இந்த உலகத்துல மொத்தம் 767 கோடி மனிதர்கள் இருக்கின்றோம். இதுல 130 கோடி மனிதர்களுக்கு Electricity இல்லை அப்படின்ற புள்ளிவிவரத்தை கேட்கும் போது கொஞ்சம் ஷாக்கிங்கா இருக்குல்ல !

Electricityக்கு பதிலான வெளிச்சம் !

நிறைய மனிதர்கள் இரவில் Electricity க்கு பதிலா, மண்ணெண்ணெய் (kerosene), விறகு, டீசல் போன்ற விஷயத்தை பயன்படுத்தி அவர்களுக்கு தேவையான வெளிச்சத்தை உற்பத்தி செய்கிறார்கள், உருவாகின்றார்கள் எனும்போது, இதற்கு எதிரா ஒரு கண்டுபிடிப்பு நிகழ்ந்தா எப்படி இருக்கும்?

ஆனந்தம் தரும் அறிவியல் கண்டுபிடிப்பு !

ஒரு அறிவியல் கண்டுபிடிப்பு, ரொம்ப பெரிய அளவில் பாதிப்பு அடைந்த மனிதனுக்கு, இது நாள் வரையில் அவன் கண்டிராத ஆனந்தத்தை கொடுக்க வேண்டும். அந்த ஆனந்தம் அடுத்த தலைமுறைக்கும் பகிரப்படவேண்டும், அதுதானே அறிவியல் கண்டுப்பிடிப்பு !

LED அப்படினு சொல்லும்போது, வெள்ளை கலர்ல ஒளிரக்கூடிய LED கண்டுபிடிப்பதற்காக 30 வருடங்கள் ஆனது என்று கூறுகிறது வரலாறு. அந்த வரலாறுக்கும், இப்ப நாம பார்க்கக்கூடிய மிக முக்கியமான கண்டுபிடிப்புக்கும் என்ன சம்பந்தம்? இந்த பதிவுல பார்த்தரலாமா!

வெளிச்சம் தந்த மாமனிதர் !

THOMAS ALVA EDISON

THOMAS ALVA EDISON என்ற பெயரை கேட்டதும் நினைவில் வருவது குண்டு பல்ப். இந்த பல்ப்ல 90% Energy Waste ஆகுது. 1 Watt = 16 Lumens என்பது தான் நமக்கு வெளிச்சமா கிடைக்குது.

இந்த வெளிச்சத்துக்கு பதில் புதியதாக கண்டுபிடிக்க வேண்டும் என்பதன் முடிவே TubeLightFLOURESCENT TUBES அப்படினு சொல்லுவாங்க.

ஆராய்ச்சியின் முடிவில் LED

அதன்பிறகு தான் LED கண்டுபிடிக்கப்பட்டது. முதலில் கண்டுபிடிக்கப்பட்ட LED அனைத்துமே சிவப்பு மற்றும் பச்சை கலர்ல தான் ஒளிர்கிறது. எப்படியாவது வெள்ளை நிறத்துல ஒரு வெளிச்சத்தை கொண்டு வரவேண்டும் என்றால் நீல கலர் LED தயாரிக்க வேண்டும். நம்மிடம் இருக்கும் பச்சை (ம) சிவப்பு நிறத்துடன் நீல நிறத்தை சேர்த்தால் தான் வெள்ளை நிற ஒளியை நம்மால் ஏற்படுத்த முடியும். இந்த ஒரு ஆராய்ச்சிக்கு மட்டுமே 30 வருடங்கள் எடுத்து கொண்டார்கள் விஞ்ஞானிகள்.

இந்த ஆராய்ச்சிக்கே 30 வருடம் அப்படினா LED எப்போது கண்டுபிடிக்கப்பட்டது? 1960 ல் தான் LED என்பது ப்ரோமோசியலா மனிதர்களுக்கு கிடைக்கப்பெற்றது. 1907 ல் MARCONI என்பவருக்கு ரொம்ப உதவியா இருக்காரு H. J. Round என்ற Engineer.

மஞ்சள் நிறத்தில் ஒரு வெளிச்சம்!

