சீனாவின் அழிவு ஆரம்பம் ஆனால் இது உலகிற்கே எச்சரிக்கை / China Flood Explained / Logan

சீனாவில் மிகப்பெரிய வெள்ளம்

எல்லா வினைக்கும் எதிர் வினை இருக்கு என்பதில் மாற்று கருத்து இருக்கவே கூடாது. இப்போ Climate Change என்று நாம சொல்லிட்டு இருக்கோம். இந்தியாவில் பல விதமான புயல்கள் தாக்குகிறது. அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் புயல் வீசுகிறது. அதுவும் வெப்பப்புயல் என்று சொல்றாங்க.

China Flood file image 1
China Flood file image 1

இன்று சீனாவில் அதுவும் மத்திய சீனாவில் மிகப்பெரிய அளவில் வெள்ளம் வந்திருக்கிறது. 1000 வருடங்களில் இல்லாத வெள்ளம். இதற்கான காரணம் என்ன? இதற்கான காரணம் தெரிந்துவிட்டால் சீனாவின் மீது பழியை போடலாமா?, இயற்கை மீது பழியை போடலாமா? (அ) ஒட்டுமொத்த மனிதகுலத்தின் மீது பழியை போடலாமா?

3 நாட்களில் கொட்டித்தீர்த்த மழை

China Flood file image 2
China Flood file image 2

இன்று சீனாவில் மிகப்பெரிய அளவில் வெள்ளம் வந்துவிட்டது. இது எல்லா நாடுகளிலும் பேசப்படும் செய்தியாக மாறிவிட்டது. அதுவும் சீனாவின் மைய நகரமான Henan Province அதாவது Henan மாகாணத்தில் உள்ள Zhengzhou என்ற நகரம் தான். இந்த நகரம் பெய்ஜிங்ல கிட்டத்தட்ட இருந்து 200 கிலோமீட்டர்.

3 நாட்களில் 624 mm மழை பெய்ந்ததாக சொல்கிறார்கள்.

China Flood file image 3 - henan province - zhenzhou
China Flood file image 3 – henan province – zhenzhou

அதாவது 25 இன்ச் அப்படினு சொல்லலாம். ஒரு வருடத்தில் அந்த மாகாணத்தில் பெய்யக்கூடிய மழையே அதே 25 இன்ச் மழை தான். ஆனால் மூன்றே தினங்களில் அந்த அளவுக்கு மழை கொட்டித் தீர்த்திருக்கிறது. மழை இனியும் 3 தினங்களுக்கு வரலாம் என்று சொல்லியிருக்காங்க.

China Flood file image 4 - henan province - zhenzhou
China Flood file image 4 – henan province – zhenzhou

இதயம் கனத்த பதிவு!

இந்த Central China என்று சொல்லும் போது இந்த ஒரு மாகாணத்தில் மட்டுமே கிட்டத்தட்ட ஒன்றரை கோடி மனிதர்கள் வாழ்கிறார்கள். 20 லட்சத்திற்கும் அதிகமான மனிதர்கள் இதனால பாதிப்படைஞ்சிருக்கலாம் என்று சொல்றாங்க. ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் அப்புறப்படுத்த பட்டார்கள் என்றும் சொல்றாங்க.

China Flood file image 5- henan province - zhenzhou
China Flood file image 5- henan province – zhenzhou

இதெல்லாம் புள்ளி விவரமாக இருந்தாலும் பல இடங்களில், பல சாலைகளில், பல விதமான சுரங்கப்பாதைகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. அங்கிருக்க கூடிய Car, சாலைவசதிகள், Schools இதில் எல்லாமே தண்ணீர் நிரம்பி வழிகின்றது என்ற செய்தியை பார்க்கும் போது கொஞ்சம் கனத்த இதயத்தோடு தான் நாம பதிவு செய்கிறோம்.

