என் இனம் வாழ்ந்த தீவே!
எவனோ ஒருவன் வர
அவன் வம்சம்
மகா வம்சம் என சித்தரிக்க
நீயும் எனக்கு சமம்தான்
என்ற தமிழனை
வாழவே விடாமல்
துரத்திய சிங்களம்
ஏன் நாம திருப்பி அடிக்கல?
எனும் ஏக்க குரல்
எத்திசையிலும் எதிரொலிக்க
அந்த குரல் ஒட்டுமொத்த
தமிழர்களின் குரலாய் ஒலிக்க
நடுங்கிய எதிரிகள்
நசுக்கிய துரோகிகள்
நடுவே நாம் தொலைத்தது
விடுதலையை மட்டும் அல்ல
என் இனத்தின் உரிமையை
உரிமையை காக்க வந்த
இனத்தின் தலைவனை
இன்று நாம் தேடும் தலைவன்
நமக்குள் தான் இருக்கிறான்
நாளைய தலைமுறையிலும்
என் தலைவர் இருப்பார்
என்பதில் மாற்று கருத்து இல்லை
பல தலைமுறைகள் சொல்லும்
ஒரே ஒரு பெயர்
மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன்!

நாம ஏன் திருப்பி அடிக்கல? இந்த கேள்வி தான் மிக பெரிய ஒரு தாக்கத்தை மேதகு திரைப்படத்துல ஏற்படுத்துச்சு அப்படினு சொல்லலாம். நிறைய பேர் நம்மள தாக்கிக்கிட்டே இருக்காங்களே! நம்ம ஊருக்கு வந்து மகாவம்சம் எனும் புத்தகத்தை எழுதி, அதில் தமிழர்கள் தான் ஆதிக்குடிகள் என்று சொல்லப்பட்டு, பிற்காலத்தில் தமிழர்கள் வளர்ந்து விட்டார்கள் என்றால், வாழ்ந்து விட்டார்கள் என்றால், சிங்களம் இங்கே இருக்காது. நமக்குன்னு ஒரு நாடு இருக்காதுன்னு சொல்லி தமிழர்களை வீழ்த்த என்னென்ன சதிகள் செய்யப்பட்டது?கொஞ்சம் கொஞ்சமா அங்கே இருந்த மனிதர்கள் என்ன உணர்ந்தார்கள். அப்படிப்பட்ட மனிதர்களில் இருந்து ஒரு தலைவன் எப்படி உருவாகினான்.
இந்த மேதகு (Methagu) திரைப்படத்தை பார்த்துவிடலாமா?

மேதகு எனும் திரைப்படம். தலைவர் பிரபாகரன் அவர்கள் எப்படி ஒரு போராளியாக, இன தலைவனாக மாறினார் என்பதற்கான முதல் trailer. இந்த மாதிரியான படம் வருவது என்பது ரொம்ப பெரிய பிரச்சனைக்கு உட்படும் என்று சொல்லலாம். அதற்கு சிறந்த உதாரணம், படம் தொடங்கும் போது Blacksheep bs Value என்ற App ல தான் இந்த படத்தை ரிலீஸ் பண்ணிருக்காங்க.

Methagu படத்தின் வெளியிட்டு தளம்
படத்தினுடைய முதல் frame என்னனு கேட்டீங்கன்னா? இந்த படத்தில் சொல்லப்பட்டிருக்கும் கதாபாத்திரங்கள், கதைகள், இவை அனைத்துக்கும் காரணம், இந்த படத்தை படைத்தவர்கள் தான். BS Value க்கோ, நிறுவனத்திற்கோ எந்த தொடர்பும் கிடையாது. நாங்க ஒரு வெளியிட்டு தளம், அவ்வளவு தான் என்று சொல்லி தொடங்கி இருக்கிறார்கள்.

