இஸ் ட் ட்ரு ( Is it true )!

LST உறவுகளுக்கு வணக்கம்! நான் உங்கள் லோகன். இன்னைக்கு  இஸ் ட் ட்ரு ( Is it true )! நிகழ்ச்சியில் எதை பற்றி  பார்க்க போறம்னா, காலப்பயணம். டைம் ட்ராவல்! ஆமாம்  காலப்பயணம்   உண்மையாகவே சாத்தியமா! இல்லையா! வாழ்க்கையில் ஏதாவது ஒரு கட்டத்தில் நாம எல்லாருமே செ! இத முன்னாடியே போய் நாம மாத்திட்டு வந்துருந்தா இப்ப நம்ம வாழ்க்கை எவ்வளவு நல்லா இருந்துருக்கும்.

Time-Travel-Machine-தயாரிப்பது-எப்படி-Is-it-true-by-லோகன்-image4.jpg

இயற்பியலாளர் மல்லேட்

நாளைக்கு நடக்க போற  விசயத்த இப்பவே நாம தெரிஞ்சுக்கிட்டா எவ்வளவு அருமையா இருக்கும் அப்படினு ஏதாவது ஒரு கட்டத்தில் நாம எல்லாருமே நினைச்சு பார்த்துருப்போம். அப்படி செய்ய முடியுமா? நிஜமாவே  காலப்பயணம் சாத்தியமா? அப்படிங்கிறத பத்தி தன்னோட வாழ்க்கை முழுவதும் அர்பணிச்சு ஆய்வு பன்னிருக்காரு ஒரு இயற்பியலாளர் .

Time-Travel-Machine-தயாரிப்பது-எப்படி-Is-it-true-by-லோகன்-image4.jpgதன்னோட  தந்தை பத்து  வயசுல இறந்து போறாரு. அதை தாங்கிக்க முடியாம எப்படி இத பின்னாடி போய் மாத்த முடியும், அவரோட டைம் ஸ்பென்ட் பண்ண முடியும் அப்படிங்கிறத தெருஞ்சுகிறதுக்காக ரான் மல்லேட் அப்படிங்கிற இயற்பியலாளர் தன்னோட வாழ்க்கை முழுக்க இதை ஆய்வு பண்றதுக்காக அர்பணிச்சுருக்காரு. ரான் மல்லேட்டோட தந்தை இவருக்கு சின்ன வயசுல இருந்தே அறிவியல் புனை கதைகளை வாசிக்க கத்துக்குடுத்துருக்காரு.  

ஹச்.ஜி . வெல்ஸ் எழுதிய “தி டைம் மெஷின் 

Time-Travel-Machine-தயாரிப்பது-எப்படி-Is-it-true-by-லோகன்-image

அவரோட தந்தை பத்து வயசு இருக்கும் போது மாரடைப்புல இறந்தறாரு. அதுல இருந்து ஒரு வருஷம் கழிச்சு , ஹச்.ஜி . வெல்ஸ் எழுதிய “தி டைம் மெஷின் ” அப்படிங்கிற ஒரு அறிவியல் புனைக்கதையை வாசிக்குற வாய்ப்பு மல்லேட்க்கு கிடைக்குது. அந்த நூல் தான் அவருடைய வாழ்க்கையை புரட்டி போட்ருக்குது. அதை படிச்சதுக்கு அப்பறம் நம்மளும் நம்ம தந்தை பின்னாடி போய் ஒரு தடவையாவது பார்க்க முடியும்கிற நம்பிக்கையை அந்த நூல் இவரோட மனசுல விதைச்சுருக்குது. அதுல தான் இவர் இயற்பியல் பக்கம் ஆர்வம் வந்து “டைம் ட்ராவல் ” பத்தின ஆராய்ச்சில தன்னோட வாழ்க்கையைவே அர்பணிக்கிற அளவுக்கு கொண்டு போயிருக்குது. ரான் மல்லேட்க்கு இப்போ 75 வயசு ஆகுது.

