ஒரே ஒரு பெயர்…..
ஒரே ஒரு படம்…..
ஒரே ஒரு நடிகர்…..
இது மட்டும் தான் தெரியும்.
தல அஜித் Valimai…

Valimai Update
International Level ல பேசக்கூடிய ஒரு Topic – Valimai update தான். பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், cricket எங்கயாவது நடந்துச்சுனா, தமிழக election, இப்படி எல்லா நேரத்துலையும் Valimai Update என்பது மிக பெரிய அளவுல ட்ரெண்டிங்கா இருந்துச்சு, பேசும் பொருளா இருந்துச்சு, மிக முக்கியமான டாபிக்கா பல நபர்களால் விவாதிக்கப்பட்டது.

Marketing Strategy
ஒரு படத்திற்கு இவளோ பெரிய மார்க்கெட்டிங் எப்படி வந்தது. தல அஜித், தளபதி விஜய் இவங்கள நாம compare பண்ண போகல. இந்த டீம்…. இதற்கு பின்னாடி இருக்கக்கூடிய Marketing Strategy என்ன ? உண்மையிலே Valimai Update க்கு பின்னாடி Marketing Strategy தான் இருக்கா. Valimai Update என்ன? என்பதை பின்வருமாறு பார்ப்போம்
.

படம் என்றாலே அந்த படத்தை மார்க்கெட் செய்வதற்காக பட்ஜெட்டில் இருந்து 50% – 65% பணம் மாற்றி வைக்கப்படும். ஒவ்வொரு பொருளும், ஒரு Service அ இருக்கட்டும், ஒரு Product அ இருக்கட்டும் (அ) ஒரு படமாக இருக்கட்டும், இது பெரிய அளவுல சக்ஸஸ் ஆகணும்னா Market பண்ணனும். பல நபர்களிடம் கொண்டு சேர்க்கவேண்டும். இந்த கொண்டுசேர்க்கும் வேலையை தான் Marketing செய்யுது.

எப்படி எல்லாம் Marketing செஞ்சுருக்காங்க!

Marketing என்பது பழைய காலத்தில் எல்லாம் ஊர் ஊராக சென்று சொல்வார்கள். படத்திற்கான மார்க்கெட்டிங் பற்றி மட்டும் நாம பேசலாம். மார்க்கெட்டிங் என்பது ஒவ்வொரு ஊராக இந்த திரையரங்கில் இந்த படம் வரப்போகிறது என்று சொல்லுவாங்க. அதன் பிறகு துண்டு பேப்பர்களில், அதாவது பிரசுரங்களில், Bit Notice வழியாக அறிவிக்கப்பட்டது.

அதன் பிறகு சுவரொட்டிகள் வழியாக அறிவிக்கப்பட்டது. அப்படியே ரேடியோவில் சொல்றாங்க, டிவில சொல்றாங்க, அப்படியே Newspaper எல்லாருடைய கைக்கும் வருது அதில் சொல்லப்படுகிறது, அப்புறம் Internet வருது. இப்போ Agumented Reality Game. இது வழியாக பலவிதமான டெக்னாலஜி, இல்ல Marketing Strategy என்பது ரொம்ப பெரிய வளர்ச்சி அடைந்து வருகிறது.
.

Marketing Strategy ல மிக பெரிய நாட்டம் இருபவர்களால தான் ஒரு படத்தை வெற்றி அடைய செய்யமுடியும். உதாரணத்திற்கு Death Pool அப்படினு ஒரு படம். மிகப்பெரிய அளவில் famous ஆனா, success ஆனா ஒரு படம். அப்படத்தில் நடித்த நடிகர் பார்க்க மிகவும் அழகாக இருப்பார். ஆங்கில திரைப்படங்களில் அவருக்கு Call Sheet கிடைப்பது என்பது மிகப்பெரிய விஷியம். அதே போல் அவரின் அழகை ரசிக்க ஒரு இளைஞர் பட்டாளமே இருந்துச்சு.

இந்த Death Pool character பொறுத்த வரைக்கும் உண்மையான face வெளில தெரியாது. இது தான் அந்த படத்துக்கு மிகப்பெரிய marketing. அவர் face க்கு value இருக்கு. ஆனா இவர் face காமிக்காம ஒரு cartoon character மாதிரி நடிச்ச எப்படி இருக்கும்? இந்த மாதிரி ஒரு மார்க்கெட்டிங் அங்கே செய்யப்படுகிறது.