Marconi க்கு தேவையான ஒரு கண்டுபிடிப்புல ஈடுபட்டு கொண்டிருக்கும் போது, மின்சாரம் ஒரு wire வழியா கடத்தி விடப்படுகிறது. அந்த மின்சாரம், wire ஒரு Crystal க்கு இடையே மாட்டிக்கொண்டது. அந்த மின்சாரம் போகும்போது சின்னதா மஞ்சள் நிறத்தில் ஒரு வெளிச்சம் வருகிறது. இதை பார்த்ததும் அப்போ இருந்த Electrical World எனும் Magazine ல அவர் கண்டுபித்த மஞ்சள் வெளிச்சத்தை பற்றி விரிவா ஒரு paper போடுறாரு.

இது தான் இப்போ நாம use பண்ற Semiconductors, Diode என்பதின் முதல் கட்டம் என்று கூறலாம். இந்த முதல் கட்டத்தை தான் விஞ்ஞானிகள் Katz Viscus என்று சொல்வார்கள். இந்த Katz Viscus என்ற device தான் நாளடைவுல Semiconductor அ, நாம use பன்ற LED அ மாறி நிற்கின்றது.

எதற்காக LED ?

ஒரு கட்டத்தில் இந்த குண்டு பல்ப், Tubelight இவற்றையும் தாண்டி இந்த LED ஏன் கண்டுப்பிடிக்க வேண்டும்? என்ற கேள்வி எல்லாருக்குமே இருக்கும். காரணம் இருக்கு. இந்த Electricity என்பது கூடுதலாக பயன்படுத்திக்கிறது,

ஓவர் ஹீட் produce பண்ணுகிறது, இல்ல தேவையான நேரத்தில் அதனுடைய power increase பன்னி தரமாடிக்குது, இந்த மாதிரியான பல பிரச்சனைகளுக்கு மத்தியில் தான் LED என்ற கண்டுப்பிடிப்பு உருப்பெற அராமிக்குது.

1960 ல் சிவப்பு, பச்சை LED கண்டுப்பிடித்த பிறகு, 1990-96 இந்த வருடங்களில் தான் வெள்ளை நிற LED என்பது introduce ஆனது. LED என்பது சாதாரண புல்ப்களை விட 25-30 வருடங்கள் கூடுதலாக அதனுடைய ஆயுள் இருப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது.

சாதாரண பல்ப், குண்டு பல்ப் போன்ற பல்ப்பில் ஒரு விதமான gas நிரப்பப்பட்டிருக்கும். அவற்றில் ஒரு glass structure இருக்கும். அது எப்போ வேண்டும் என்றாலும் உடைந்து விடலாம். அனால் LED ல் அது போல கிடையாது. அதே போல், LED ஒளிர வைக்க குறைவான voltage போதுமானது. இவ்வளவு advantages இருப்பதால் 20ஆம் நூற்றாண்டை ஆண்டது Thomas Alva Edison கண்டுபிடித்த பல்ப் என்றால், 21ஆம் நூற்றாண்டை ஆண்டது LED தான்.

நாம் வீட்டில் பயன்படுத்தும் Phone, Laptops, நம்முடைய Tubelights இது எல்லாமே LED அப்படினு சொல்லுவாங்க. அந்த அளவுக்கு நம் வாழ்வில் மிகப்பெரிய impact ஏற்படுத்திய ஒரு கண்டுபிடிப்பு LED. இந்த கண்டுபிடிப்புல நீல நிறம் இருப்பதால் கண்ணுக்கு கேடு விளைவிக்கும் என்று அறிவியலில் அதற்கும் வேறு விதமான கண்டுபிடிப்புகளை கண்டுபிடிச்சிட்டு இருக்காங்க.