இதுக்கான காரணத்தை நல்லா புரிஞ்சுக்கோங்க. இந்த மாதிரியான படம் வெளியில வந்தா பல பிரச்சனைக்களுக்கு உட்படும். அப்படி உட்படும்போது அதை வெளியிட்டவர்கள் அதனால் ஏற்படும் pressures இதல்லாம் தாங்கணும். ஆனாலும் ஒரு படி வந்து நான் இந்த படத்தை வெளியிடுகிறேன் என்று சொன்ன Blacksheep இன் BS Value App அ இருக்கட்டும், அதற்கு பின்னால் இருந்த பல நபர்களா இருக்கட்டும், அவுங்களுக்கு மிகப்பெரிய நன்றிகள்.
மேதகு எனும் திரைப்படம் crowndfunding வழியா தான் வந்தது எனும் போதும், அதற்கு ஆரம்பத்தில் எவ்வளவு எதிர்ப்புகள் இருந்தது என்றும், ஷூட்டிங் எத்தனை முறை மாற்றிவைக்கப்பட்டது, இதனால 30 லட்சத்தில் முடிய வேண்டியது 60-65 லட்சம் உயர்ந்துவிட்டது என்பது போல் பல ஊடகங்களில் செய்திகளா வாசித்துருப்பீர்கள்.
மேதகு ( Methagu ) படம் ஏற்படுத்திய தாக்கம் என்ன?
சாதாரண மனிதனுக்கும், குழந்தைக்கும் எதற்காக இலங்கையில் பிரச்சனை நடந்தது எனும் கேள்வி எழும் போது, இத்திரைப்படத்தில் சொல்லப்பட்டிருக்கும் விஷயமே உன் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்றால் அங்கு இருந்த மனிதர்கள் எவ்வளொ பெரிய துன்பத்துக்கு ஆளகிருப்பார்கள். அதன் காரணமாகத்தான் பிரச்சனை நடந்தது, போர் நடந்தது, துரோகிகள் நம்மை வீழ்த்திவிட்டார்கள்.
துரோகிகள் எனும் போது, இந்த கதை ஆரமிப்பதே 90களில் நடக்கக்கூடிய ஒரு விதமான தெருக்கூத்து வழியாகத்தான்.அந்த கூத்தில் ஒரு வார்த்தையை சொல்லியிருப்பார்கள்.

“எந்த கூத்துடா இன்னைக்கு போட்ருக்காங்க? முருகன் கூத்தா? பாண்டிய கூத்தா? “
“இல்லடா, ஏதோ ஒரு வகையான மாவீரன் கூத்து. எவ்வளவு படைகள் வந்தாலும் சரி,நெஞ்ச நிமித்தி தில்லா புலி மாதிரி நிபான்டா” எனும் சொல்லும் ஒரு மாவீரரின் கதையை சொல்லிட்டு இருக்காங்க அப்படினு சொல்லும்போதே ஒரு frame ல இலங்கையோட, குறிப்பா ஈழத்துடைய ஒரு வரைபடம் சுவற்றில் வரைய பட்டிருப்பதாக காண்பித்திருப்பார்கள்.. Handsoff. அது மட்டும் இல்லாமல் என்னென்ன நடைபெற்று கொண்டிருக்கின்றது என்பதை தெருக்கூத்து வடிவுல சொலிட்டே இருப்பாங்க. அப்போது ஒரு வார்த்தை இருக்கு,
“கண்டவனினுடைய கால் புடிச்சு உயிர் பிச்சை கேட்கக்கூடிய ஒரு சமுதாயமாக மாறி நிற்கின்றோம், எங்களுக்கு உயிர் மட்டும் இருந்தால் போதும், உரிமை எல்லாம் தேவையில்லை என்று நெனைச்சுட்டோமா!
நாங்க கந்தல் கந்தலா கிழிஞ்சுருக்கோம், எங்களை தெய்ப்பதற்காக ஊசி வரும் என்ற செய்தி வந்தது. ஆனா அந்த ஊசிக்கூட எங்கள் கண்னை குத்திவிட்டது”

