தளர்வுகளுடன் கூடிய Lockdown…..

மறுபடியும் ஜூலை 5 வரை தமிழக அரசாங்கம் அறிவிசுட்டாங்க… அடுத்தது என்ன ? Delta Plus அப்படின்ற அந்த ஒரு வைரஸ். Mutation காக எல்லாருமே காத்துருக்காங்க. அத எப்படியாவது தடுக்க வேண்டும் அப்படின்றத்துல தீவிர முயற்சிகள் எடுத்துட்டு இருக்காங்க அப்படிங்கிறது வேற ஒரு உண்மையா இருக்கு. இந்த delta plus அப்படிங்கிற varient இங்க மட்டும் தான் இருக்கா? உலகத்துல எங்கலாம் இருக்கு? Israel ல வந்த புதிய மாற்றம் என்ன? அத தான் இந்த பதிவுல பார்க்கப்போகிறோம்.

வைரஸ்கள் பலவிதம்

உலகத்துல எல்லாருமே இப்ப ரொம்ப பெரிய அளவுல இப்ப பேசிட்டு இருக்குறது இந்த virus தான். அதுலையும் Delta, Gamma, இல்லாட்டி Alpha, Lambda இந்த மாதிரி வைரஸ்க்கு எல்லாம் பேர் போட்டு அந்த virus எங்கங்க இருக்கு? எந்த அளவுல இருக்கு? அப்படின்றத பேசுறதே ஒரு பெரிய விசயமா மாற்றப்பட்டிருக்கிறது. 

இதுல மிகப்பெரிய அளவுல Olympics நடத்த போறேன்னு சொன்ன ஜப்பான இருக்கட்டும், இல்ல நாங்க கட்டுப்படுத்திட்டோம்னு சொன்ன சீனாவா இருக்கட்டும், எல்லாருக்கும் vaccine போட்டுட்டோம்னு சொன்ன இஸ்ரேலா இருக்கட்டும், எல்லாருமே கொஞ்சமா தவித்து வருகிறார்கள் அப்படினு சொல்லலாம்.

கொரோனாவின் பிடியில் இஸ்ரேல்

Israel ல முக்கியமா, எல்லா நாடுகளும் இஸ்ரேலை பார்த்து மிகப்பெரிய கேள்வி எழுப்பினார்கள். நீங்க எல்லாருக்கும் vaccine போட்டுட்டீங்களா ? அப்படினு சொல்லும் போது, ஆமா! போதுமான அளவு நாங்க எல்லாருக்கும் vaccine போட்டுட்டோம். கிட்டத்தட்ட ஒரு 50ல இருந்து 60 லட்சம் நபர்களுக்கு நாங்க vaccine எடுத்துகிட்டோம். மீதமிருக்கும் குழந்தைகள் கொஞ்சம் நபர்கள் இருக்காங்க. கொஞ்சம் மாணவர்கள் இருக்காங்க. அவுங்களுக்கும் சீக்கிரமா vaccination போட்ருவோம் அப்படினு சொன்னாங்க.

Delta plus – 3rd Wave வந்துருச்சா?

மூன்றாவது அலை இந்தியாவில் வீசுகிறதா? அப்படின்ற ஒரு கேள்விக்கு இல்லை அப்படிங்கிறது ஒரு பதிலா வந்துருக்கு. so, இந்த மூன்றாவது அலை + Israel னுடைய vaccine. இத இரண்டையும் நாம கம்பைன் பண்ணி பார்க்கும்போது, Israel Vaccine போட்ட பிறகு, இப்ப குழந்தைகளுக்கு, குறிப்பா மாணவர்களுக்கு அங்க 2,3 ஸ்கூல குறிப்பா 45க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கொஞ்சமா கொரோனா தொற்று இருப்பதற்கான வாய்ப்புகள் இருக்கு அப்படினனு சொன்னாங்க. 

Vaccine போட்டாலும் Mask போடாட்டியும் கொரோனா?

ஆனா Delta Plus Varient அப்படிங்கிறது சீக்கிரமா பரவி வருவதால், யாருமே இனி Mask போடாம வெளிய போகவேண்டாம்.அப்படின்ற அறிவிப்பு வந்துருச்சு. ஜூன் 15 ஆம் தேதிதான், நீங்க மாஸ்க் போடலைனா கூட பரவாயில்லை, Israel safe அப்படிங்கிற மிகப்பெரிய அறிவிப்பு எல்லாமே வந்துச்சு. இத நம்பி இந்தியால இருக்கக்கூடிய நபர்கள் கூட என்ன செய்றங்கனா, நான் தான் இரண்டு டோஸ் vaccine போட்டுட்டேன்ல, இனி மாஸ்க் இல்லாம கூட வெளில சுத்தலாம்ல, அப்படினு சொல்லி சுத்த அராமிக்குறாங்க. இது ரொம்ப ரொம்ப ரொம்ப தப்பு. 

