
மர்மத்தின் மறுபக்கம் நிகழ்ச்சியை பற்றி உங்களோடு பகிர்வது உங்கள் லோகன்.
வாழும் வரை இளமை! YOUNG!

மனிதர்களுக்கு காலம் காலமாக ஒரு பயம் தொடர்ச்சியா துரத்திக்கிட்டே இருக்குன்னா, அது முதிர்ச்சி பற்றி தான். வயதான பல பேரு நாம இளமையாவே இருந்ததுருக்க முடியாதா?

அந்த சந்தோசங்களை அப்படியே அனுபவிச்சிட்டு இருந்துருக்க முடியாதா? அப்படினு ஏக்கப்படறதும், இன்னைக்கு இளமையா இருக்குறவங்களையே பல பேரு, நாம இப்படியே எப்பவும் வயசு ஆகாம இளமையாவே எப்பவும் இருந்துகிட்டா எவ்வளவு நல்லா இருக்கும்னு அசைகளோடையும் இருந்துகிட்டே தான் இருக்காங்க.இந்த மாதிரியான மனிதர்கள் இன்னைக்கு வரைக்கும் நம்ம மத்தியில வாழ்த்துட்டே தான் இருக்காங்க.

உண்மையாகவே நம்ம நாலா முதுமையை தள்ளி போட முடியுமா? என்னைக்கும் இளமையாவே இருக்க முடியுமா?
அறிவியல் என்ன சொல்லுதுனு பார்ப்போம். முதுமையை பற்றி நாம புரிஞ்சுக்கணும் அப்படினா முதல 2 கேள்வி கேட்கணும்.
- முதுமை எப்படி ஏற்படுத்து?
- முதுமையை நடைமுறையில் தள்ளி போடுவது சாத்தியமா? அப்படி தள்ளி போட முடியும்னா எப்படி?
முதுமை வர காரணம்

முதுமை எப்படி ஏற்படுதுனு முதல பார்ப்போம். மனிதர்களோட 20 வயதில் ஆரமிக்குது உடல் உறுப்புக்களின் தேய்மானம். 20 வயதில் ஆரமித்து கொஞ்சம் கொஞ்சமா உடல் உறுப்புகளோட செயல்பாடுகள் தேஞ்சுகிட்டே போகுது. அப்படி கொஞ்சம் கொஞ்சமா தேஞ்சு முதுமையை அடையும் போது, உயரம் குறைதல், கண் பார்வை குறைபாடு, நியாபக மறதி, தோல் சுருக்கங்கள், இந்த மாதிரியான பலவீனங்கள் வெளிப்படையாவே தெரிய ஆரமிக்கும்.

கண்களுக்கு ஏற்படும் தேய்மானம்
சரி, இந்த பலவீனங்கள் எப்படி ஏற்படுது? ஒவ்வொரு கட்டத்துலையும் எந்த அளவுக்கு இந்த பலவீனங்கள் கொஞ்சம் கொஞ்சமா உடல் உறுப்புகளில் தேய்மானம் ஏற்படுத்தி கொன்டே இருக்கு. நம்ம கண்களில் இருக்கும் கருவிழி அனைவருக்கும் கருப்பு நிறத்தில் இருப்பதில்லை.

ஆனா, அதுக்கும் நடுவுல இருக்க சிறுவிழி அனைவருக்கும் கருப்பு நிறத்தில் தான் இருக்கும். அப்ப தான் அதுல படக்கூடிய ஒளி பிரதிபலிக்காம அதை கடந்து போக முடியும். கண்ணில் படும் ஒளியின் தூரத்தை கணக்கிட்டு, பொருளோட முழு அளவையும் கண்மணி வழியாக பின்னாடி செலுத்தி retina வில் பட செய்யும். அப்படி அந்த retine ல படக்கூடிய ஒளியில் இருந்து நம்ம பார்க்கக்கூடிய தகவல்களை நியூரான்கள் வழியா மூளைக்கு கொண்டு போகும்.

