புதைந்து கிடைக்கும் மர்மங்கள்!
சுற்றுசூழல், அறிவியல், மக்களோட வாழ்வியல், பல துறைகளில் பல மர்மங்கள் புதைஞ்சுகிடக்குது. இப்படி வரலாற்றில் புதைந்து கிடக்கும் மர்மங்களை தோண்டியெடுத்து அதில் இருக்கக்கூடிய முடிச்சுகளை அவிழ்த்து காட்டுவது தான் மர்மத்தின் மறுபக்கம்.

Love in Titanic
இன்று நாம் பார்க்க போறது Titanic கப்பலின் நிஜ காதல் கதை. இந்த படம் வந்து 3 வருடத்திற்கு பிறகு தான் Titanic கப்பலின் உண்மையான காதல் வரலாறு தெரிய வந்தது. இப்படம் வருவதற்கு முன்பே நிஜ வரலாறு தெரிஞ்சுச்சுருந்தா, Titanic படத்தின் கதையே வேற மாதிரி இருந்துருக்கலாம்.
நிஜ காதல் கதை in Titanic

இந்த உண்மையான காதல் கதையின் கதாநாயகன் Jack ஒரு ஆப்பிரிக்க அமெரிக்கர். அவருக்கு Rose கூட திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருந்தாங்க. இந்த கதையோட கிளைமாக்ஸ் ல அவர் தன் குடும்பத்தை காப்பாத்திட்டு அவரும் உயிர் பிழைச்சரா? இல்லையா ? என்பதை பின்வருமாறு பார்ப்போம்.

உண்மையான Jack ன் பெயர் Joseph Philippe Lemercier Laroche. Titanic கப்பலில் பயணம் செய்த ஒரே ஒரு ஆப்பிரிக்க வம்சாவளியை சேர்ந்த பயணி இவர் தான். French இராணுவ படையில Captain அ இருந்த ஒருத்தருக்கும், ஹைடி கருப்பின பெண்ணுக்கும் பிறந்தவர் தான் Joseph Philippe. இவரோட அம்மா சுதந்திரம் அடைந்த ஹைடியோட முதல் ஆட்சியாளராக இருந்த John Jackus Besalinus ன் மகள். அதனால ஹைடிய உயர்குடி பிரமுகராக வளர்ந்தவரு, 14 வயசுல French க்கு மேற்படிப்புக்காக போறாரு. அங்கு பொறியியல் பட்ட மேற்படிப்பை முடித்த அவர், French ளையே Paris Metro இரயில் நிலைய கட்டுமானதுள்ள வேலை செய்ய ஆரமிச்சாரு.
காதலின் அடையாள சின்னம்
சில வருடங்களுக்கு பிறகு, Joseph Philippe ஒரு wine விற்பனையாளாரின் மகளை சந்திக்கிறாரு. அவள் பெயர் Juliette Mary Louie Lafart. பிரான்ஸ்ல இருந்த இனப்பிரிவுகளை Juliette ஒரு விசியமாவே எடுத்துக்கல. அவ கண்ணுக்கு தெரிஞ்சது எல்லாம் joseph மேல இருந்த காதல் மட்டும் தான்.