தனக்கு தானே ஆபத்தை தேடிக்கொள்ளும் சீனா

China Flood dam file image 6- Henan province - Zhengzhou
China Flood dam file image 6- Henan province – Zhengzhou

ஏனென்றால் போன வருடத்தில் Three Gorges எனும் அணை உடையலாம் என்ற அச்சம் இருந்தது. பல நேரங்களிலும் சீனா செய்யும் தப்பு, பல மனிதர்களை காவு வாங்கிக்கொண்டு இருக்கிறது என்பதை சீனா மறுபடியும் மறுபரிசீலனை செய்யும் என்றே கூறலாம்.

இது சீனாவிற்கான எச்சரிக்கை மட்டும் கிடையாது.

China Flood desert leaf vs water art file image 7- Henan province - Zhengzhou
China Flood desert leaf vs water art file image 6- Henan province – Zhengzhou

ஏனென்றால் காலநிலை மாற்றம் வந்துகொண்டிருக்கிறது. மேற்குலக நாடுகளில் வெப்பக்காற்று வீசுகிறது.ஆனால் அதே நேரத்தில் சீனா, இந்தியா போன்ற நாடுகளில் மிக பெரிய அளவில் மழை பெய்கின்றது என்ற செய்தியை பார்க்கும் போது சீனா செய்துள்ள அந்த விஷியம் என்னவென்று தெளிவாக புரிந்து கொள்ளுங்கள்.

86,000 அணைகள் கட்டிவைத்துள்ளனர்.

China Flood dam news source file image 8- Henan province - Zhengzhou
China Flood dam news source file image 8- Henan province – Zhengzhou

நிறைய விதமான வழித்தடங்கள் அழிக்கப்பட்டுவிட்டது. நிறைய விதமான ஏரிகளின் வழிகள் சுருங்கிவிட்டது. நிறைய இடத்தில் concrete தரைகள், சுவர்கள் மட்டுமே எழுப்பப்படுகிறது. 86,000 அணை Summer சீசன்ல 53 ஆறுகளில் மிகப்பெரிய அளவில் வெள்ளம் வந்ததாக சொல்கிறார்கள். இவையெல்லாம் கேட்பதற்கு கொஞ்சம் வித்தியாசமாக இருக்கலாம். என்னக்கு தண்ணீர் வேண்டும், என் பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்றால் நான் தண்ணீரை வைத்து தான் எல்லாம் செஞ்சுட்டு இருக்கேன் என்று சொல்கிற சீனா, கிட்டக் கிட்டக் கிட்ட நிறைய அணைகளை கட்டி வருகிறார்கள்.

இயற்கையையும் மீறிய வெள்ளம்

சீனாவின் அண்டை நாடுகளில் தான் வெள்ளம் வருவதை நம்மளால் உணர முடிகிறது. நேபால், இந்தியா போன்ற நாடுகளை கவனித்தீர்கள் என்றால் உங்களுக்கே தெரியும். அதே நேரத்தில் இயற்கையாகவே ஜெர்மனி போன்ற நாடுகளிலும் இந்த மாதிரியான Flood ஏற்பட்டிருக்கிறது. ஆனால் இயற்கையையும் மீறி Flood என்பது சீனாவை மட்டும் அடிக்கடி தாக்குவதற்கான காரணம் என்னவென்று நிறைய விஞ்ஞானிகள் சொல்வது ஒரே ஒரு விஷியம் தான்.

China Flood dam map source file image 9- Henan province - Zhengzhou
China Flood dam map source file image 0- Henan province – Zhengzhou

தேவைக்கு அதிகமாக அணைகள் அங்கே கட்டப்பட்டிருக்கிறது. இப்படி கட்டிவிட்டோம் என்பது சீனாவிற்கும் நன்றாக தெரிகிறது. ஆனால் அந்த அணைகளை உடைப்பதற்காகவோ, அல்லது அடுத்ததாக வேறு கட்ட நடவடிக்கைகளில் சீனாவால் ஈடுபடமுடியவில்லை. அவ்வாறு ஈடுபட்டோம் என்றால், அவர்களுடைய வளர்ச்சி பாதிக்கும். அதை மிகப்பெரிய அளவில் இங்குள்ள மீடியாக்கள் பேசிவிடும் என்ற பயம் காரணமாக தான் சீனா அங்கிருக்கக்கூடிய செய்திகளை, உண்மையான நிலவரங்களை வெளியில் சொல்வதற்கே பயப்படறாங்க. மக்களால் Social மீடியாவில் கொஞ்சம் கொஞ்சம் வீடியோ அனுப்பிதான் இந்த மாதிரியான செய்திகள் எல்லாமே வெளிய வருகின்றது.