ஒரு மின்சாரத்தை கடத்தக்கூடிய செம்பு கம்மி மாதிரி செயல்பட்டு, இந்த நியூரான்கள் பொருள் பற்றிய தகவலை மூளைக்கு கொண்டு போகும். பொருட்களோட அளவை சரியா பதிவு பண்ற சிறுவிழியும், கண்மணியும் வயசு ஆகும் போது ஒளியோட தூரத்துக்கு ஏற்ற மாதிரி வளைஞ்சு கொடுத்து அந்த பொருளோட அளவை முழுமையா உள்வாங்குற திறமை இழந்துரும். அதனால, retina வில் ஒளியில் இருந்து கிடைக்கக்கூடிய தகவலை முழுமையாக பதிவு ஆகாம, தோரையமாகத்தான் பதிவு ஆகும்.
இதனால தான் வயசு ஆனவர்களுக்கு கண் பார்வை குறைபாடு ஏற்படுகிறது. இது மட்டும் இல்லாம retina ல பதிவு ஆகுற தகவல்களை மூளைக்கு கொண்டு போக நேரம் எடுக்குது. இதுக்கு காரணம் வயசு ஆகும் போது retina பலவீனம் அடையுது. அப்படி பலவீனமா பதியுற retina தகவல்களை மூளைக்கு கொண்டு போறதுக்கு ரொம்ப நேரம் எடுக்ககுறனால, நம்மள பார்க்குற பெரியவர்களுக்கு கொஞ்சம் நேரம் கழிச்சு தான் நாம யாருனே தெரியும்.

மூளையில் தகவல்களை வாங்குறதுக்கும், அதை சேமிச்சு வைக்குறதுக்கும், உடம்புல இருக்கக்கூடிய மொத்த பகுதிகளுக்கும், தகவல்களை அனுப்புறத்துக்கும் பயன்படுறது தான் நியூரான்கள்.
மின்சார துண்டுகள் மூலமா, உடம்புல இருக்கக்கூடிய எல்லா பாகங்களுக்கும், நீயூரான்கள் செய்தியை அனுப்பிக்கிட்டே இருக்கும். ஒன்னு Afferent Neurons . உட்செலுத்தும் நீயூரான்கள். தகவல்களை மூளைக்கு உள்ளெ செலுத்தும் நீயூரான்கள். இரண்டாவது Efferent Neurons. வெளியேற்றும் நியூறான்கள். மூலையில் இருக்ககூடிய தகவல்களை உடம்புல இருக்கக்கூடிய மத்த பகுதிகளுக்கு கொண்டுபோய் சேர்க்க கூடியது.

மூளையில் மொத்தம் 1 லட்சம் மில்லியன் நீயூரான்கள் ஒன்னுக்கொன்னு தொடர்பொட செயல்பட்டு கொண்டிருக்கும். 1 நியூரான் 1000 நீயூரான்களோட தொடர்புளையே இருக்கும். ரொம்ப நுட்பமான முறையில் செயல்பட்டு கொண்டிருக்கும் இந்த நியூரான்களில் தான் மனிதனின் அதனை தகவல்களும் பதிஞ்சு கிடக்குது.
மூளையில் ஏற்படும் பாதிப்பு

மத்த உறுப்புக்கள் மாதிரியே வயசு ஆகும்போது, மனிதனோட மூளையும் பாதிக்கப்பட ஆரமிக்கும். அப்படி மூளை தேய்மானம் ஆகும் போது, நியூரான்களும் கொஞ்சம் கொஞ்சமா செயலிழக்க ஆராமிக்கும். நீயூரான்கள் செயல் இழக்க ஆரமிக்கும் போது அதில் இருக்கும் நுட்பமான தொடர்பு இருக்கு இல்லையா, அந்த தொடர்புமே அங்க அங்க தடைபடும். இவ்வாறு தடைப்படும் போது, நியூரான்களின் தகவல் சேமிப்பு திறன் பாதிக்கப்படும். அதனாலதான் வயதானவர்களுக்கு நியாபக மறதி ஏற்படுத்துது.