இப்ப எல்லாருமே இந்த மாஸ்க் போட்டதுனால, இல்லாட்டி இரண்டு vaccine போட்டதுனால கொரோனா வைரஸ்யை கட்டுப்படுத்த முடியும்னு சொல்லி நம்பிட்டு இருக்கோமே தவிர, அதுல பூரண success அப்படின்றது நமக்கு கிடைக்கல. இரண்டு டோஸ் vaccine போட்டவங்களுக்கும் இந்த virus பாதிப்பு என்பது வருகிறது, Mask, டபுள் மாஸ்க் போட்டவங்களுக்கும் இந்த virus பாதிப்பு என்பது வருது. so, இதுல மாஸ்க் போடாம சுத்தினா என்ன நடக்கும்னு தெளிவா நீங்க யோசிச்சுக்கோங்க.

Delta போய் Delta Plus வந்தாச்சு

இந்த DeltaPlus அப்படினு சொல்லும் போது இல்லைனா AY.1 அப்படினும் சொல்லி அழைக்கிறார்கள். நாம இத முதலையே பார்த்தோம், Delta Vs DeltaPlus அப்படின்ற வைரஸ் அப்படினு எல்லாம் நாம பார்த்தோம். இதுல இருக்க Mutation, சீக்கிரமா பரவுவதற்கான வாய்ப்புகள் இருக்கு, நிறைய பேருக்கு இது பரவுவதற்கான வாய்ப்புகள் இருக்கு அப்படினு சொன்ன மாதிரியே, இந்தியால இப்போ 11 மாவட்டங்களுக்கு இப்ப Delta plus அப்படிங்கிறது வந்துருச்சு. கிட்டத்தட்ட 48 நபர்களுக்கு பரவிருச்சு. தமிழ்நாட்டை நாம எடுத்துகிட்டோம்னா 3ல் இருந்து 5 நபர்களுக்குள் இருக்கலாம் அப்படினு சொல்லிருக்காங்க. So, தமிழகத்துல Delta Plus varient அப்படின்றது வந்துச்சுனா, நிச்சியமா, ஒரு நபருக்கு வந்தா கூட அந்த ஏரியா Containment Zone அ மாத்திரலாமா? அப்படின்ற யோசனையில் கூட இருக்கிறார்கள். 

கோரத்தாண்டவம் ஆடும் Delta Plus

So, இங்க Delta Plus அப்படினு சொல்லும் போது மஹாராஷ்டிராவில் இது கோர தாண்டவம் ஆடுதுனு சொல்லலாம். மஹாராஷ்டிராவில் 3 கோடிக்கு மேற்பட்டோர்க்கு தடுப்பூசி போட்டுட்டாங்க. இன்னும் 3 மாதத்தில் நாங்க எல்லாருமே vaccine எடுத்துருவோம் அப்படினு உறுதி அளிக்குறது மகாராஷ்டிரா.

டெல்லியா இருக்கட்டும், இல்லாட்டி நாம நாட்டுக்கு கிட்ட இருக்கிற அண்டை நாடுகளா இருக்கட்டும், எல்லா இடங்களையும் இந்த Delta Plus அப்படின்றது கொஞ்சம் கொஞ்சமா அதனுடைய கால் தடத்தை பதித்துவருகிறது. So, நாம நினைக்குற மாதிரி இந்த கொரோன வைரஸ்யை கட்டுப்படுத்திரலாமா அப்படினு யோசிக்கும் போது, நல்லா யோசிச்சு பார்த்தீங்கன்னா, கொஞ்சம் நாட்களுக்கு முன்பாக, இது பிரேசில்ல இருந்து வந்தது, அதாவது பிரேசிலோட varient அப்படினு சொன்னாங்க. அடுத்ததா South Africa Varient அப்படினு சொன்னாங்க.

அலட்சியம் ஆபத்து!