Philippines நாட்டின் Edison – Aisa Mijeno

இவ்வளவு தூரம் நாம பார்த்தது, சாதாரண கரண்ட் இருக்க கூடிய மனிதர்களுக்கு எப்படி உதவுகிறது என்பது தான். Electricity என்பது இல்லாத, பார்க்காத மனிதர்களுக்கு, இந்த LED அ இருக்கட்டும், வேற எந்த கண்டுபிடிப்பா இருக்கட்டும் இது எப்படி பயன்படும் என்ற வேறு ஒரு விசியம் இருக்கிறது. இதே மாதிரியான ஒரு எண்ணம் Aisa Mijeno, ஒரு இளம் பொறியியல் பட்டதாரிக்கு தோன்றுகிறது. Philippines நாட்டை சேர்ந்தவர்.

file image for scientist AISA MIJENO

தீவுகளை உள்ளடக்கிய நாடு Philippines. கிட்டத்தட்ட 7100 தீவுகள் இருக்கு என்று சொல்லலாம். இந்த தீவுகளில் பழங்குடியினர் பலர் இருக்கின்றனர். நிறைய தீவுகளில் Electricity என்பதே கிடையாது.

தீவுகளில் வெளிச்சம் இல்லாத மக்கள் வாழ்க்கை

இந்த Aisa என்பவர் அங்கு உள்ள தீவுகளில் வசிக்கும் மக்கள், அவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை பார்க்க போறாங்க. இரவு நேரம் வரும் போது மக்கள் வெளியே வருவதற்கு பயப்படுகிறார்கள். அந்த மக்களுக்கு தேவையான அவசர உதவிகள் கிடைக்காம கஷ்டப்படறாங்க. படிக்க முடியல, எதுமே செய்யமுடியல.

அவர்களின் தேவைக்கு kerosine அதாவது மணென்னையை பயன்படுத்துறாங்க. அவர்களுக்கு தேவையான kerosine மாதத்தில் ஒன்றோ இரண்டோ முறை நீண்ட பயணத்திற்கு பின்பே கிடைக்க பெறுகிறது. அவற்றை சேகரித்து தான் இரவு பொழுதைக்களிக்கிறோம் என்று கூறுகிறார்கள். அவற்றை சேகரித்து வைக்கும் போது ஏற்படும் விபத்துகளும் அங்கே தவிர்க்க முடியாத விபத்துகளா மாறுகிறது. இவற்றை கேட்கும் போது அவர்களின் கஷ்டம் போக அரசாங்கத்தால் எதுவும் செய்ய முடியாதா? விஞ்ஞானத்தால் எதுவும் செய்ய முடியாதா? என்று Aisa மனதில் 1008 கேள்வி. நாம ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது.

Substainable Alternative Lightning – salt file image

உப்பு நீரின் மகத்துவம்

அந்த தீவுகளில் கண்டிப்பா உப்புநீர் கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கு. உப்பு நீர் வைத்து Electricity produce பண்ண முடியும்னு நாம படிச்சுருக்கமே! அதை வைத்து இந்த மனிதர்களுக்கு தேவையான ஒரு வெளிச்சம், ஒரு light ஏற்படுத்தி குடுக்க முடியாதா? இப்படி ஒரு கேள்வி Aisa க்கு தோன்றுகிறது. So,எப்படியாவது கண்டுபிடிக்கணும்னு அவுங்க ஈடுபடுறாங்க. இவரின் யோசனையை கேட்ட பலரும் negative comments குடுக்குறாங்க.

Sustainable Alternative Lighting – SALT FILE IMAGE

அனால் Aisa சாதாரணமா விட்டுவிடவில்லை. கொஞ்சம் கொஞ்சமா research செஞ்சு SALt எனும் Light உருவாக்குறாங்க.Substainable Alternative Lightning என்பதே SALt.

இந்த SALt ஒரு Lampan மாதிரி இருக்கும். SALt என்னும் Lampan அ நீங்க கழட்டலாம். அதை கழட்டி 1 டம்ளர் உப்பு தண்ணீர் (அ) சாதாரண தண்ணீர் கூட ஊற்றலாம். சாதாரண தண்ணீர் ஊற்றினால் 2 ஸ்பூன் உப்பு சேர்த்து மூடி வைத்துவிட வேண்டும். சிறிது நேரத்தில் நாம் கண்டுப்பிடித்த LED ஒளிர ஆரமிக்கும். அப்படி ஒளிர LED 8 மணி நேரம் ஒளிரும்.