கருமை மறைந்து வெள்ளை முடி ஏன் வருது?

தலைமூடியோட கருமை நிறத்துக்கு காரணம், Melanin ல் இருக்கக்கூடிய நிறமி அணுக்கள். இந்த மெலனின் குறைபாடு வயசு ஆக ஆக முடியோட நிறத்துல பல மாற்றங்கள் கொண்டுவருது.

அதனால தான், வெள்ளை முடி வர அராமிக்குது. இன்னைக்கு ஊட்டசத்து குறைபாடுனால பல பேருக்கு சின்ன வயசுலயே நரைமுடி வருகிறது.
சருமத்தில் ஏற்படும் சுருக்கம்

இதே போல தான் சர்மத்தோட பளபளப்புக்கும், மிருள்தன்மைக்கும் காரணம் Collagen. Amino acid ல இருந்து உற்பத்தி ஆகக்கூடிய அனுக்கள், திசுக்கள் ஒட கூட்டுத்தான் collagen. வயசு ஆகும் போது Collagen உற்பத்தி குறைப்படுறனால, சருமத்தோட தடிமன் குறைஞ்சு தோல் ரொம்ப மெலிதானதாக ஆகிவிடும். வயதானவர்களுக்கு தோல் சுருக்கங்களும் ஏற்படும். ஆக நிறம், நியாபகத்திறன், பார்வை, எழும்புகளுக்கான ஊட்டசத்துன்னு எல்லாத்துக்கும் அடிப்படையா இருப்பது அனுக்கள் தான்.

இந்த அனுக்கள் தன்னை தானே புதுப்பிச்சுக்குறத நிறுத்தினா, உடல் உறுப்புகளோட செயல் திறனும் குறைய ஆரமிக்குது. அது தான் முதுமை அப்படினு சொல்லப்படுது. ஒரு வேளை இந்த அனுக்கள் தன்னை தானே புதுப்பிச்சுக்குறத நிறுத்தாம தொடர்ச்சியா செஞ்சுக்கிட்டே இருந்தா, நம்ம முதுமை அடையாமலே வாழ முடியும். இது நடைமுறையில சாத்தியமா அப்படின்றதை பார்ப்பதற்கு முன், நம்ம மரபணுக்களை பத்தி கொஞ்சம் தெரிஞ்சுக்க வேண்டியிருக்கு.

நம்ம மரபணுக்களை Microscope ல வச்சு பார்க்கும் போது, ரெண்டு பக்கமும் வெள்ளையா பளபளப்பா ஒன்னு தெரியும். அதுக்கு பேர் தான் Telomeres.இதோட வேலை என்னன்னா மத்த அணுக்கள் மாதிரி மரபணுக்களும் தொடர்ந்து செயல்பட்டுட்டே இருக்க நாளா தேய்மானம் அடையக்கூடும். ஆனா, DNA ல இருக்க Genertic Memory ரொம்பவே முக்கியமானது. மரபுசார் தகவல்களை சேமிச்சு வச்சுருக்க DNA சேதம் அடையும் போது, அதுக்கு சிகிக்சை அளித்து, குணப்படுத்தி மறுபடியும் செயல்பட வைப்பது தான் இந்த Telomeres. இப்படி செய்யும் போது Telomeres பலவீனம் அடையும். அவ்வாறு ஆகும் போது, இந்த DNA ல இருக்கக்கூடிய Memory அ காப்பாத்துறதுக்கு பயன்படுவது தான் Telomerase என்ற enzyme.