இந்தியா ஈழமக்களுக்கு, குறிப்பா தமிழ் மக்களுக்கு எதிரா இருந்த அந்த ஒரு செய்தியைக்கூட ஊசியாக, ஊசி உவமையாக காண்பித்திருக்கிறது எனும் போது அங்கு ஏற்பட்டிருந்த அந்த வழியை நமக்கு உணர்த்துகிறது.
ஒரு இனம் அல்லது இனப்போராளிகள் எப்போது உருவாகிறார்கள் என்பதை சொல்லியிருந்தாங்க. அவர்களுடைய உரிமைகள் என்பது கொஞ்சம் கொஞ்சமாக பறிக்கப்படுகிறது. அவுங்க சாதாரணமாக வாழக்கூடாது, அப்படி வாழ்ந்தாலும், அவர்களுக்கு என்று ஒரு வழிபாடு இருக்கக்கூடாது. அந்த வழிபாட்டு செய்யும் நபர்களை அவுங்க வந்து தீயெறிப்பது போன்ற விஷியன்கள் அனைத்துமே இங்கு natural அ காண்பிக்கப்பட்டதால், இங்கே வழிபடக்கூடிய(அ) மதத்தின் பெயரால் அடிபட்டு கொண்டிருக்கும் (அ) பாகுபாடு கொண்டு மனிதர்கள் வாழ வைக்கப்பட்டிருக்கும் இந்த உலகத்தில் அந்த impact என்னவென்று easy அ புரிந்து கொள்ளலாம். மதம் வழியாக அங்கே பிரச்சனை தூண்டப்படுகிறது.

அடுத்த பிரச்சனை, படிப்பு. சாதாரணமா இளைஞர்களுக்கு படிப்பு இல்லை என்றால் அதன் தாக்கம் அடுத்த தலைமுறை வரை தொடரும் எனும் டயலாக் இப்படத்தில் இருக்கு. அப்படினா அந்த படிப்பை எப்படி தடுத்து நிறுத்த வேண்டும் ? அந்த படிப்பு இருப்பதால் தான் நம்மள விட பெரிய ஆள வந்தராங்க. தமிழ்நாடு அவர்களுக்கு தாயகமா இருக்கிறது. எனவே, தமிழ்நாட்டுக்கும் இலங்கைக்கும் இருக்க உறவை துண்டிக்க வேண்டும். தமிழில் ஆராய்ச்சி என்பதே நடைபெற கூடாது.இந்த மாதிரி நுணுக்கமான அரசியல் இந்த கதை களத்தில் பேசப்பட்டிருக்கிறது.
அப்படத்தில் வரும் ஒரு டயலாக், “நாம ஏன்பா திருப்பி அடிக்கல?”, “திருப்பி அடிச்சாதான் பார்ப்பல!” என்ற வசனமும், இது போன்று நெஞ்சில் ஊசி வைத்து குற்றுவது போன்ற பல வசனங்கள் இருக்கிறது.
மாணவர்களுடைய சக்தி மகா சக்தி என்று கூறும்போது, அந்த மாணவர்களின் குரலை உயர்த்தி, ஒரு மாணவனுக்கு என்ன நிகழ்ந்தது என்பதை தத்துரூபக் காட்சியாக, தலைகீழாக அந்த மாணவன் தொங்க வைக்கப்படுகிறான். அதன் பிறகு அவன் உயிர் பறிபோகிறது.
எந்தெந்த இடத்தில் இந்த மாதிரியான பிரச்சனை வருகிறது? என்றால் பெண்கள் விஷயத்தில் , இளைஞர்கள் விசியத்தில், இளைங்கர்களின் ஆடை அனைத்துமே களைந்து, அவர்களை கொன்று, அவர்களின் முதுகில் அந்த மாதிரியான வசனங்கள் எழுதுவதாக இருக்கட்டும், இல்ல, பல வீடுகள் தீக்கரையாக்கப்பட்ததாக இருக்கட்டும். பல வழிபாட்டு தளங்களை சேதப்படுத்தியதாக இருக்கட்டும். இப்படி எண்ணில் அடங்காத வரலாறுகளை 2 மணி நேரத்தில் எவ்வளோ விசியத்தை புரிய வைக்க முடியுமோ அவ்வளவு விசியங்களை புரியவச்சுட்டாங்க.