இந்தியன் varient, அது தான் நாம Delta அப்படின்றத பார்த்தோம். மறுபடியும் Delta Plus அப்படின்றது வந்துருக்கு. So, ஒவ்வொரு காலகட்டத்துக்கும் இது வேற வேற mutation நடந்து, வேற வேற பெயரில் அறியப்படுகிறது. இப்படி ஒட்டுமொத்தமா நாம வாழ்கை கூடவே வந்துவிடும் அப்படின்ற எண்ணத்தில் மனிதர்கள் அவர்களுடைய வாழ்க்கையை நடத்த ஆரமிச்சுட்டாங்க. இந்த நடத்துதல் அப்படினு சொல்லும் போது, இதுல அலட்சியம் வராமல் இருந்தா நிச்சியமா இதுல இருந்து success ஆகி வெளில வந்தரலாம். Suppose, அதான் எல்லா varient டும் வந்துட்டே இருக்கே, நாம எதுக்கு இதல்லாம் செய்யணும்னு நினைச்சுட்டோம்னா, நிச்சியமா இது பெரிய ஒரு பாதிப்பை ஏற்படுத்தும். இந்த பாதிப்பு அப்படினு சொல்லும் போது, நம்மள மட்டும் பாதிக்காது, entire world அ பாதிக்கும் அப்படினு சொல்லலாம். 

வெளிநாடுகளில் இருந்து வருவோர் மூலம் கொரோனா ! உஷார் மக்களே !

இந்தியா, இந்தியாவோட அரசாங்கத்தின் சார்பாக ஒரு அறிவிப்பு வெளில வந்துருக்கு. இதில் நாம உற்று கவனிக்க வேண்டியது, வெளிநாடுகளில் இருந்து இந்தியாக்கு வரக்கூடிய நபர்களை தான் அப்படினு சொல்லி, ஐயா ராசக்ககலா! அத உண்மையிலே கொஞ்சம் கவனிங்க. இதுதான் மெயின் problem. வெளிநாடுகளில் இருந்து இந்தியாக்கு வரக்கூடிய நபர்கள்,அதே நேரத்துல இந்தியால இருந்து யார் வெளிநாட்டுக்கு போனாலும், இல்ல உங்க நாட்ல இருந்து வேற எந்த நாட்டுக்கு போனாலும், இனி restrictions அப்படின்றது கொஞ்சம் கூடுதலா இருக்க போகுது. 

ஒவ்வொரு நபர்களும் ஒவ்வொரு விதமான vaccine போடறாங்க. சில vaccines சில நாடுகள்ல ஓகே சொல்லிருக்காங்க, சில நாடுகள் வேண்டாம் அப்படினு சொல்லிருக்காங்க. So, இந்த vaccine குறைப்பாடு, அங்க போய் quarantine இருக்குறது, இல்லாட்டி அங்க இருக்குற சில விதமான விதிமுறைகள், இதை எல்லாம் பின்பற்றக்கூடிய நபர்கள் மட்டும்தான், இனி வெளிநாடுகளுக்கு  செல்ல முடியும் அப்படின்ற ஒரு நிர்பந்தம் ஏற்படுத்தப்படும்.

 இன்னைக்கு இந்தியா அரசாங்கமும் வேற ஒரு அறிவிப்பு குடுத்துட்டாங்க. நீங்க vaccine போற்றுகீன்களா? அப்படி போட்ருந்தா உங்க பாஸ்ப்போர்ட்ல vaccine பாஸ்ப்போர்ட்டா மாற்றுவதற்கான link எல்லாமே கொடுக்கப்பட்டுவிட்டது.