அந்த காதலின் அடையாளமாக 1908ஆம் ஆண்டு அவுங்க திருமணம் செய்துகிறாங்க. 1909ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அவர்களுக்கு முதல் பெண் குழந்தை பிறக்குது. அந்த குழந்தைக்கு சிமோன் என்று பெயர் வைக்குறாங்க. அடுத்த வருஷமே இரண்டாவது பெண் குழந்தை பிறக்குது, அதற்கு மேரி லூயி என்று பெயர் வைக்குறாங்க.
கறுப்பினத்தவன் என்ற பாகுபாடு
Juliette ஒரு கறுப்பின மனிதரை திருமணம் செய்து கொண்ட நாள, அந்த சமூகம் அவுங்க ரெண்டு பேரையுமே ஒதுக்கி வைக்குது. யாருமே அவர்களுக்கு வீடு தரவில்லை. வேற வழி இல்லாம Juliette ன் தந்தை வீட்ல தான் வாழ வேண்டிய நிலைமை. வேலை செய்யும் இடத்தில், இன வேறுபாடு காரணமாக அவருக்கு சரியான மரியாதை இல்லை, போதுமான வருமானமும் கிடைக்கவில்லை. அதுமட்டும் இன்றி, அவர்களின் இரண்டாவது குழந்தை பிறந்ததில் இருந்தே உடல்நிலை பலவீனமா இருந்தநாளா அடிக்கடி நோய்வாய் பட்டுக்கொன்டே இருந்தாள். செலவை சமாளிக்க முடியாமல் Juliette ன் தந்தையிடம் கை ஏந்த வேண்டிய நிலைமைல அவுங்க இருந்தாங்க.
ஹைடி பயணத்திட்டம்
பிறந்ததில் இருந்து ரொம்ப கௌரவமாக வாழ்ந்த Joseph க்கு, இந்த மாதிரியான அவமானங்களை தங்கிக்கவே முடியல. இந்த வாழ்க்கையை இப்படியே வாழ்ந்துட்டு இருக்க முடியாது. இதை எல்லாத்தையும் விட்டுட்டு நாம ஹைடிக்கே திரும்ப போயிடுவோம் என்று 1912ஆம் ஆண்டு முடிவு பண்றாங்க. அவுங்க முடிவு எடுத்த அதே காலகட்டத்துல Juliette மூன்றாவது முறையா கர்ப்பம் ஆகுறாங்க.

Joseph ன் தாய்மாமா, 1911-1912ல் ஹைடியின் அதிபராக இருந்தாரு. அவுங்க குடும்பத்துக்கு அங்க இருந்த செல்வாக்கை பயன்படுத்தி ஹைடில நம்மளால பழைய படி கௌரவமா வாழ முடியும்னு Joseph தம்பதி நம்பினாங்க. அதனால 1913ஆம் ஆண்டு ஹைடிக்கு போறதுக்காக பயணத்திட்டம் போட்டு வைத்திருந்தாங்க. அப்போது Juliette நிறைமாத கற்பிணியா இருப்பாங்க, அதனால கப்பல்ல பயணம் செய்ய முடியாது. அதனால பயணத்தை முன்கூட்டியே திட்டமிடுறாங்க. 1912ஆம் ஆண்டே அவுங்க ஹைடிக்கு கிளம்புறாங்க. இவுங்க ஹைடிக்கு கிளம்பி வரத்துக்காக La France எனும் கப்பல்ல டிக்கெட் போட்டு அனுப்பிருந்தாங்க ஹைடில இருக்கும் அவுங்க குடும்பத்தார். ஆனா அந்த டிக்கெட்ல போட்டிருந்த ஒரு குறிப்பிட்ட கட்டுப்பாடு Joseph க்கு கொஞ்சம் கூட பிடிபடல. கப்பல்ல குழந்தைகளை எப்பவும் nursery ல தான் வச்சுக்கணும். அங்க இருக்க தாய்மார்கள் தான் அந்த குழந்தைகளை பார்த்துப்பாங்க. இப்ப எல்லாரும் உட்காந்து சாப்பிடும் dinning hall க்கு குழந்தைகள் வரவே கூடாது. ஆனா Joseph க்கு குழந்தைகளுக்கு தினமும் அவர் கையாளையே ஊட்டிவிடணும். தினமும் ஒரு குடும்பமா எல்லாரும் ஒண்ணா உட்காந்து தான் சாப்பிடணும் என்று ஆசை. இது அங்க சாத்தியப்படாது. ஆனா எப்படியாவது ஹைடிக்கு போய் ஆகணும்.
பயணம் in Titanic

இந்த நேரத்தில் தான் Titanic கப்பலில் 2ஆம் வகுப்புல பயணிக்க இருந்த குடும்பம் இவருக்கு பழக்கம் ஆகுது. RMS Titanic கப்பலில் அவர்களுக்கு இருந்தது இரண்டாம் வகுப்பு. La France கப்பலில் Joseph க்கு இருந்தது முதல் வகுப்பு. இரண்டு குடும்பங்களுக்கும் Ticket மாத்திக்கிறாங்க. இப்படி தான் கடைசி நேரத்துல Titanic கப்பலில் Joseph குடும்பத்தின் பயணம் தொடங்குகிறது.