SO, சும்மா ஏனோ தானொன்னு நடந்த ஒரு மனிதன் தான் ஒரு இனப்போராளியாக, தலைவனாக மாறினாரா? என்ற கேள்வி நமக்குள்ள தோன்றலாம். இப்படத்தில் தலைவர் பிரபாகரன் அவரின் முழு குடும்பமும் அப்படியே காண்பிக்கப்பட்டிருக்கு. பாசமான தந்தை, நல்ல ஒரு தாய், சகோதரி, அவுங்களுக்கு இருக்கக்கூடிய அண்ணண், அதுவும் வெளிநாட்டுல ஒரு நல்ல வேலையில் இருக்கிறார். அந்த குடும்பத்தில் “என் இளைய பையனை மட்டும் எப்படியாவது காப்பாற்றிவிடு கடவுளே!” என்ற அவரின் தந்தையின் குரலாக இருக்கட்டும், “நாம எப்படி வாழ்ந்த குடும்பம் தெரியுமா? இப்ப இப்படி இருக்கோம். உன் கூட இருப்பவன் எல்லாம் ஓடி போயிருவான்டா, நீ மட்டும் தான் இருப்ப. நம்ம குடும்பம் மட்டும் தான் நடுத்தெருவில் நிற்கப்போகிறது.” என்று தந்தை பேசும் வசனத்தில், தலைவர் பிரபாகரன் கதாபாத்திரம் சொல்லும் வசனம் தெரியுமா? “நான் என் இனத்துக்காக போராட தொடங்கிவிட்டேன், இத உங்ககிட்ட இருந்து தான் படிச்சேன், நாம கொடுத்த வாக்கை திரும்ப எடுக்கக்கூடாது. அதை நிறைவேற்றி காண்பிக்கவேண்டும். அந்த ஒழுக்கம் நான் உங்களிடம் இருந்து தான் படித்தேன்” அப்படினு சொல்ற டயலாக் அ இருக்கட்டும்.

ஒழுக்கம், தலைவர் பிரபாகரன் அவர்களை பிடிப்பதற்காக இலங்கை அரசாங்கம் பல] நேரங்களிலும் முயற்சி செய்கிறது. அவருடைய பிம்பத்தை சிதைப்பதற்க்காக பல நேரத்திலும் முயற்சி செய்தார்கள்.10,000கக்கும் அதிகமான புகைபடங்கள், பல விதமான காணொளிகள். இவை அனைத்தையும் எடுத்து எடுத்து பார்க்கிறார்கள்.இவற்றில் ஏதாவது ஒழுக்கமின்மையாக நடந்தாரா? மதுக்கோப்பையுடன் அவர் புகைப்படம் எடுத்து கொண்டாரா? வேறு ஏதாவது ஒரு விதத்தில் அவரின் பேரை டேமேஜ் பண்ணமுடியுமா? என்று சோதித்து பார்க்கும் போது இலங்கை அரசாங்கத்துக்கு கிடைத்தது தோல்வி மட்டுமே.
அடுத்ததாக பகத்சிங் அவர்களின் புகைப்படம், சுபாஷ் சந்திர போஸ் அவரின் பெயர், சே குவேரா அவரின் புத்தகம், இவ்வாறு புரட்சியாளர்கள்மிக பெரிய அளவில் இந்த திரைப்படத்தில் பேசப்பட்டிருக்கிறார்கள்.