அடுத்ததா Captain America என்ற படம் Avengers ல நீங்க பார்த்துருப்பீங்க. இந்த படத்துக்கு எந்த மாதிரியான Marketing Strategy பயன்படுத்துகிறார்கள் என்று கேட்டால், 2 பிரிவுகளா மக்களை பிரிப்பது தான். ஒரு பிரிவு நீங்க Captain America பக்கமா? இல்ல Iron Man பக்கமா? யார் பக்கம் என்பதில் தான் இந்த Civil War என்னும் படத்திற்கான மார்க்கெட்டிங் தொடங்குகிறது.

எனவே பல நபர்களை target பன்றாங்க, சில நபர்களை group பன்றாங்க. சில நபர்களிடம் வேறு விதமான எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறார்கள். இது எல்லாமே ஒரு விதமான marketing அப்படினு சொல்லலாம். இதுநாள் வரையில் தமிழ் சினிமாவில் இப்படி ஒரு marketing யாருமே செஞ்சுருக்க மாட்டாங்க. பலூனில், பெரிய பெரிய பேனர் அடிச்சு, பெரிய பெரிய போஸ்டர் அடிச்சு, இல்லாட்டி பெரிய அளவுல நிறைய பேர் மொட்டை போட்டு, இந்த மாதிரியான மார்க்கெட்டிங் அப்படின்றது நடந்துருக்கு.
First Look, Motion Poster இது புதுசு
ஆனா ஒரு படத்துக்கு Motion Picture (அ) Motion Poster என்பது வரவில்லை, First Look என்பது வரவில்லை. அந்த படத்தின் update எதுமே கடந்த 600 தினங்களாக சரியா வெளிவரவில்லை. எப்படி இருக்கும் தருணத்தில் இந்த படத்திற்கான எதிர்ப்பார்ப்பு எப்படி எகிறியது. 210 கோடி ரூபாய்க்கு அவர்களுடைய rights மட்டுமே, Satellite, Digital ஐ விற்றிருப்பதாக சொல்கிறார்கள். அவளோ பெரிய amount கொடுத்து இந்த படத்தை வாங்க வேண்டும் என்றால், அதனுடைய எதிர்பார்ப்பு எந்த அளவுல இருக்கும்னு பார்த்துக்கோங்க.
.

வெறும் 25 கோடி ரூபாய் Budjet னு சொன்னாங்க. ஆனா அதன் பிறகு இந்த பட்ஜெட் பற்றியோ, அதில் எவ்வளவு தூரம் stunt வந்துருக்கு ?, எத்தனை பாடல்கள் இருக்கு, இது எதுமே வெளில வரல. So, நல்லா புரிஞ்சுக்கிட்டீங்கன்னா இதில் இருக்கும் Marketing, மக்கள் வழியாக மட்டுமே சென்றிருக்கிறது.அத கொஞ்சமா fire பண்ணிவிட்ருக்காங்க அப்படினு சொல்லலாம்.
படங்களுக்கு Marketing

Game of Thrones அப்படின்ற Series பற்றி உங்க எல்லாருக்குமே தெரியும். இந்த series அ மிகப்பெரிய அளவில் மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக அவர்கள் என்ன செய்றாங்கன்னா, கடற்கரை ஓரமாக நிறைய Dragon னின் எழுப்புகள், மண்டை ஓடுகள் போல செஞ்சு வைக்குறாங்க. இப்படி செலவுகள், நிறைய செட்டு போட்டு, நிறைய விதமான கேம் ஷோ நடத்தி, Pad Man அப்படின்ற ஒரு படம் (அ) கதை, அந்த படத்தை வெற்றிகரமா மாற்றுவதற்காக Pad Man Challenge என்னும் challenge Twitter வழியாக ஏற்படுத்தப்படுகிறது.

3 Idiots படத்தை market பண்றதுக்காக, மூன்று விதமான Marketing Strategy Amirkhan use பயன்படுத்தினாருனு சொல்லுவாங்க. ரொம்ப பெரிய sucess ஆனா பல ஹிந்தி படங்களும் எப்படி marketing செய்யப்பட்டது என்று கேட்டீங்கன்னா, அந்த படம் வெளிவருவதற்கு முன்பாக கிட்டத்தட்ட 2, 3 மாதங்களுக்கு முன்பாகவே அவுங்க marketing பண்ண தொடங்கிருவாங்க.

கரெக்டா பார்த்தீங்கன்னா, IPL Season தொடங்குவதற்கு முன்பாக அவுங்க marketing அரமிச்சு, IPL விளம்பரத்துடன் அந்த படத்தை பற்றிய update கொடுத்து படத்தின் Hype அ ஏத்திவிடுவாங்க.
.