ஆபத்தான நிலைமையில் Zhengzhou

சீனாவில் இப்போது நடந்திருக்கும் Flood என்பது 1000 மடங்கு இல்லாத அளவிற்கு இந்த மழை பெய்திருக்கிறது என்ற செய்திகள் அனைத்துமே World Level ல Flash News ஆக வர வேண்டிய செய்திகள் என்று சொன்னால் அதுவும் மிகையில்லை.

China Flood dam news source file image 10- Henan province - Zhengzhou
China Flood dam news source file image 10- Henan province – Zhengzhou

Inhetan என்னும் Dam,அதே Zhengzhou வில் உள்ளது. இந்த Dam சீக்கிரமாக உடைந்து விடும் என்று சொன்னனாலே, சீனாவை சேர்ந்த பல நபர்களும், இராணுவ வீரர்களும், என்ன செய்றாங்கனா, அந்த Dam ன் முகப்புகளை கொஞ்சமாக உடைத்துவிடுகிறார்கள்.

China Flood army file image 10- Henan province - Zhengzhou
China Flood army file image 10- Henan province – Zhengzhou

ஒட்டுமொத்தமாக அணை உடைவதற்கு பதிலாக இந்த மாதிரியான வழித்தடங்களை திறந்து விட்ரலாம் என்று சொல்லி சில விதமான டாமை கொஞ்சம் கொஞ்சமாக ஓபன் பண்றாங்க.

China Flood dam file image 10- Henan province – Zhengzhou

இப்படி ஓபன் செய்வது வெறும் ஒரு மணி நேரத்தில் நடைபெறுகிறது. 4 மணி முதல் 6 மணிக்குள் இந்த 624 mm மழை பெய்தது என்று சொன்னோம் பாருங்க. அதில் மூன்றில் ஒரு பங்கு மழை பெய்திருக்கிறது. இந்த மாதிரி மழைக்காக டாமை திறந்துவிட்டு, அங்கே வாழக்கூடிய மனிதர்கள் மிகப்பெரிய அளவில் அச்சப்படும் நிலைமைக்கு தள்ளப்படுகிறார்கள்.

Artificial Climate Change

எல்லா இடத்துலயும் Climate Change இருக்கலாம். சீனாவை மட்டும் இப்படி சொல்வதற்கான காரணம் என்னவென்றால் 86,000 அணைகள், அங்கிருக்கும் நீர்த்தேக்கங்கள் இது எல்லாம் சீனாவின் வளிமண்டலத்தை எப்போதுமே குளிர்ச்சியாக வைக்கின்றது.

குளிர்ச்சியாக இருக்கக்கூடிய வளிமண்டலம் காற்று வழியாக பல விதமான நாடுகளுக்கு செல்கிறது. புயலாக மாறுவதற்கான வாய்ப்புகளும் அங்கே ஏற்படுத்தப்படுகிறது. இப்படி தான் பல நேரங்களிலும், பல நாடுகளுக்கும் Artifical ஆக ஒரு climate change ஐ சீனா போன்ற நாடுகள் ஏற்படுத்துகின்றது.

பிரச்சனைகளுக்கு முக்கிய காரணம் சீனா

சீனாவில் இது மட்டும் தான பிரச்சனை என்று கேட்டால், Dam எல்லாமே ஓபன் பண்ணவச்சு ஒரு விதமான இயற்கை பேரிடர்களை உருவாக்குகிறார்கள். இன்னோரு கட்டத்தில் அதிகளவு Climate Change க்கு தேவையானது என்ன? Carbon di oxide (அ) மிகப்பெரிய அளவில் factory ல இருந்து வெளியாக கூடிய புகைகள். இதையும் உலகத்தில் நம்பர் 1 நாடாக யார் தான் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள்? இதே சீனா தான் வெளியிட்டு கொண்டிருக்கிறது. இந்த 2 reason தான் Climate change க்கு மிக முக்கியமான reason. இது இரண்டிற்குமே காரணம் சீனா தான். இப்பொது நாம தப்பு சொல்லாம வேறு என்ன சொல்லமுடியும்.