Sustainable Alternative Lighting – SALT FILE IMAGE

SALt எனும் Lamp ன் விலை, இந்திய மதிப்புப்படி சுமார் 1500 ரூபாய். 2016ல் இருந்து இது ரொம்ப பெரிய பேசும் பொருளா இருந்தது. ஆனா இது பெரிய அளவுல இன்னும் மார்க்கெட்க்கு வரல. மார்க்கெட்டுக்கு வந்தா இது எத்தனை பேருக்கு இழப்பு என்பதை நீங்களே புரிந்து கொள்ளுங்கள். இந்த lightக்கு maintenance இருக்கா என்று கேட்டா?, 6 மாதத்திற்கு ஒரு முறை 100ல் இருந்து 150 ரூபாய்க்கு ஒரு பொருளை இந்த Lamp ல replace பண்ண மட்டும் போதும். இது பெரிய அளவுல உற்பத்தி ஆகாமல் இருப்பதால் 150 ரூபாய். உற்பத்தி அதிகரிக்க தொடங்கினால் 10 (அ) 15 ரூபாய்க்கு கூட கிடைக்க வாய்ப்பு இருக்கு என்று Aisa Mijeno கூறுகிறார்கள்.

இந்த கண்டுப்பிடிப்பில் இருக்கும் நன்மைகள்…

இந்த Lamp ஒரு கண்டுப்பிடிப்பு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு சிறந்த உதாரணம். இந்த LED சுற்றுச்சுழலை எந்த வகையிலும் பாதிக்காது.

நல்லா தெரிஞ்சுக்கோங்க! மீதமுள்ள light(குண்டு பல்ப், tube light) காலநிலை மாற்றத்திற்கான வாயுக்களை அதிக அளவு வெளியேற்றும் போது, இந்த SALt எனும் LED பல்ப் அப்படி எதுமே செய்றது கிடையாது. அடுத்ததா, 1 டம்ளர் தண்ணீர்ல 8 மணி நேரம் பயன்படுத்தலாம். இந்த ஒரு device வச்சு mobile க்கு charge ஏற்ற முடியும்.

இதை ஏன் பெரிய அளவுல பேச மறுக்கிறோம்?

நம்முடைய மாணவர்களுக்கு ஒரு ஊந்து சக்தியா இருக்கலாம் தானே. இந்த பூமி இருக்கும் வரை கண்டிப்பா கடல் என்பது இருக்கும். கடல் நீர்ல உப்பு இருக்கு என்பது நமக்கு தெரியும். 1 லிட்டர் தண்ணீர், 8 மணி நேரம் charge நிற்பதை வைத்து எத்தனை நபர்கள் அவர்களுடைய வாழ்க்கையை நடத்தலாம்.

600 – 1000க்கும் அதிகமான நபர்களுக்கு இந்த LED device கொடுக்கப்பட்டிருக்கு என்று கூறுகிறார்கள். ஆனா இது 1000 நபர்களுக்கு மட்டுமே கிடைக்க வேண்டிய ஒரு device தானா?

Sustainable Alternative Lighting – SALT FILE IMAGE

இந்தியாவில் இந்த lamp பற்றி போதுமான விழிப்புணர்வு இருக்கின்றதா? இந்தியாவின் விஞ்ஞானிகள், மாணவர்கள் இவர்களுக்கு இந்த செய்தி ஒரு உத்வேகமாக இருப்பதற்கான வாய்ப்புகள் இருக்கு. அவர்களின் project இதே மாதிரியாக இருப்பதற்கு வாய்ப்புகள் இருக்கு. இதற்கு அறிவியல் பூர்வமாக விளக்கம் கொடுக்க வேண்டிய நபர்கள் தாராளமாக கொடுக்கலாம்.

மக்களின் பார்வையில் சேர வேண்டும்…

மாணவர்களின் பார்வையில் சேர வேண்டும்…..

Aisa என்பவர் போல் நிறைய நிறைய மாணவர்கள் மனிதர்களுக்கு, அடுத்த தலைமுறையினருக்கு பயன்படக்கூடிய கண்டுப்பிடிப்பாக மாற்ற வேண்டும். அதற்கான முதல் விலை இதுவாக இருக்கட்டும். உங்கள் பிள்ளைகளிடம் இந்த செய்தியை பகிருங்கள்.

நலத்தை பகிர்வோம் ! நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம் !

CREDITS: RAMYA & VIKI

Leave a Reply