Father’s day, Mother’s day வருதுன்னா அந்த படத்தில் இருக்கும் ஒரு போஸ்டர் எடுத்து Father’s day caption அ மாதிருவாங்க. Twitter க்கு சின்னதா ஒரு Emoji create பண்ணி அந்த படத்திற்கு ஒரு Marketing Strategy அ பயன்படுத்துவார்கள். Facebook ன் filter ஆக இந்த படங்களை பயன்படுத்தி ஒரு Marketing Strategy பயன்படுத்துவார்கள்.

இவ்வளவு தூரம் சொன்ன Marketing Strategy எதையுமே பயன்படுத்தாம நிற்பது தான் Valimai எனும் Thala Ajith Kumar படம். Spiderman 2 எனும் படத்தை எடுத்து பார்த்தீங்கன்னா, 200 மில்லியன் அமெரிக்கன் டாலர் அத எடுக்குறதுக்கு செலவு ஆச்சு, ஆனா 100 மில்லியன் அமெரிக்கன் டாலர் அத மார்க்கெட் பண்றதுக்காக செலவு ஆச்சு. Star Wars, The Force Awakens அப்படின்ற படம் 200 மில்லியன் செலவு ஆகுது, 230 மில்லியன் Marketing ஆகா மட்டுமே செலவு பன்றாங்க.

So, Valimai படம் 25 கோடி ரூபாய் செலவு ஆகுது, அப்போ Marketing காக Extra 25 கோடி, 50 கோடி ரூபாய் செலவு பண்ணங்களா அப்படினு கேட்டா 0% 0 செலவு அப்படினு சொல்லலாம் அவுங்க Marketing Strategy. Valimai எத்தனை கோடி ரூபாய்ல உருவாகுதுனு இதுவரைக்கும் யாருக்கும் தெரியாது. ஆனா 200 கோடி ரூபாய்க்கு சின்ன business நடந்து முடிஞ்சுருச்சு. இன்னும் rights இல்லாட்டி Online இல்லாட்டி எத்தனை கோடி ரூபாய் கொடுத்து வாங்குறதுக்கு தயாராக இருக்கக்கூடிய பல நபர்கள், பல விதமான நிறுவனங்கள் இருந்து வருகிறது.
இவை அனைத்துக்கும் பின்னாடி இருந்தது கொரில்லா மார்க்கெட்டிங் தான். எப்பவுமே, DMK Advertisement வருதா, ADMK Advertisement வருதா அப்படினு சொன்னா கொரில்லா மார்க்கெட்டிங் அ புரிஞ்சுக்கோங்க எனும் ஒரு முக்கியமான தகவலை பதிவு செய்கிறேன். ஆனா கொரில்லா மார்க்கெட்டையும் overcome பண்ற அளவுக்கு இப்ப இந்த மார்க்கெட்டிங் வந்து நிக்குது அப்படினு சொல்லலாம்.

இவ்வளவு நேரம் நான் சொன்ன விசியங்கள் எல்லாம் உங்க மனசுல இருக்கட்டும். இப்போதான் Valimai Update என்பதற்கான எதார்த்த நிலைமைக்கு நாம வர போறோம். இந்த Marketing Strategy (அ) Marketing Plan இத போடறதுக்கு முன்னாடி இரண்டு விசியங்களை Marketing Team Analyze பண்ணுவாங்க.

ஒன்னு Target Population என்பது தான். இது யாருக்கு எதிரான, யாருக்கான படம்?, யாருக்கான சர்வீஸ்?, யாருக்கான product? அந்த population அ target பண்றது. இரண்டாவது, Test Your Audience என்பது தான். அந்த population அ test பண்ணனும். இப்போ target Auidence யாரு? Valimai படத்தை பொறுத்த வரைக்கும் Target Audience அ இருந்தவங்க தல அஜித் குமார் அவர்களின் Fans அ இருந்தாங்க.