Telomerase வேலை என்னனா, ஒரு DNA அழியுற நிலமைக்கு தள்ளப்படும் போது, அதே தன்மை உடைய RNA கூட ஒட்டி, கச்சிதமா இணைச்சு புடிச்சுகிட்டு, இந்த DNA ல இருக்க எல்லா தகவல்களையும் RNA ல நகல் எடுக்குற வரைக்கும் ரெண்டையும் இணைச்சு புடிச்சுக்கும். அதன் பின் இன்னொரு புது DNA உருவாக்கும். இப்படி புது DNA உருவாவது நாளா அழிஞ்சுகிட்டு இருக்க DNA ல இருக்க தகவல் அனைத்தையும் சேமிச்சு வச்சுக்கும். அழிவே இல்லாத இந்த Telomerase எல்லா அணுக்களையும் செயல்படறது கிடையாது. மரபணுக்கள், இன பெருக்கத்துக்கான உயிர் அணுக்கள், இது ரெண்டு மட்டும் தான் Telomerase அ ஏதுக்குது.

ஆனா புற்றுநோய் அணுக்கள் இருக்கு இல்லையா, அது மட்டும் Telomerase அ அபரிவிதமா எதுக்குறனால, ரொம்ப சுலபமா வளர்ச்சி அடையுது. சிகிச்சை (ம) மருந்துகள் மூலமாகவும், புற்றுநோய் அணுக்களோட இந்த Telomerase அணுக்கள் சேரத்தை தடை செஞ்சா, புற்றுநோய் அணுக்களை கட்டுப்படுத்தி குணப்படுத்த முடியும் அப்படினு ஒரு ஆராய்ச்சி மேற்கொள்ள பட்டது. அந்த ஆராய்ச்சில தான், புற்றுநோய் அணுக்களோட இது சேர்றது தடை பண்ணமுடியும்னா, மற்ற அணுக்களோட ஏன் இதை சேர்க்க முடியாதுன்ற கேள்வி ஆராய்ச்சியாளர்கள் கிட்ட இருந்துச்சு. மற்ற அணுக்களோட சேர்க்க முடியுமான்னு ஒரு முயற்சி பண்ணி பார்த்தாங்க. அந்த முயற்சி தான் முதிர்ச்சியை தள்ளி போடுவதற்கான ஒரு திறவுகோலா அமைஞ்சுருக்கு.

அந்த முயற்சியில சாதாரண அணுக்கள் மத்தியில Telomerase அ புகுத்தும்போது, அவை இதை ஏத்துக்கிட்டு புதுப்பிக்க ஆரமிச்சுது. ஆனா மத்த அணுக்கள் சாதாரணமா இதை ஏன் ஏத்துக்குறது இல்லைன்றத்துக்கு விடை கண்டுபிடிச்சாராம். அதை புரிஞ்சுக்கிட்டா சாதாரணமாவே மத்த அணுக்களோட Telomerase அ சேர்க்க முடியும். அது சாத்தியமாச்சு அப்படினா எல்லா அணுக்களுமே தன்னை தான புதுப்பிச்சுக்க ஆரம்பிக்கும். அது சாத்தியம் ஆச்சுன்னா, முதுமை அற்ற வாழ்வு சாத்தியப்படும்.

2019ல் இதே ஆராய்ச்சியை எலிகளோட DNA ல செஞ்சு பார்த்தப்போ, எலிகளோட ஆயுட்காலம் 12% அதிகரிச்சுருக்குனு கண்டுபுடிச்சுருக்காங்க. இதே மாதிரி மனிதர்கள் மத்தியிலும் இதை சத்திய படுத்த முடியுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.
.

கேள்விகள் இருக்கு அப்படினா அதுக்கான விடைகளும் நிச்சயமா இருக்கும். ஆனா இந்த விடை நம்ம எதிர்காலத்துக்கு ஏத்தது தானா? சரி தானா? என்ற துணை கேள்விக்கும் நாம் விடை தேடுவது ரொம்ப அவசியம்.
நல்லதை பகிர்வோம்! நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
உங்கள் லோகன்.
credits: Ramya & vikatan