AMCA 3D model image
AMCA 3D model image

Advanced Medium Combat Aircraft. அதாங்க AMCA.

இந்தியாவின் ஐந்தாம் தலைமுறை போர் விமானம். AMCA 2025 க்குள் இந்தியாவில் தயாரிக்கப்படும் என்ற அறிவிப்பு இந்தியாவில் வந்துள்ளது. ஆனால் அதற்கு முன்னாடி ரஷ்யா மிக முக்கியமான ஒரு ஜெட் விமானத்தை அறிமுகம் செய்துள்ளனர்.

Flying Beautiful Russian Flag file image
Flying Beautiful Russian Flag file image

அந்த ஜெட் விமானம் இந்தியாவிற்காக தயாரிக்கப்பட்டதா? அர்ஜென்டினாவிற்கு தயாரிக்கப்பட்டதா? இல்ல வியட்னாமிற்காக தயாரிக்கப்பட்டதா? இல்லை இந்த நாடுகளுக்காக தயாரிக்கப்பட்டு இப்போது விற்பனையில் வர போகும் ஒரு விமானமா? இதை பார்த்து இந்தியா பல நேரங்களிலும் இந்த AMCA project ஐ துரிதபடுத்த வேண்டியதாக உள்ளதே, அதனுடைய காரணம் என்ன? இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம்.

Amca stealth fighter 3d model image 2
Amca stealth fighter 3d model image 2

The Checkmate

Argentina, India, United Arab Emirates, Vietnam, China இந்த நாடுகளுக்காக தான் நாங்க ஒரு விமானத்தை தயாரிக்கின்றோம். அந்த விமானத்தின் பெயர் SU-75 என்பது தான். Sukhoi விமானத்தின் 57 என்பதை அப்படியே reverse ஆக போட்டால் 75. ஆனால் Sukhoi அந்த விமானத்தை இன்னொரு பெயர் போட்டு அழைக்கின்றார்கள், “The Checkmate” என்பது தான். இது ஒரு Single Engine Light Tacktical Jet என்று அறியப்படுகிறது.Single Engine என்பதால் இதனுடைய வெயிட் என்னவென்று தெரியவில்லை. கிட்டத்தட்ட 2029 ல் இதனுடைய Prototype முழுமை பெறும் அப்படினும், 2026 ல் இதன் தயாரிப்பு பல நாடுகளுக்கு கொடுக்கப்படும் அப்படினும், 15 வருடத்திற்குள் 300 க்கும் அதிகமான இதே மாதிரியான ஜெட் விமானங்கள் பல நாடுகளுக்கும் கொடுக்கப்படும் என்றும் ரஷ்யா அறிவித்திருக்கிறது.

the check mate model file image
the check mate model file image

MAX 2021 இந்த மாதிரி பலவிதமான விமானங்கள், பல விதமான தொழில்நுட்பங்கள் இதற்கான ஒரு கண்காட்சி ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது. 20 ஆம் தேதியில் இருந்து 25 ஆம் தேதி வரை நடைபெற்று முடிந்து விட்டது. இந்த நேரத்தில் தான் The Checkmate Su-75 என்ற ஜெட் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த ஜெட் எனும் போது ஐந்தாவது தலைமுறை போர் விமானத்திற்காக இந்தியா இப்போது காத்துக்கொண்டிருக்கிறது.

the checkmate Russian fighter aircraft model file image 3
the checkmate Russian fighter aircraft model file image 3

பல நேரங்களிலும் இதே மாதிரியான ஒரு ஜெட் நமக்கு வரப்பிரசாதமாக அமைய போகிறது என்றும் சொல்றாங்க. இதை ஏன் நாம detail ஆக பார்க்க போகிறோம்? இதை நாம் detail ஆக பார்த்தால் தான் நம்முடைய இராணுவத்துடைய, குறிப்பாக நம் விமானப்படையில் இருக்கக்கூடிய விமானங்கள், அதனுடைய அப்டேட் எப்படி இருக்கவேண்டும். அதை பற்றி மாணவர்கள், இந்திய இளைஞர்கள், எவ்வாறு புரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காண ஒரு பெரிய picture நமக்குள் வரப்போகிறது.