So, இந்த Delta Plus வந்துருச்சு, அப்படினா இது 3வது அலையா? அப்படினு சொல்லி நம்ம இந்தியா அரசாங்கத்திடம் கேட்கப்படுகிறது. கண்டிப்பா கிடையாது. 2வது அலை முடியவே இன்னும் ரொம்ப தினங்கள் இருக்குனு ஒரு அறிவிப்பு கொடுத்துருக்காங்க. So, 2வது அலை முடிவதற்குள்ளாக அடுத்த ஒரு varient வந்துருப்பதால், இது vaccine ல எந்த அளவுக்கு கட்டுப்படும் அப்படின்ற கேள்வி எழுப்பப்படுகிறது. அதுக்கு இந்தியாவின் சார்பாக Delta வா இருக்கட்டும், Lambda வா இருக்கட்டும், இல்லாட்டி Alpha வா இருக்கட்டும், இல்லாட்டி மீதம் இருக்கும் எந்த ஒரு varient அ இருக்கட்டும், அது எல்லாமே கட்டுப்படுத்தப்படும். ஆனா Delta Plus கனா, அந்தவிதமான சோதனைகள் செய்யப்பட்டு வருகிறது. சீக்கிரமா ரிசல்ட் வெளிய விடறோம்னு சொல்லிருக்காங்க. So, Delta Plus அப்படின்றது vaccine கூட எந்த அளவுக்கு கட்டுப்படும் அப்படின்றதுக்கான ரிசல்ட் இன்னும் வெளில வராததால், தயவு செய்து வெளில போகக்கூடிய நபர்கள் இல்லாட்டி வீட்டவிட்டு நா இப்படி தான் போவேன், நா 2 டோஸ் போட்டுட்டேன், மாஸ்க் போட்டாலும் போடாட்டியும் எனக்கு எதுமே வராது அப்படினு சொல்லக்கூடிய நபர்கள், இஸ்ரேல்யை ஒரு பாடமா பார்த்துக்கோங்க. இப்போ 100க்கும் அதிகமான நபர்களுக்கு அங்க கொரோன வைரஸ் வந்துருச்சு அப்படினு சொல்லிட்டு இருக்காங்க. Mask போட சொல்றாங்க, பெரிய பெரிய restrictions போடுறாங்க. பல மாநிலங்களும், இப்ப restrictions வேணாம் அப்படினு சொன்ன மாநிலங்களையுமே, இப்போ புது விதமான restrictions போடப்பட்டது.

உங்கள் safety உங்கள் கையில் !

நமக்கு already தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு தான் இருக்கே தவிர, எல்லாரும் பிரீயா ஊரை சுத்தலாம் அப்படின்ற ஊரடங்கு எதுமே கிடையாது. மறுபடியும் மறுபடியும் நாம் காண்பிக்கும் அலட்சியம் இதை இன்னும் கொஞ்ச நாட்களுக்கு நீடித்து செல்லும் என்று சொன்னால் மிகையல்ல. அது எப்படி நீடித்து செல்லும் அப்படின்ற கேள்வி இருந்துச்சுன்னா, ஒரு நபருக்கு வரக்கூடிய இந்த வைரஸ், அடுத்தடுத்த நபர்களுக்கு வரும்போது, இப்ப நிறைய பேர் vaccine போட்டுட்டாங்கன்னா, இந்த vaccine ல இருந்து தப்பிப்பதற்கான பல விதமான முயற்சிகளில் இந்த வைரஸ் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் இருக்கு. So, இப்படி இது தொடர்கனியா மாறும்போது நம்ம கட்டுப்பாட்டையும் மீறி இது செயல்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

போதுமான நபர்கள், வேண்டும் அப்படினு சொல்லக்கூடிய நபர்கள் எல்லாருமே வீட்ல இருங்க. எனக்கு கண்டிப்பா வெளிய போயே தீரணும்னு சொல்லும் நபர்கள் மட்டும் வெளில போங்க. உங்களோட வாழ்க்கையை பார்த்து கொள்ளுங்கள். அதே நேரத்துல safety அப்படின்றத்துக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.

Delta Plus க்கு நாம பயப்படணுமா? என்று கேட்டால், இது வரைக்கும் ஒரே ஒரு நபர் தான் உயிரிழந்திருக்கார்கள். அவுங்களுக்கும் 80 வயசுக்கு மேல இருந்துச்சு அப்படின்ற detail வெளிய வந்துருக்கு. So, பயப்பட வேண்டாம், அதே நேரத்துல அலட்சியமும் வேண்டாம். கொஞ்சம் கொஞ்சமா இந்த நியூசா விட்டுட்டு நாம வெளில வரலாம்னு நினைச்சாலும், இந்த நியூஸ் அதாவது கொரோன நியூஸ் நம்மள follow பண்றதுக்கான காரணம், சிறிதளவும் அலட்சியம் நம் மக்கள் மீது வந்து விடக்கூடாது, மக்களுக்கு வந்து விடக்கூடாது அப்படின்றத்துக்காகத்தான்.

 கடைசியா மேதகு அப்படின்ற திரைப்படம். அந்த திரைப்படம் BS Value அப்படின்ற application ல வெளியாகியிருக்கிறது. பார்க்காத நபர்கள் இருந்தால் பார்த்துவிடுங்கள். ரொம்ப தேவையான மிக முக்கியமான திரைப்படமாக பார்க்கப்படுகிறது. So, அதுக்கான சப்போர்ட்டையும் நீங்க கொடுக்கலாம்.

உங்கள் கருத்துக்கள் வரவேற்க படுகின்றன.

நல்லதை பகிர்வோம்! நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!

உங்கள் லோகன்.

credits: Ramya & viki

Leave a Reply