 கெனடிக் கேட் பல்கலைக்கழகம்:

Time-Travel-Machine-தயாரிப்பது-எப்படி-Is-it-true-by-லோகன்-imageகெனடிக் கேட் பல்கலைக்கழகத்துல இயற்பியல் பேராசிரியரா இருக்காரு. கருந்துளைகள் என சொல்லக் கூடியபிளாக் ஹோல்ஸ்“, ஐயன்ஸ்டீனோட சார்பியல்  விதிகள் பற்றி, அவரோட வாழ்நாள் முழுக்க ஆய்வு பன்னிட்டு இருக்கறாரு. அவரோடா பாதையில் காலாப்பயண இயந்திரத்த கண்டுப் பிடிக்குறதுக்கான இலக்க அடையுறதுக்கு இன்னும் ரொம்ப தூரம் பயணிக்க வேண்டிருக்குது. சிலர் என்ன சொல்றாங்க, அந்த இலக்க அவரால அடையவே முடியாதுனு சொல்றங்க. ஆனா அவர மாதிரியே  காலாப்பயண இயந்திரத்த கண்டுபிடிக்குற ஆராய்ச்சில  இப்படி பல இயற்பியலாளர்கள் ஈடுப்பட்டிருக்கக் கூடிய பல பேர் என்ன சொல்றங்கனா, இது  இன்னைக்கு சாத்தியப்படுத்துறதுக்கான வாய்ப்புகள் அதிகமா இருக்குனு சொல்றாங்க. இப்படி பல இயற்பியலாளர்கள் பல நுட்பமான வழிமுறைகளை இயற்பியல் விதிகளை  காலப்பயணம் செய்யுறதுக்காக முன்வைக்குறாங்க . ஆனா உண்மையாகாவே காலப்பயணம் சாத்தியமா ? நவீன கால இயற்பியல் விதிகளோட அடிப்படை என்ன சொல்லுது, மக்கள் காலத்தை கடந்து பயணிக்க முடியுமா? இந்த கேள்விக்கான விடையை தெரிஞ்சுக்குறதுக்கு முதல நாம காலப்பயணம்னா என்னனு அப்படிங்கிறதப்  பத்தி நாம உள்ளார்ந்து அலச வேண்டிருக்கு

காலப்பயணம் செய்றதுனா என்ன?

Time-Travel-Machine-தயாரிப்பது-எப்படி-Is-it-true-by-லோகன்-image

அதுல காலப்பயணம் செய்றதுனா என்ன என்ற கேள்வியை நாம் இரண்டா பிரிக்கலாம். ஒன்னு நாம வாழ்ந்து வந்த கடந்தகாலத்துக்குள்ள  நாம பயணிக்க முடியுமா? அப்படிங்கிறது முதல் கேள்வி. அடுத்தது, நாம வாழ்ந்து முடிச்சது இல்லாம, அடுத்து வாழ போற எதிர்காலத்துக்குள்ள அல்லது அதை கடந்து இருக்கும் காலாக் கட்டத்துக்குள்ள பயணிக்க முடியுமா? என்பது இரண்டாவது கேள்வி

கால நீட்டிப்பு விளைவுனா  என்னனு தெரியுமா?

ஐன்ஸ்டீனோட சிறப்பு சார்பியல் விதிகளின் படி, ஸ்பெஷல் ரிலேட்டிவிட்டி தியரி படி, கால நீட்டிப்பு விளைவுனா  என்னனு தெரியுமா? இப்ப நான் இந்த இடத்துல உட்காந்துகிட்டு இருக்கும் போது, நான் செலவலிக்குற ஒரு நிமிஷத்தோட நீளம் இருக்குல்ல, அது ஒரு குறிப்பிட்ட அளவுல இருக்கும். அந்த ஒரு நிமிஷம் நகரக்கூடிய வேகம் குறிப்பிட்ட அளவுல இருக்கும்அதுவே வேகமாக பயணிச்சுக்கிட்டு இருக்கக்கூடிய ஒருத்தருக்கு அதே ஒரு நிமிஷம் தான், ஆனா அந்த ஒரு நிமிஷத்தோட நீளம் நீளமா இருக்கும். ரொம்ப அதிகமா இருக்கும். அந்த ஒரு நிமிஷம் அவருக்கு ரொம்ப குறைவான நேரத்துல தான்  நகரும்அதாவது அவருடைய வேகம் ரொம்ப கூட கூட அவரோட நேரம் வந்து குறைவான வேகத்துல நகரும். இதுவே  ஒளியோட வேகத்துக்கு அவர் பயணிக்கும் போது, ஒளியைவிட அதிகமான வேகத்துல அவர் பயணிக்கும் போது,அவருடைய நேரத்தைவிட அதிகமான வேகத்துல பயணிக்கிறதுக்கான ஆற்றல் கிடைக்கும்