படத்திற்காக இந்த மாதிரி Motion Poster வரும், First Look வெளியிட போகிறோம் அப்படினு சொல்லி அவுங்கள test பன்றாங்க. அப்படி Test பண்ணும் போது இதுநாள் வரைக்கும் தளபதி விஜய் அவர்களின் அந்த ஒரு ட்ரெண்ட் செட் தான் ட்ரெண்டா (அ) ஒரு பெஞ்ச் மார்க்க இருக்கும் போது, அதை முறியடிக்க வேண்டும் என்று சொல்லி அஜித் குமார் அவர்களின் Fans ட்ரை பன்றாங்க. So, அந்த testing ல இவுங்களுக்கு ஒரு விஷியம் புரிஞ்சுருச்சு. Valimai அப்படின்ற படத்துக்கு மிகப்பெரிய ஆதரவு இருக்குனு.
Marketing Strategy
அடுத்ததாக இவுங்களுடைய Marketing Strategy, அதாவது Population அ target பண்ணியாச்சு, Test பண்ணியாச்சு, இந்த test ல மக்கள் பெரிய அளவுல எதிர்பார்ப்போட இருக்குறாங்க அப்படினு தெரிஞ்சுருச்சு. இவர்களுடைய Marketing Strategy ஐ தேர்வு செய்ய போகிறார்கள். இவர்களுடைய Marketing Strategy, Over Marketing Strategy ஆக மாறிவிட்டதாம்.

Valimai என்பதை அவுங்க Marketing பண்ணாமலே அது Over Hype அ மாறிடுச்சு. Over Hype அ இருக்கனால நிச்சயமா அந்த படத்தை பல கோடி ரூபாய் கொடுத்து வாங்குவாங்க, ஆனால் அதனால் வரக்கூடிய விமர்சனத்தால் இந்த படம் பாதிக்குமா என்று கேட்டால் அதுவும் கத்தி மேல் நடக்கும் மனிதர்களின் நிலைமை தான். அந்த பக்கமும் சாயலாம், இந்த பக்கமும் சாயலாம்.

இந்த Team செய்யாத Market என்ன? Paid Marketing என்பதுதான் First Level Marketing. எல்லாருக்குமே நிறைய நிறுவனங்களுக்கு, நிறைய TV Channels க்கு, எல்லாருக்குமே பணம் கொடுத்து மார்க்கெட் பண்ண சொல்லுவாங்க. இந்த Paid Marketing அ Valimai Team இன்னும் செய்ய ஆரமிக்கவில்லை. Over Hype அ மாறினதுக்கு Paid Marketing தான் காரணமா? என்றால் கிடையாது.

அடுத்ததாக இருக்கக்கூடியது Curse Marketing. உதாரணத்துக்கு IPL match நடக்குது.அந்த IPL match ஐ முன்னிலை படுத்தி தன்னோட படத்துக்கு Marketing பண்றது போன்ற strategy பயன்படுத்தினார்களா என்றால் இல்லை. மிக முக்கியமா Pandemic (அ) அடுத்த அலை வந்துவிட்டது, அதனால நாங்க Marketing பண்ண விரும்பல என்று சொன்ன தருணம் இந்த Marketing அ ஒன்னும் இல்லாம செஞ்சிருச்சு Valimai படத்தின் Update.

மூன்றாவதாக இருப்பது Relationship Marketing. வேறு ஏதாவது product கூட, உதாரணத்துக்கு விமானத்தில் கபாலி படத்தின் poster ஓட்டபட்டிருக்கும். இந்த மாதிரியான Marketing valimai க்கு செய்தார்களா என்றால் கிடையாது.

அடுத்ததாக மிக முக்கியமாக இந்த Geurilla Marketing இல்லாட்டி Marketing னு எடுத்து பார்த்தாலே, Undercover Marketing அப்படினு சொல்லுவாங்க. அதுக்கு சிறந்த எடுத்துக்காட்டு Ronald அவர்கள்.

Ronald அவர்கள் அந்த Press Meet கொடுக்கும் போது, Coco Cola Bottle எடுத்து தள்ளி வைக்கிறார். Drink Water அப்படினு சொல்றார். இதனால Coco cola நிறுவனத்திற்கு மிக பெரிய இழப்பாக மாறிவிடுகிறது.இது ஒரு Under cover Marketing அப்படினே சொல்லலாம். அங்கு Ronald அவர்கள் Coco cola க்கு பதில் வேறு பானத்தை குடித்திருந்தால் அந்த பானம் மிகப்பெரிய sucess அடைஞ்சுருக்கும். இது தான் Coco Cola க்கு எதிரான ஒரு Undercover operation இல்லாட்டி Marketing அப்படினு செய்யப்படுது. இது தண்ணீர்க்கு நடந்த மார்க்கெட்டிங் அப்படினு கூட சொல்லலாம்.இந்த மாதிரியான Marketing ஏதும் Valimai க்கு நடந்ததா என்றால் அதுவும் கிடையாது.
.

அடுத்ததா Diversity Marketing அப்படினு சொல்லுவாங்க. Particular அ, இந்த region ல இருக்கவங்க மட்டும், இப்போ இந்தியாவில இருக்கிறவர்களை மட்டும் இது கவர்ந்த போதும். உலகத்தில் அமெரிக்காவிற்கு மட்டும் இது போனால் போதும், இப்படின்ற Region Based Marketing இங்க செய்யப்பட்டிருக்கிறதா என்றால் அதுவும் இல்லை.

