தான் பார்க்குறாங்க. அதே நேரம் இன்னொரு புறம் மக்களும், விவசாயிகளும் தங்களுடைய வாழ்வாரத்தையும், சுற்றுசுழலையும் சீரழிக்குற ஒரு விசயமா தான் இத எதிர்க்குறாங்க. தேச நலன் தான மக்கள் நலன் அப்படினு சொல்லிட்டு நீங்க ஒரு வாதத்தை வைக்கலாம். அவுங்க சொல்ற தேச நலனுக்கும், மக்களுடைய நலனுக்கும் நிறையவே வேறுபாடுகள் இருக்கு.

தேச நலனா! மக்கள் நலனா!

முடிவு உங்க கையில இருக்கு.

உங்கள் நேரத்தை வீணடிச்சுருக்கா மாட்டேன்னு நினைக்குறேன்.

மீண்டும் அடுத்த ஒரு முக்கியமான விசியத்தை ஆராயும் வரை விடைபெறுவது உங்கள் லோகன்.

credits: RAMYA & Vikatan

Leave a Reply