ஆற்றல் உற்பத்தி:

Time-Travel-Machine-தயாரிப்பது-எப்படி-Is-it-true-by-லோகன்-image7.jpg

அத வைத்து அவரால எதிர்காலத்துக்களையும் பயணிக்க முடியும்னு சொல்லுது இயற்பியல் விதிகள். ஆனா  இத வந்து நிஜத்துல சாத்தியப்படுத்துறதுல பொறியியல் ரீதியா  பல சிக்கல் இருக்கு. அதுல ரொம்ப முக்கியமானது ஆற்றல் உற்பத்திஇப்ப ஒருத்தர் வந்து ஆற்றல் உற்பத்தி பண்ணனும்னா அதற்கு நிகரான நிறை வேணும், மாஸ் வேணும்.உதாரணத்துக்கு நாம வண்டிலப்  பயணிக்கிறோம். வண்டில பயணிக்குறதுக்கு ஒரு குறிப்பிட்ட அளவு ஆற்றல் வேண்டும். அந்த ஆற்றலை உற்பத்தி பண்ணுவதற்கு பெட்ரோல் , டீசல் மாதிரியான நிறை, மாஸ்  பயன்படுத்துகிறோம். இதுவே ஒளியை விடஅதிகமான வேகத்துல பயணிக்கணும். அப்படினா, அவ்வளவு  பெரிய ஆற்றல் உற்பத்தி பண்ணுவதற்கு பூமி அளவு பெரிய நிறை வேணும்னு சொல்றாங்க. அப்ப அவ்வளவு பெரிய நிறைய வைச்சு, இவ்வளவு பெரிய ஆற்றலை உற்பத்தி பண்ணி பயணிக்கிறதுன்றது நிஜத்துல சாத்தியம் கிடையாதுனு சொல்றாரு. இதைப்பத்தி பல ஆண்டுகளா ஆய்வு பன்னிட்டு இருக்க வில்லியம் ஹிஸ்தாக் என்ற இயற்பியலாளர். சரி, எதிர்காலத்துக்குள்ள பயணிக்க முடியுமா?

 

வான் ஹோல். டைம் அண்ட் ஸ்பெஸ், காலம்,வெளி. இதுக்கு நடுவுல இருக்க இணைப்பு

Time Travel Machine தயாரிப்பது எப்படி Is it true ! by லோகன் image8

அதுக்கு காலவேளியல், வடிவியல், ஸ்பெஸ் தடவை ஜாமெட்ரிய புரிஞ்சுக்க வேண்டியிருக்கு. அத புரிஞ்சுக்குறதுக்கான முயற்சியில, கோட்பாட்டு இற்பியலாளர்கள் பல ஆண்டுகளாக ஈடுபட்டிருக்காங்க. அந்த முயற்சியில வெற்றி கிடைச்சுட்டா, காலத்த கடந்து பயணிக்கிறதுக்கான புதிய பாதையையும், கால இயந்திரத்தையும் கண்டுபிடிக்க முடியும்னு நம்புறாங்க. காலப்பயணம் செய்யுறதுக்கு இப்ப இருக்கக்கூடிய எளிமையான பாதையா நம்புறது, கோட்பாட்டு இற்பியலாளர்கள் நம்புறது, வான் ஹோல். டைம் அண்ட் ஸ்பெஸ், காலம்,வெளி. இதுக்கு நடுவுல இருக்க இணைப்புதான் இந்த வான் ஹோல். இது ஒரு குகைவழிப்  பாதை மாதிரி இருக்கும்.இந்த குகை வழி பாதையோட ஒரு பக்கத்துல  இருந்து ஒரு குறிப்பிட்ட அளவு வேகத்துல, நமக்கு தேவையான அளவு வேகத்துல நாம் பயணிக்க ஆரம்பிக்கும் போது ,அது வழியா இன்னொரு பக்கத்துல, நாம போக வேண்டிய கடந்த காலத்துக்கு பயணிக்க முடியும்னு இயற்பியலாளர்கள் நம்புறாங்க.சரி ,எளிமையா சொல்லியாச்சு, ஆனா,

இந்த அனுமான பாதைகள் எங்க இருக்கு? அத எப்படி கண்டுபிடிக்குறது?