அகிம்சை வழியாக ஒரு பக்கத்தில் அங்கு எல்லாம் நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது. அகிம்சை வழியாக சென்றிருந்தால் தமிழ் மக்களுக்கு நல்ல காலம் கிடைச்சுருக்கும் என்று சொல்ல யாராவது இருந்திங்கனா, போர் முடிஞ்சுஇப்ப 10,11 வருஷம் ஆனப்பிறகும் அங்கு தமிழ் மக்களுக்கு நல்லது நடந்து கொண்டிருக்கிறதா? மீள்குடியமர்தல், உரிமைகள் பறிபோகுதல், அவர்களுடைய எத்தனை உறவு காணாமல் ஆக்கப்பட்டிருகிறார்கள், எத்தனை நபர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இதற்கான தீர்ப்பு ஏதாவது நமக்கு கிடைச்சுதா?

ஆயுத போராட்டம் தான் தமிழ் மக்களின் விடுதலையை தடுக்கிறது என்று சொல்லிய நபர்கள், 11 வருடம் கழித்து அந்த வார்த்தையை பேச மறுப்பது ஏன்?இப்போ நிறைய பேர் சொல்கிற ஒரே ஒரு வார்த்தை இருக்கு. நாம பலமொடு இருந்த அந்த காலத்திலே எதுமே செய்ய முடியலையே! இப்ப பலம் தரும் தலைவர் இல்லை. நம்மளால என்ன செய்யமுடியும் அப்படின்ற ஒரு வார்த்தை தான. சரியான ஒரு தலைவனை இழந்துவிட்டால் அந்த இனம் அடையும் துன்பம் இதுவே! அதற்கு சிறந்த உதாரணம், குடிகலங்கு இருக்க வரைக்கும், அங்கு சீனா காலடி எடுத்து வைக்க பயந்துட்டு இருந்தாங்க. ஆனால் இப்போ, அது இலங்கையா? சீனலங்காவா? என பலவிதமான கேள்விகள் எழுப்ப படுகிறது.

பல நேரங்களிலும் பூர்வக்குடிகள் ஒரு இடத்தில் இருந்து அப்புறப்படுத்தப்படுகிறார்கள் என்றால், அந்த இடம் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகிறது என்பதை நாம் உணர வேண்டும். அப்படினா இந்த ஆயுதப் போராட்டத்தை தலைவர் பிரபாகரன் வேண்டும் என்றே தேர்ந்தெடுத்தாரா? அதற்கும் இந்த மேதகு படம் சிறந்த பதில்களை தந்துள்ளது. “ஆயுதத்தை நானா wanted அ எடுக்கல, என்னுள் புகுத்த நினைக்கிறார்கள். இதை எடுத்தா தான் நாங்க உயிரோடு இருக்க முடியும், உரிமையோடு இருக்க முடியும், கௌரவதோட இருக்க முடியும்” என்ற வசனத்தை பேசும் போது, புல்லரித்து போகும். “ஏங்க, நமக்காக நாம் போராடும் போது, சிங்கள இராணுவத்திற்கு எதிராக மட்டுமே தலைவர் பிரபாகரன் ஈடுப்பட்டார்கள். துரோகிகளுக்கு எதிராக மட்டுமே அவரின் ஆயுதத்தையும், ஆயுத படையையும் பயன்படுத்தினார் என்று கூறினால் மிகையல்ல.

அதே நேரத்தில், சிங்களம் என்ன செஞ்சிச்சு? பார்க்கிற அதனை தமிழர்களையும் கொன்றுவிடுங்கள் என்ற உத்தரவை பிறப்பித்தார்கள். அப்படி மட்டும் விடுதலை புலிகள் செய்திருந்தால் ஒரு நாளைக்கு 1000 – 10,000 தமிழர்களை கொன்றிருக்க முடியும். ஆனால் பிரபாகரன் அவருடைய கோரிக்கைக்காய் “நீங்களும் சந்தோசமா, நிம்மதியா வாழுங்க, ஆனா எங்களோட உரிமையை பறித்து உங்களுடைய வாழ்க்கையை நடத்தாதீர்கள். அதற்கு எதிராக தான் நாங்க போராடி வருகிறோம் “ என்பதை தெளிவாக
சொல்லிருந்தார் தலைவர் பிரபாகரன்.