ரஷ்யாவின் விமானங்கள்

Mig21 Russian fighter aircraft model file image 3
Mig21 Russian fighter aircraft model file image 3

Mig-21, Mig-29, Su-30 இது எல்லாமே ரஷ்யாவின் விமானங்கள் தான். இந்த விமானங்கள் தான் நம்முடைய விமானப்படையில் அதிகமாக இருக்கு என்று சொல்லலாம். அடுத்ததாக, Dassault, Mirage 2000 என்பதும், அதே போல் Raffle என்ற விமானமும் இப்பொது நம்முடைய விமானப்படையில் இருக்கு. இதற்கு அடுத்தபடியாக இருக்கும் விமானங்கள், Anglo- French SEPECAT Jaguar Strike Fighter Aircraft மற்றும், நம்முடைய Tejas ரக விமானங்கள் என்று சொல்லலாம்.

Mig29 Russian fighter aircraft model file image 3
Mig29 Russian fighter aircraft model file image 3

So, இத்தனை விமானங்களை சேர்த்து உள்ளடக்கியது தான் நம்முடைய விமானப்படை. அதில் குறிப்பாக நாம் கவனிக்க வேண்டியது Mig – 21 என்ற விமானத்தை பற்றி தான். 1960 ல் அறிமுகம் செய்யப்பட்ட Mig ரக விமானம், குறிப்பா இந்த Mig- 21 1963 ல் இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படுகிறது. நல்லா தெரியும், ஒரு கட்டத்தில் இந்தியாவிற்கு அமெரிக்கா, பிரிட்டன் போன்ற பல நாடுகள் எதிராக இருக்கும் போது, ரஷ்யா தான் இந்த மாதிரி Mig ரக விமானத்தை தந்து நம்முடைய இராணுவத்திற்கு பலம் சேர்த்து என்ற நன்றியை நாம் மறந்து விடக்கூடாது.

விமானப்படையில் நான்காவது இடம் – இந்தியா

அப்படி 1963 ல் இருந்து கிட்டத்தட்ட 800 Mig ரக விமானங்களை வாங்கி வைத்தோம், இந்தியாவின் சார்பாக. இந்த 800 விமானங்களில் பெருமளவில் Mig – 21 ரக விமானங்கள் சர்வீஸில் இல்லை. சொல்ல போன 2025 க்குள் எல்லா Mig ரக விமானத்தையும் தூக்கி தூரப்போட வேண்டிய நேரம் வந்துருச்சு. 200 க்கும் அதிகமான நம்முடைய தலைசிறந்த விமானிகளை நாம் பலி கொடுத்திருக்கிறோம்.

Mig21 Russian fighter aircraft model file image 3
Mig21 Russian fighter aircraft model file image 3

இந்த Mig-21 ரக விமானத்தில் பல விதமான பிரச்சனைகள், அது போயிட்டே இருக்கும்போதே வெடித்து சிதறுவது, இந்த மாதிரியான தொழில்நுட்ப பிரச்சனை காரணமாக 200 விமானிகள் அவர்களுடைய உயிரை கொடுத்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட தருணத்தில் தான் இந்த MiG 21 என்ற விமானத்தை நாம replace பண்ணவேண்டும். குறிப்பாக சொல்லப்போனா World Airforce Directory. 2021 என்பதை பொறுத்தவரைக்கும், இந்தியா விமானப்படையில் நான்காவது நாடாக இருக்கிறது. 672 உள்ளடக்கியது தான் இந்தியாவின் விமானப்படை. அதில் இந்த MiG 21 ரக விமானத்தை நாம replace பண்ணனும்னா, அதற்கு சரியாக ஒரு விமானமாக இந்த SU- 75 இருக்குமா என்கிற ஒரு எதிர்பார்ப்பு நிலவுகிறது.

MiG ரக விமானங்கள்

Mig29 Russian fighter aircraft model file image 4
Mig29 Russian fighter aircraft model file image 4

அடுத்ததாக பார்க்கப்போனால், இந்த MiG 29 ரக விமானம். இந்த விமானத்தை 2012 ஆம் வருடத்தில் இருந்து நாம் Import பன்னிட்டு இருக்கோம். கடைசியாக கொஞ்ச நாட்களுக்கு முன்பாக ஒரு 21, MiG 29 ரக விமானத்தை நாம ரஷ்யா கிட்ட இருந்து வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்ருக்கோம்.