Time Travel Machine தயாரிப்பது எப்படி Is it true ! by லோகன் image8
Time Travel Machine தயாரிப்பது எப்படி Is it true ! by லோகன் image8

கடந்த 10 வருஷங்களா இதப்பத்தி நிறைய ஆராய்ச்சி நடந்துருக்குது.ஆனா.இந்த வான் ஹோல்ஸ்  மக்களோ, வாகனங்களோ பயணிக்குறளவுக்கு பெருசா ஆகுறது எப்படி அப்படிங்கிறதப்பத்தி நமக்கு தெரிஞ்சது ரொம்பவே கம்மி தான். குவாண்டம் க்ராவிட்டி அதாவது குவாண்டம் ஈர்ப்பு விசைக்கான சில இயற்பியல் விதிகள் என்ன சொல்லுதுன்னா. இந்த வான் ஹால்ஸ் இருக்குள்ள, இது ஒரு எலக்ட்ரானோட சைஸ் விட  பல மில்லியன் மடங்கு சின்னதாதான்  இருக்கு அப்படினு சொல்லுது. அதாவது  10 பவர் மைனஸ் 33 சென்டிமீட்டர்ஸ்  அந்த அளவுல, நுரை மாதிரியான வடிவத்துல தான் இந்த வான் கொலஸ் இருக்கு அப்படினு சொல்லுது. ரான் மல்லேட் மாதிரியான சில இயற்பியலாளர்கள், இந்த வான் ஹோல்னு ஒன்னு கண்டுபிடிச்சு, அதுல மனிதர்கள் பயணிக்கிற அளவுக்கு அத பெரிசுபடுத்தினா கடந்த காலத்துக்குள்ள நம்மனால பயணிக்க முடியும்னு சொல்றாங்க. ஆனா, இப்போதைக்கு இது எல்லாமே  வெறும் கருதுகோள்கள் தான்.

Time-Travel-Machine-தயாரிப்பது-எப்படி-Is-it-true-by-லோகன்-image5

கடந்த 20 ஆண்டுகால இயற்பியல் ஆராய்ச்சிகளை நமக்கு என்ன தெரியவந்துருக்கான, இதுவரைக்கும்  கண்டுபிடிக்கப்பட்ட  இயற்பியல் விதிகள், நம்மள  காலப்பயணம் செய்ய விடாம தடுக்கல. அதுக்கான வாய்ப்புகள் தான் வழங்குது. அத எப்படி பயன்படுத்தப் போறோம், அதுல பயணிக்கிறதுக்கான வழிய எப்படி கண்டுபிடிக்கப் போறோங்கிறது மட்டும் தான் பாக்கி. ஆனா இந்த இன்னோரு விஷியத்தையுமே நாம கவனிக்க  வேண்டியிருக்கு.

உலக புகழ் பெட்ரா விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் என்ன சொல்றாரு தெரியுமா?

Time-Travel-Machine-தயாரிப்பது-எப்படி-Is-it-true-by-லோகன்-image9 ஸ்டீபன் ஹாக்கிங்
ஸ்டீபன் ஹாக்கிங்

ஒரு வேலை இந்த வான் ஹோல்ஸ் ஒன்ன கண்டுபுடிச்சு, அத காலப்பயணம் செய்றதுக்கான  பாதையா நாம மாத்தினாலும்  கூட, அதுல நம்ம பயணிக்க இயற்கை நம்மள அனுமதிக்குமா? அப்படிங்கிற கேள்வி இருக்கு அப்படினு சொல்றாரு.அந்த  கேள்விக்கு அவரோட அனுமானம் என்னனா, இயற்கை இப்படிப்பட்ட ஒரு பயணத்துக்கு கண்டிப்பா அனுமதிக்காதுன்றது தான். பார்ப்போம்! எதிர்காலத்துல என்ன நடக்குதுன்னு . அடுத்த இஸ் இட் ட்ருல ! ( Is it true )  இதே  மாதிரி இன்னொரு சுவாரசியமான  தகவலோட  உங்களை சந்திக்குறேன் .    

Leave a Reply