1912ஆம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் தேதி, ஹைடிக்கு போறதுக்காக Titanic ல் Joseph குடும்பம்பயணம் செய்ய தொடங்குது. ஒரு கருப்பின மனிதர் என்னென்ன அவமானங்களை எல்லாம் சந்திக்க முடியுமோ, அத்தனை அவமானங்களையும் Joseph Titanic கப்பலில் சந்திக்கிறார். அங்கே இருந்த எல்லாருமே Joseph குடும்பத்தை வெறுப்பா பார்க்குறாங்க. கப்பல் பணியாளர்கள் கூட அவர்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையையோ, செய்ய வேண்டிய உதவிகளையோ எதையுமே செய்யவில்லை. Joseph சாப்பிடற நேரம் போக மீதி நேரம் முழுவதும் அவுங்க அறையிலே தான் இருந்தாங்க. தான் சந்திச்ச அவமான்களை, தன் குடும்பம் சந்திக்க கூடாது என்பதில் Joseph உறுதியா இருந்தாரு. Juliette ஒரு கறுப்பினத்தவரை திருமணம் செய்தனால, கப்பலில் இருந்தவர்களின் கோவப் பார்வைகளையும், அவமானங்களையும் எதிர்க்கொள்ள வேண்டியிருந்துச்சு. அவுங்க ரெண்டு பெறும் தங்கள் காதலை எதிர்த்த சமுதாயத்தை ரொம்ப தைரியமா எதிர்கொள்றாங்க.

Titanic கப்பலில் பயணிகள், பணியாளர்கள்னு 2000 துக்கும் அதிகமானோர் பயணிச்சாங்க. அவர்களுள் வெள்ளையர்கள் இல்லாம வேற இனத்தை சேர்ந்தவர் 2 பேர் தான். அதில் Joseph ஒருவர், இன்னொருவர் Victor Giglio, இத்தாலியை சேர்ந்தவர். அவர் முதல் வகுப்பில் பயணம் செய்யும் Benjamin க்கு உதவியாளராக பயணம் செய்தார். அவர் கறுப்பினத்தவர் கிடையாது, மாநிறம் உடையவர். அதனால டைட்டானிக் கப்பலில் பயணம் செய்த ஒரே கறுப்பர் Joseph.

இது தற்செயலா நடந்தது என்று நாம் கடந்து போக முடியாது. The White Starline கப்பல் நிறுவனம் Titanic கப்பலுக்கு முன்பதிவு செய்யும் போதே வெள்ளையர்களையா பார்த்து தான் முன் பதிவு செஞ்சுருக்காங்க. பின்னால்ல இந்த கம்பெனி தங்கள் கப்பல் நிறுவனத்தில் நடந்த இனவெறி செயல்பாட்டுக்கு பகிரங்கமா மன்னிப்பு கேட்டுச்சு.

Titanic மூழ்கின ஏப்ரல் 14ஆம் தேதி அன்று இரவு, கப்பல் மேல் தளத்தில் நின்று Joseph புகைபிடிச்சுட்டு இருந்தாரு. கப்பல் பனிமலை மீது மோதி ஆபத்துக்குள்ளான விஷயம் தெரிஞ்சவுடனே வேகமா தன் அறைக்கு சென்று தூங்கிட்டு இருந்த தன் மனைவி, குழந்தைகளை மேல் தளத்திற்கு கூட்டிட்டு போறாரு. முதலில் பெண்கள் (ம) குழந்தைகளை காப்பாற்றவேண்டும் என்று அவர்களை படகில் ஏற்றுவதற்கான வேலை நடந்துட்டு இருந்துச்சு.