சீனாவில் இருக்கக்கூடிய மனிதர்களுக்கு தெரியும், நம் நாடு நமக்கில்லை, உலகத்திற்கே மிக பெரிய அச்சுறுத்தலாக மாறி வருகிறது என்று சொல்லி. தண்ணீரை ஒரு ஆயுதமாக மாற்ற முடியுமா? என்பதை சீனாவால் மட்டும் தான் யோசிக்க முடியும். அங்கிருக்கும் பல விதமான நதிகளை, ஆறுகளை அவுங்க நாட்டுக்குள்ளையே வைத்து கொள்கிறார்கள்.

திபெத் ஆக இருக்கட்டும், இந்தியாவிற்கு வர வேண்டிய பல விதமான ஆறுகள் என்பது தடுத்து நிறுத்தப்படுகிறது. அதே நேரத்தில் நேபாளம், பாகிஸ்தானுக்கு வர வேண்டிய ஆறுகளும் தடுத்து நிறுத்தப்பட்டு அவை அனைத்தும் எனக்கே வரவேண்டும் என்று சொல்லி சீனா அவர்கள் பக்கமே திருப்பி விட்டுட்டுருக்காங்க. இப்படி திருப்பிவிடப்படும் இந்த தண்ணீரும் அங்கே மிகப்பெரிய பிரச்சனையாக மாற்றப்படுகிறது.

Typhoon எனும் சூறாவெளி

சீனாவிடம் நாம் கேட்டோம் என்றால், Typhoon In-fa தான் இதற்கு காரணம் என்று சொல்லிட்டாங்க. இந்த Typhoon என்பது நம் ஊரில் வரக்கூடிய சூறாவளி மாதிரித்தான். இதே போல் 5 Typhoon இந்த வருடத்தில் மட்டுமே இந்த மாகாணத்தை தாக்கியுள்ளது. சீனா அதிநவீன டெக்னாலஜி எல்லாமே யூஸ் பன்னிட்டு இருக்காங்க.

சொல்லப்போனால் இது வரைக்கும் உலக நாடுகள் பயன்படுத்தாத பல விதமான ப்ரொஜெக்டை இந்த மாதிரி Flood வந்துவிடும் என்று கூறி பயன்படுத்தி வருகிறது. 5G (அ) Artificial Intelligence ஆக இருக்கட்டும் அங்கே ஆறுகளின் ஒரு level கூடும் போது, அதனுடைய images அப்பப்போ பல விதமான website ல் upload ஆகுது. அங்கிருக்கக்கூடிய Artificial Intelligence, Machine Learning வழியாக பல விதமான கட்டளைகளை சீன அரசாங்கம் பிறப்பித்து வருகிறது. அப்படி இருந்தும் சீனாவால் இதை தடுக்க முடியவில்லை.

இயற்கை அதோட ஆட்டத்தை காண்பித்து தானே ஆகும்.

Sponge City Project

Concrete தரைகள் போடப்படுகிறது, பல விதமான ஆறுகளின் நிலப்பரப்பு சுறுக்கப்படுகிறது, ஏரிகளின் நீளம் என்பது குறைக்கப்படுகிறது, இவை அனைத்தும் Flood க்கு காரணம் என்று சொன்னாலும், சீனா என்ன செய்றாங்கன்னா, 2014 ஆம் வருடம் Sponge City Project என்பதை ஆரமிக்குறாங்க. ஏனென்றால் சீனாவிற்கு தெரியும், நாம மிகப்பெரிய தப்பு பன்னிட்டு இருக்கோம், எப்போ வேண்டும் என்றாலும் வெள்ளப்பெருக்கு வரலாம், இனிமே நாம் செய்யக்கூடிய Cities எல்லாமே Sponge City வடிவில் இருக்கவேண்டும்.