India & russia stong relation ship portrait image
India & russia stong relation ship portrait image

அதனுடைய விலை மட்டுமே கிட்டத்தட்ட 9000 மில்லியன் அமெரிக்க டாலர் என்று சொல்லலாம்.

Jaguar Aircraft

Anglo french SPECAT JAGUAR aircraft model file image 5
Anglo french SPECAT JAGUAR aircraft model file image 5

அடுத்ததாக நம்மகிட்ட இருக்கும் Jaguar Aircraft என்பதை கொஞ்சமாக புதுப்பிக்க வேண்டிய ஒரு தருணத்தில் நிற்கின்றோம். So, 2 Jaguar ரக விமானத்தை நாம் புதுப்பிக்கும் போது Base Level ல இருக்கும் Rafle ரக விமானத்தை நம்மால் வாங்க முடியும். இரண்டு விமானத்தை புதுப்பிக்கணுமா? அல்லது அதிநவீன base level Rafle போன்ற விமானத்தை வாங்க வேண்டுமா? இப்படி பலவிதமான இக்கட்டான கேள்விகளை கேட்டுக் கொண்டிருப்பது தான் நம்முடைய விமானப்படை.

Desault Miraage aircraft model file image 6
Desault Miraage aircraft model file image 6

இவையின்றி Mirage 2000 என்ற விமானம் இருக்கு. அந்த விமானம் கிட்டத்தட்ட 50 இருக்கே என்று கேட்டால் நம்மகிட்ட இருக்கு, ஆனால் Mirage 2000 என்ற சேவையையும் 2030 க்குள் நாம் நிறுத்த வேண்டும். ஏனென்றால் அவையெல்லாம் காலாவதி ஆகிக்கொண்டே வருகிறது. Mirage 2000 என்ற விமானத்தை நாம update பண்ணோம். அப்படி அப்டேட் பண்ண விமானத்தை Mirage 2000 5MK version என்று சொல்லி அழைக்கின்றோம். இப்போ உங்களுக்கு ஒரு உண்மை புரிஞ்சுருக்கும். MiG 21, அது outdated ஆயிடுச்சு. MiG 29 இப்பதான் கொஞ்சம் வாங்குறதுக்கு பணம் கொடுத்துருக்கோம். சு 30 கொஞ்சம் தான் இருக்கு, Rafle எவ்வளவு இருக்கு, Jaguar எவ்வளவு இருக்கு, அடுத்ததாக Mirage ரக விமானங்கள் எவ்வளவு இருக்கு, Tejas ரக விமானங்கள் எவ்வளவு இருக்கு என்பது தான்.

Rafele aircraft model file image 7
Rafele aircraft model file image 7

தூக்கிப்போட்டு Replace பண்ணவேண்டிய விமானங்கள்

So, Total ஆக Jaguar, MiG 21, Mirage 2000 இந்த 3 ரக விமானத்தையும் நாம் தூக்கிபோடும் தருணத்தில் இருக்கின்றோம். இப்போ இருக்குற Tejas ரக விமானமாக இருக்கட்டும், Rafle ஆக இருக்கட்டும், நம்ம replace செய்ய வேண்டிய விமானத்தின் பாதி அளவை கூட இந்த Tejas, Rafle விமானதால் பூர்த்தி செய்யமுடியாது.

Mig 21 file image 8

Mig 21 file image 8அப்படினா இந்த MiG 21 க்கு பதில் F 16 என்ற விமானத்தையும், Sabb Gribbon என்ற விமானத்தையும், ரஷ்யாவின் SU 75 என்ற விமானம் மட்டும் தான் நம்முடைய choice ஆக இருக்கு. அவற்றில் SU 75 The Checkmate என்ற விமானம் மட்டும் தான் மிக குறைந்த விலைக்கு நமக்கு கிடைக்கப்போகிறது என்று சொல்லலாம். இந்த ஒரு ஜெட்டின் விலை 25-30 மில்லியன் அமெரிக்க டாலர். இந்தியாவின் கணக்கு படி பார்க்கப்போனால் 200 கோடி இருக்கலாம்.