முதல் பாகத்திலையே, இவ்வளவு பெரிய விஷயங்கள் மேதகு திரைப்படத்தால் நமக்கு உணர்த்தப்பட்டுவிட்டது. அப்படினா, இதற்கு இரண்டாவது பாகம், மூன்றாவது பாகம் எல்லாம் வந்துச்சுனா, பல விதமான உண்மைகள் வெளில வரும். எப்படி விடுதலை புலிகள் தோற்றார்கள்? யார் அவர்களுக்கு உதவி செய்தார்கள், யார் அவருக்கு துரோகம் செய்தார்கள், இந்தியா என்ன மாதிரியான துரோகம் செய்தது? இந்தியாவின் சார்பாக, தமிழகத்தின் சார்பாக இருந்த காட்சிகள் என்ன செய்தார்கள்? போன்ற கேள்விகளுக்கு பல உண்மைகள் வெளிவரலாம். ஆனா இரண்டாவது பாகம் எடுக்கப்படுமா என்பது மிக பெரிய ஒரு கேள்வி? அப்படியே எடுக்க பட்டாலும், வெளியிடப்படுமா? என்பது அடுத்த கேள்வி.

இந்த படத்தின் கடைசி frames எல்லாம் பார்த்தீங்கன்னா, வெளிநாடுகளில் இருந்து பணம் கொடுத்தவர்களுக்கு நன்றிகள் என்ற Titlecard அப்படியே போயிட்டே இருக்கும். அதற்கு அர்த்தம் என்னவென்றால், அதனை மனிதர்களுடைய வலிகள் இதற்கு பின்னால் இருந்துருகிறது. எங்களோட உண்மையான வரலாறை யாராவது ஒரு நபர் வெளில வந்து சொல்லிட மாட்டாங்களா? எங்கள் தலைவர் பிரபாகரன் இப்படி தான் பிறந்தார், இப்படி தான் வாழ்ந்தார், இதற்காக தான் போராளியாக மாறினார் அப்படின்ற ஏக்கத்திற்கு சின்ன தீனியாக கிடைத்தது தான் மேதகு திரைப்படம்.

இந்த திரைப்படத்தை பார்க்கலாமா? வேண்டாமா? அப்படினு யோசிச்சுட்டு இருந்திங்கனா, தயவு செய்து பாருங்கள் என்பது தான் என்னுடைய கோரிக்கை. நிச்சயம் இந்த திரைப்படம், தமிழீழம், தலைவர் பிரபாகரன் அவருடைய போராட்டம், அதற்கு பின்னால் இலங்கை, சிங்கள அரசாங்கத்தின் இன வெறி, இதன் பின்னால் இருந்த அரசியல், நசுங்கப்பட்ட இனத்தின் மக்களின் குரல் இவையெல்லாம் நமக்கு கேட்கும் என்றால் அது மிகையல்ல.
வரும் தலைமுறையினருக்கும் இந்த ஒரு படம் பாடமாக இருக்கும் என்று சொன்னால் அதை விட பெரிய ஒரு award இந்த படத்துக்கு நாம கொடுக்கமுடியாது. overall அ இந்த theme க்கு Handsoff. இந்த படத்தை எடுக்க உதவியவர்களுக்கும், இந்த படத்திற்கான பல சிக்கல்களை தீர்த்தவர்களுக்கும், பல விதமான நன்றிகள்!

மேதகு திரைப்படத்தை பாருங்கள்! பகிருங்கள்!
உங்கள் கருத்துக்கள் வரவேற்க படுகின்றன.
நல்லதை பகிர்வோம்! நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
உங்கள் லோகன்.
credits: Ramya & viki