அப்படினா கடைசியாக இருப்பது Word Of Mouth Marketing என்பது தான். Fans எல்லாரும் Valimai Update என்று சொல்லி சொல்லி ஒவ்வொரு நபர்களும் கேட்க கேட்க, இதை Valimai team செஞ்சதா, இல்ல valimai team காக தல அஜித்குமார் அவர்களின் Fans செஞ்சர்களா என்பது கேள்வி குறி தான்.

ஆனா யாரோ initiate பன்னிட்டாங்க, இப்போ அது தீப்பற்றி எரிகிறது. Word of mouth என்கிற இந்த ஒற்றை strategy, இந்த Marketing Strategy ல தான் valimai என்பது Marketing level அ உயர்ந்து நின்றது, இதுநாள் வரைக்கும் வைக்கப்பட்ட Bench Mark எல்லாத்தையும் கடந்து நிற்கிறது. Over Hype level க்கு மாறி நிற்கிறது அப்படினு சொல்லலாம்.

இந்த Word of Mouth Marketing ல Ambush Marketing என்பதும் இருக்கும். ஒரு இடத்தில ஒரு விஷியம் நடந்துட்டு இருக்கலாம், ஆனா அந்த விஷியத்துக்கு சம்பந்தமே இல்லாமல் வேறு ஒரு விஷியம் பேசினால் அது தான் Ambush Marketing. IPL Match நடந்துட்டு இருக்கு. அந்த இடத்துல Valimai க்கான Update கேட்டு ஒரு போஸ்டர் வருது. இதை தான் Ambush Marketing என்று சொல்கிறார்கள். இந்த Marketing உம் அங்கே நடைபெற்று கொண்டிருக்கிறது. ஆனா இதுக்கு பின்னாடி Marketing Team என்பது இல்ல. Marketing Fans அப்படின்றவங்க இருக்காங்க.

பாகுபலி, மிகப்பெரிய பொருட்செலவுல எடுக்கப்பட்ட ஒரு படம். அந்த படத்தை Market பண்றதுக்காக அப்பப்ப நடக்குற எல்லா விசயத்தையும் அந்த team members அவுங்களுடைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்தார்கள். நிறைய Hollywood Characters, அந்த படத்துல நடிக்குறாங்கனா, அந்த character ஆக மாறி , அந்த character பெயரையே அவர்களோட Profile Pic, Profile Name ஆக எல்லாம் வைப்பாங்க.

இப்படி பலதரப்பட்ட மக்களை பார்த்த இந்த உலகிற்கு Valimai அப்படின்ற இந்த படம் மிகப்பெரிய அளவில் ஒரு சவாலைக் கொடுத்திருக்கிறது. இதை மீறி யாராவது Marketing செய்ய முடியுமா? இதையும் மீறிய Marketing ஏதாவது இருக்கா என்பது தான் Valimai வைத்திருக்கும் கேள்வி.

Marketing நுணுக்கங்களை பற்றி படிக்கக்கூடிய Youngsters இருக்கீங்க. இந்த marketing எப்படி எப்படி வேளை செய்கிறது என்பதை தெளிவாக படிங்க. நாம் பேசிய அத்தனை Strategy யும் நீங்க கொஞ்சம் யோசிச்சுப் பார்த்திங்கனா, நாம் முன்னாடி ஜெயித்த, தோற்ற படங்கள், எப்படி நடந்தது என்ற Marketing உங்களால புரிந்துக்கொள்ள முடியும். நாளைக்கு நாம மிகப்பெரிய Business Man ஆக மாறுறதுக்கான வாய்ப்புகள் இருக்கு. Marketing காண value என்னனு புரிஞ்சுக்கோங்க. உங்களுடைய Product, Serivce sucess ஆக வேண்டுமென்றால், Marketing என்பது ரொம்ப important அ இருக்கு, அவற்றிலும் முக்கியமானது Digital Marketing.

Valimai படத்தின் இந்த Marketing அப்படின்ற Bench Mark அ யாரு முறியடிக்க போறாங்க. தளபதி விஜய் அவர்களின் fans இப்பவே தயாராகிட்டு இருக்காங்க. பார்க்கலாம் அடுத்த விதமான Marketing Strategy இருந்தால் உங்களுடன் பகிரப்படும்.
நல்லதை பகிர்வோம்! நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
உங்கள் லோகன்.
credits: Ramya & VIKI