Saab Gripen Aircraft file image 8
Saab Gripen Aircraft file image 8

ஐந்தாம் தலைமுறை விமானம்

USA F35 Aircraft file image 8
USA F35 Aircraft file image 8

அமெரிக்கா நமக்கு F 35 தருவதற்கான வாய்ப்புகள் இருக்கா என்று பார்த்தால் கொஞ்சம் கம்மியாக தான் இருக்கு. ஏனென்றால் நாம் ரஷ்யாவிடம் இருந்து S 400 என்ற Anti Missile System வாங்க போறோம். S 400 இருக்க இந்தியாவிற்கு F 35 நாங்க தரமாட்டோம் என்று அமெரிக்கா சொன்னாலும் சொல்லிவிடுவார்கள். அதனால் சீக்கிரமாக நாம் நம்முடைய ஐந்தாம் தலைமுறை விமானத்திற்கான அந்த தயாரிப்பை துரிதப்படுத்த வேண்டும். அதற்கான ஒரு மிக முக்கியமான ஒரு பதிவாக தான் இதை நாம் பார்க்குறோம்.

S400 Missile system file image 9
S400 Missile system file image 9

ஏனென்றால் வரும் காலத்தில் SU 75 என்ற விமானம் நம்முடைய இந்திய நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படலாம். நாம் எவ்வளவு சீக்கிரமாக நம்முடைய விமானப்படையில் நம்முடைய தயாரிப்பை கொண்டு வருகிறோமோ அந்த அளவுக்கு நம் நாட்டிற்கு நல்லது என்று சொல்லலாம்.

SU 75 ரக விமானம்

80 - tejas aircraft file image 9
80 – tejas aircraft file image 9

Tejas ரக விமானத்தை நாம் கூடுதலாக உற்பத்தி செய்தால் என்ன என்ற உங்கள் சந்தேகத்திற்கு நம்முடைய இந்திய அரசாங்கம் 6. 58 மில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு கிட்டத்தட்ட 80 க்கும் அதிகமான Tejas ரக விமானத்திற்கு ஆர்டர் கொடுத்திருக்கிறோம். அதில் முதல் ஆர்டர் ஆக 40 விமானங்கள் டெலிவரி செய்யப்படும் என்று சொல்லிருக்காங்க. நாம் முன்னாடியே பார்த்த மாதிரி Tejas ஆக இருக்கட்டும், Rafle ஆக இருக்கட்டும். நாம் replace பண்ண வேண்டிய விமானத்தில் பாதி அளவுக்கூட அதனால் நிவர்த்தி பண்ண முடியாது.

SU - 75 ircraft file image 10
SU – 75 ircraft file image 10

SU 75 ரக விமானத்தை நாம் ஏன் இவ்வளவு Strong ஆக பேசிக்கொண்டிருக்கிறோம் என்றால், அது Artificial Intelligence நிறைந்த விமானம், 360 டிகிரி அதன் Radar System அதனுடைய அதிநவீன 5 missile கொண்டு செல்லக்கூடிய திறன், அதுமட்டுமின்றி 3000 km Refuel செய்யாமல் அதனுடைய பறக்கும் திறன், அதனுடைய இலகுவான திறன், அதில் வெயிட் ஏற்ற கூடிய அந்த ஒரு திறன், இப்படி எல்லா திறனையும் உள்ளடக்கியது தான் இந்த SU 75 என்ற விமானம். SU 75 அதற்கு ஒரு Pilot மட்டும் வேண்டும் என்று நாம் சொல்லிட்டு இருக்கோம். ஆனால் Pilot இல்லாத, ஒரு ஆள் இல்லாத விமானமாகவும் இந்த SU 75 வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக சொல்லுகிறார்கள்.

AMCA or SU 75

AMCA வா அல்லது SU 75 ஆ என்ற கேள்விக்கு இரண்டையும் ஒரே நேரத்தில் நாம் பார்க்கவேண்டும். 2025 ல் தான் நம்முடைய AMCA என்ற விமானம் நமக்கு கிடைக்கப்போகிறது. அதற்குள் நாம் பல விமானங்களை replace செய்யவேண்டும். அதற்காக நாம் இந்த SU 75 ரக விமானத்தை வாங்கலாம்.

