INFOSYS:
பெங்களூரு: இந்தியாவின் முன்னணி தகவல் தொழிநுட்ப நிறுவனமான இன்போசிஸ் 35000 பட்டதாரிகளை பணி அமர்த்துவதற்கு திட்டமிட்டுள்ளது. ஜூலை 20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவித்துள்ளது. உண்மையிலேயே தகவல் தொழில்நுட்ப துறையில் ஆட்டோமேசன் வந்த பிறகு ஏராளமான வேலைவாய்ப்புகள் பறிபோய் விட்டது. மனிதர்கள் இருந்தால் தான் செய்ய முடியும் என்கிற வேலைகளுக்கு மட்டுமே இனி வரும் காலங்களில் வேலை இருக்கும் என்ற நிலை ஏற்பட்டு வருகிறது. கொரோனா காலகட்டத்தில் பலரையும் வேலையை விட்டு வீட்டுக்கு அனுப்பிவிட்டன மென்பொருள் நிறுவனங்கள்
அதேநேரம் ஆட்டோமேசன், மென்பொருள் பாதுகாப்பு, நெட்வெர்க்கி துறைகளில் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதேபோல் இளம் பணியாளர்களை அதிக அளவில் வேலைக்கு எடுப்பதிலும் நிறுவனங்கள் ஆர்வம் காட்டுகின்றன.
இன்போசிஸ்

இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் இன்போசிஸ், இந்த நிறுவனத்தின் தலைமையகம் கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ளது. சென்னை, டெல்லி, ஹைதராபாத், மும்பை உள்பட இந்தியாவின் முக்கிய மெட்ரோ நகரங்களில் இதன் கிளைகள் செயல்படுகின்றன. இன்போசிஸ் நிறுவனம், இந்தாண்டு கல்லூரிகளில் படித்து முடித்த இளம் மாணவர்களை வேலைக்கு எடுக்க திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் இருந்து மட்டுமில்லாமல் சர்வதேச அளவிலும் பணியாளர்களின் சேர்க்க முடிவு செய்துள்ளது.

பட்டப்படிப்பு
இன்போசிஸின் 2021- 2022 ஆம் ஆண்டிற்கான சிஸ்டர் இன்ஜினியர் பதவிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு பி.இ/ பி.டெக். எம்.இ/ எம்.டெக் பட்டதாரிகள் மற்றும், எம்.சி.ஏ/ எம்.எஸ்.சி பயின்றவர்களில் கணினி அறிவியல்/ மின்னணுவியல்/ கணிதம்/ புள்ளிவிவரம் படிப்புகளைக் கொண்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மதிப்பெண்
இவர்கள் தங்கள் பட்டப் படிப்பில் படித்த அனைத்துப் பாடங்களிலும் சராசரியான அளவில் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். 2021 இல் தேர்ச்சி பெற்று வெளியே வரும் மாணவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள். கடந்த 6 மாதங்களில் இன்போசிஸ் மற்றும் இன்போசிஸ் குழு நிறுவனங்கள் நடத்திய தேர்வு செயல்பாட்டில் பணிக்கு விண்ணப்பித்தவர்கள் கலந்திருக்க கூடாது என்று நிபந்தனை விதித்துள்ளது.

தேர்வு எப்படி
https://www.infosys.com/ என்ற அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் உள்ள தகவல்களின் படி விண்ணப்பங்களை ஜூலை 20 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவர்களுக்கு ஆன்லைன் மதிப்பீட்டு சோதனை, நேர்காணல் நடத்தி தகுதியுள்ள நபர்கள் பணிக்கு அமர்த்தப்படுவார்கள் என இன்போசிஸ் அறிவித்துள்ளது. ஜூன் 30 ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் 8,304 ஊழியர்களை அந்நிறுவனம் சேர்த்துள்ளது. இதனால் இன்போசிஸ் நிறுவனத்தில் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 2,67,953 ஆக உயர்ந்துள்ளது. இதனிடையே டிசிஎஸ் நிறுவனம் இந்த நிதியாண்டில் 40000 பேரை வேலைக்கு எடுக்க திட்டமிட்டுள்ளது
நல்லதை பகிர்வோம்! நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
உங்கள் லோகன்.
credits: INFOSYS