தேவையில்லாத கண்டுபிடிப்புகளால் அழிவு

தண்ணீர் வந்தது என்றால் அந்த தண்ணீரை சீக்கிரமாக உறிஞ்சு எடுக்கக்கூடிய ஒரு விதமான கட்டமைப்பு, அப்படி உறிந்து எடுக்கும் தண்ணீர் சீக்கிரமாக வெளிய செல்வதற்கான கட்டமைப்பு. இந்த மாதிரி கட்டமைப்பினை செய்யும் போது, நாம Flood ல இருந்து தப்பிச்சுடலாம் என்று நினைக்குறாங்க. சீனாவை அழிக்க பல நடுகள் முயன்று வரும்போது, அங்கிருந்து தப்பித்து வந்தவர்கள் கூறிய 2 விஷியங்கள், சீனாவின் தேவையில்லாத கண்டுபிடிப்புகள் சீனாவை சீனாவே அழித்துக்கொள்ளும் என்பதும், சீனாவின் முட்டாள்தனமான நம்பிக்கைகள் சீனாவை சீக்கிரமாக அழித்துவிடும் என்பதும் தான்.

China Flood News source India source file image 19- Henan province - Zhengzhou
China Flood News source India source file image 19- Henan province – Zhengzhou

சீனாவால் கட்டப்பட்டிருக்கும் அணைகளால் பூமியின் சுழற்சியில் சின்னதாக வித்தியாசம் வந்துள்ளது. சீனா கட்டியிருக்கும் இந்த அணைகளால் பல விதமான காலநிலை மாற்றங்கள் வருகிறது. சீனா வெளியிடக்கூடிய பல விதமான நச்சு பொருட்களால், நச்சு வாயுக்களால் மறுபடியும் Climate change வருகிறது. இது சீனாவை மட்டுமின்றி பல நாடுகளையும் பாதிக்கின்றது. ஒட்டுமொத்தமாக இயற்கை சீனாவிற்கு மிகப்பெரிய ஒரு பதிலை தருவதற்கு காத்துக்கொண்டிருக்கிறது.

China Flood News dam file image 20- Henan province - Zhengzhou
China Flood News dam file image 20- Henan province – Zhengzhou

சீனா – மிகப்பெரிய அளவில் பேசப்படும் நாடு

China Flood News dam file image 21- Henan province - Zhengzhou
China Flood News dam file image 21- Henan province – Zhengzhou

இன்னும் 3 தினங்கள் மட்டும் கிடையாது, இது ஐந்தாவது Typhoon. இதே மாதிரி 2 Extreme Typhoon என்பது சீனாவால் மிகப்பெரிய அளவில் பேசப்படும் என்று சொல்லிருக்காங்க, அதுவும் இந்த வருடமே நாடாகும் என்று சொல்லியிருக்காங்க. சீனாவிற்கு கொஞ்சம் கொஞ்சமாக இந்த TIme Bomb இருக்கு பாருங்க, Three Gorges அணை உடையுமா? உடையாதா? என்று இந்த மாதிரியான குழப்பத்தில் இருக்கும் சீனாவிற்கு பல அணைகள் உடைகிறது என்ற எதார்த்ததையும் புரிந்துகொள்வதற்கு கால தாமதம் ஆகிக்கொண்டுள்ளது. சீனா இதில் இருந்து விடுபடுமா?

China Flood News power of social media file image 22- Henan province - Zhengzhou
China Flood News power of social media file image 22- Henan province – Zhengzhou

இந்த பதிவை பற்றிய உங்களுடைய கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன. இதற்கு காரணம் இயற்கை மட்டும் தானா? (அ) இந்த இயற்கையை சோதித்து கொண்டிருக்கும் சீனா போன்ற நாடுகளா? உங்களின் கருத்துக்கள் தான் இங்கே மிக பெரிய விவாதத்தை ஏற்படுத்த போகிறது. இந்த விவாதம் தான் மேலும் இது போன்ற பதிவை பதிவிடும் ஆயுதமாக மாறப்போகிறது.

நல்லதை பகிர்வோம்! நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!

உங்கள் லோகன்.

Also, Read: Afghanistan war யாருக்கு லாபம்? நஷ்டம்?

Leave a Reply