2025 AMCA aircraft file image 10
2025 AMCA aircraft file image 10

இன்னும் பல நேரத்தில், விமானப்படை என்று சொல்லும்போது விமானத்தை நம்பி மட்டும் கிடையாது, விமானத்தை எப்படி செலுத்துகிறார்கள்? எந்த மாதிரியான விமானிகள் இருக்கின்றனர், அவர்களுடைய அனுபவம் என்ன? அதை பொறுத்து தான் ஒரு யுத்தில் வெற்றியும் தோல்வியும் தீர்மானிக்கப்படுகிறது. அதற்கான சிறந்த எடுத்துக்காட்டு தான் 1965 என்ற Playlist. பார்க்காத நபர்கள் இருந்தால் பார்த்துவிடுங்கள். அதே போல் இந்த விமானத்தில் இன்னும் என்னென்ன இருக்கு என்று தேடிப்பாருங்கள்.

உலக அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும்

A. P. J. Abdul Kalam File image kanavu kanungal
A. P. J. Abdul Kalam File image kanavu kanungal

மாணவர்கள், இளைஞர்கள் நீங்கள் கொஞ்சம் கொஞ்சமாக நம்முடைய உலக அறிவு, நம்முடைய இராணுவத்திற்கு தேவையான அறிவையாவது வளர்த்துக்கொள்ளவேண்டும். நாம் பார்க்கும் செய்தி தான் செய்தி என்று நம்பாதீர்கள். அதையும் தாண்டி இந்த SU 75 என்ற விமானம் மார்ச் 2021 ல் வேறு ஏதாவது ஹெலிகாப்டர் introduce செய்யப்படாதா? இல்ல அது இந்தியாவிற்கு எந்த மாதிரியான சார்பு நிலையில் கொண்டு செல்லலாம். அதில் இருக்கும் டெக்னாலஜி என்ன?

pedal POWERED WASHING MACHINE & SOLAR MOSQUITO DESTROYER FILE IMAGE
pedal POWERED WASHING MACHINE & SOLAR MOSQUITO DESTROYER FILE IMAGE

இப்படி படிப்படியா நம்முடைய இளைய சமுதாயம் ஒவொன்றாக தேடி செல்லும் போது தான் அந்த டெக்னாலஜி பற்றியான புரிதல் நம்ம மக்களுக்கு கிடைக்கும். அந்த புரிதல் வந்த பின்பு தான் அதில் மாஸ்டர் ஆக நாம மாற முடியும். இந்த புரிதல் இல்லாத ஒரு தலைமுறை இருந்து விட்டது. அதை அப்படியே விட்ரலாம். ஆனால் இப்போதும் அதே தவறை இந்த தலைமுறையும் செய்து விடக்கூடாது என்பதுதான் என்னுடைய கனவாக இருக்கின்றது.

இளைஞர்கள் கையில் இந்தியா

A. P. J. Abdul Kalam File image SCHHOL BOARD WRITING IMAGE
A. P. J. Abdul Kalam File image SCHHOL BOARD WRITING IMAGE

நாளைய இந்தியா உங்கள் கையில் தான். நாம் நிறைய விமானங்கள் இறக்குமதி பண்றோம், என்று நாம் ஏற்றுமதி பண்ணுவோம்? என்ற கேள்விக்கு இன்றைய இளைய சமுதாயம், ஒரு கிராமத்தில் இருப்பவர்கள் கூட இந்த மாதிரியான டெக்னாலஜி, இந்த பெயர் என்பதை பற்றி ஒரு அறிவு வரும் போது தான் நம்முடைய நேரமும், நாமும் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யக்கூடிய நிலையில் நாம் உயர்வோம்.

MitiCool - village Fridge - Discovery File image
MitiCool – village Fridge – Discovery File image

இராணுவம் என்று சொல்லும்போது அடுத்தவர்களை அழிப்பதற்காக மட்டும் கிடையாது. நம்மை பாதுகாத்து கொள்வதற்கும் இந்த மாதிரியான டெக்னாலஜியை நாம் தெரிந்து கொள்வது மிக அவசியம் என்று சொன்னால் மிகையல்ல. இந்த பதிவு நல்லா இருந்துச்சுன்னா உங்கள் கருத்து. ரொம்ப ரொம்ப நல்லா இருந்துச்சுன்னா உங்கள் கருத்துக்கள் மற்றும் ஷேர் பண்ணுங்க.

நல்லதை பகிர்வோம்! நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!

உங்கள் லோகன்.

Also, Read: Afghanistan war யாருக்கு லாபம்? நஷ்டம்?

Leave a Reply