அந்த கூட்டத்துக்கு மத்தியில் போராடி தன் குடும்பத்தையும் ஒரு படகில் ஏற்றிவிட்டாரு. அறையில் இருந்து வரும்போதே முடிந்த அளவுக்கு பணம், நகை எல்லாம் தன் கோட் பாக்கெட்ல போட்டுட்டு வந்து, அந்த கோட்டை தன் காதல் மனைவிக்கு போடுவிட்றாரு. பின்பு தன் மனைவியிடம் கவலை படவேண்டாம் என்றும், தான் அடுத்த படகில் வந்து விடுவேன் என்றும், குழந்தைகளை பத்திரமாக கரை சேர்க்க வேண்டும் என்று சொல்லி அடுத்ததாக Newyork ல் சந்திப்போம் என்று கூறுகிறார் joseph. juliette இருந்த படகு பத்திரமா கீழ இறங்கினவுடனே, கப்பல்ல இருந்த மற்ற பெண்கள் மற்றும் குழந்தைகளை காப்பாற்றும் முயற்சியில் Joesph இறங்கினாரு. முடிஞ்ச வரைக்கும் அனைவரையும் காப்பாற்ற வேண்டும் என்று நினைச்சு போராடின Joseph னால கடைசியில அவர் உயிரை காப்பாற்றிக்க முடியாம போய்டுச்சு. கப்பலோட அவரும் மூழ்கி போனாரு. கடைசி வரைக்கும் அவரோட உடல் கூட கிடைக்கல.

உயிருக்கு போராடிட்டு இருந்த அந்த சூழ்நிலையிலும் Juliette கிட்ட படகில் இருந்த மக்கள் வெறுப்பை தான் கட்டிருக்காங்க. Juliette கோட்ல இருந்த நகை, பணம் அனைத்தையுமே கரை சேர்வதற்கு முன்பே எல்லாரும் பிடிங்கிக்கிட்டாங்க. கரையில கர்ப்பிணி பெண் Juliette தன் 2 குழந்தைகளுடன் என்ன பண்றதுன்னு தெரியாம நின்னுட்டு இருந்தாங்க. வேறு வழி இல்லாமல் தன் தந்தைகிட்டயே திரும்ப போறாங்க. அனால், முதல் உலகப்போர் நாளா, தன்னுடைய தொழில் அனைத்தையும் ஈழத்து மோசமான பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருந்தாரு Juliette அப்பா.

அதனால அவுங்க குடும்பம் மொத்தமும் வறுமையில் வாடுச்சு. பிரான்ஸ்ல அவுங்களுக்கு ஆண் குழந்தை பிறக்குது. கொஞ்ச வருஷம் கழிச்சு பிரான்ஸ் நாட்டு மூலமா Titanic கப்பலில் பாதிக்கப்பட்டதற்கு நஷ்டஈடா அவுங்களுக்கு ஒரு நிலம் கிடைக்குது. அந்த நிலத்தை வைத்து கொண்டு கடைசி வரைக்கும் அவுங்களால ஒரு சராசரி வாழ்கை தான் வாழ முடிஞ்சுது. Juliette மறுபடியும் திருமணமே செஞ்சுக்கல.

கடைசி வரைக்கும் தன் காதல் கணவன் நினைவுளையே வாழ்ந்துட்டாங்க. பொருளாதார நிலைமையில் இரண்டு துருவத்தில் வாழ்த்தவர்களோட காதல் கதை தான் James Cameron எடுத்த Titanic. அது காலம் சொல்லும் காதல் கதை. சமூக கட்டமைப்போட ரெண்டு வேறுபட்ட பிரிவுகளில் வளர்ந்தாலும் உயர்வு தாழ்வு பார்க்காம Joseph, Juliette இடையில் மலர்ந்த இந்த காதல், காலம் சொல்ல மறந்த காதல் கதை.

நல்லதை பகிர்வோம்! நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
உங்கள் லோகன்.
credits: Ramya & vikatan