கேமிங் நிறுவனத்தில் முதலீடு செய்த பிரபல நடிகை காஜல் அகர்வால்.!
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் அதிக நேரம் செலவிடுவது இந்த ஆன்லைன் கேம்களில் தான். இந்நிலையில் ஓகி கேமிங் (Okie Gaming) என்ற ஸ்டாரட் அப் நிறுவனத்தில் பிரபல நடிகை காஜல் அகர்வால் முதலீடு செய்து 15 சதவீத பங்குகளை பெற்றுள்ளதாகவும், நிறுவனத்தில் முக்கிய பங்குதாரராகி இருப்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக இந்த நிதியை கேம்களின் எண்ணிக்கை அதிகரிக்க பயன்படுத்திக்கொள்ள இருப்பதாகவும், இந்த நிதியாண்டுக்குள் சுமார் ரூ.50 கோடி வருவாய் ஈட்ட திட்டமிட்ருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த கேமிங் துறை ஆனது செழித்துக்கொண்டிருக்கிறது, எனவே இத்துறையில் அங்கம் வகிக்க இதுதான் சரியான நேரம். நான் எப்போதுமே ஈடுபாடு மிக்க கேமராக இருந்திருக்கிறேன். இந்தியாவில் பெண் கேமர்களுக்கு புதிய பாதைகள் திறக்கப்படுவதற்கு தாக்கம் செலுத்த விரும்புகிறேன் என்று நடிகை காஜல் அகர்வால் மிகவும் பிரபலமான பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.
செவ்வாய் கிரகத்தில் நீடிக்கும் மர்மம்: சந்தேகத்தை தீர்த்த சஹாரா பிளாக் பியூட்டி விண்கற்கள்.!
காஜல் அகர்வால் நடித்த முதல் திரைப்படமான லக்ஷ்மி கல்யாணம் தெலுங்கில் 2007-ம் ஆண்டு வெளியானது. குறிப்பாக தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் பிரபலமாக உள்ள காஜல் அகர்வால் கடந்த 2004-ம் ஆண்டு பாலிவுட்டில் அறிமுகமானார். துப்பாக்கி, மகதீரா, சிங்கம் உள்ளிட்ட அருமையான படங்களில் காஜல் அகர்வால் நடித்துள்ளார்.
ஒகி கேமிங், ஸ்மார்ட் ஹவுசி, ஃபேண்டஸி கிரிக்கெட்,ஸ்மார்ட் நம்பர் குவிஸ், கிரிக்கெட், ரம்மி லூடோ, உள்ளிட்ட கேம்களை கொண்டுள்ளது. எல்லமே பணம் சம்பாதிக்க வழி செய்யும் விளையாட்டுகள். தற்போது இணைய வடிவில் செயல்பட்டு வரும் நிலையில், விரைவில் செயலி வடிவிலும் அணுக வழி செய்யப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் பிராந்திய விளையாட்டுகளான படகு போட்டி உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்தும், தேசி ஸ்போர்ட்ஸ் லீக் வசதியையும் நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது. நடிகை காஜல் அகர்வால் கேமிங் துறையில் ஆர்வம் காட்டுவது இத்துறையில் பெரிய தாக்கம் செலுத்தும் என்று, ஓகி கேமிங் நிறுவனத்தின் தாய் நிறுவனமாக ஓகி வென்சர்ஜ் சி.இ.ஒ ஜிடின் மஸந்த் கூறியுள்ளார்.
அதன்பின்பு ஒகி கேமிங் நிறுவனத்திற்கு தனித்தன்மை வாய்ந்த எண்ணங்கள் மற்றும் உள்ளொளியைக் கொண்டு வரும் ஈடுபாடு மிக்க முதலீட்டாளராக காஜல் திகழ்வதாகவும் ஜிடின் மஸந்த் தெரிவித்துள்ளார். அதேபோல் அடுத்த ஆண்டு மார்ச் மாத வாக்கில் ரூ.50 கோடி வருவாயை இலக்காகக் கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார். மேலும் எந்த ஒரு கட்டத்திலும் எங்களது மேடையில் ஒரு லட்சம் பயனாளிகளை பெற்றிருக்க விரும்புகிறோம். பயனாளிகள் ரூ.10 முதல் ரூ.25-க்கு விளையாடி ரூ.5000 வரை சம்பாதிக்கலாம். ஆனால் சூதாட்ட வகை கேம்களில் இருந்து விலகி இருப்போம் என்று அவர் கூறினார்.
இப்போது ஐந்து கேம்கள் இருப்பதாகவும், ஒவ்வொரு மாதமும் ஒரு புதிய கேமை அறிமுகம் செய்ய இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். நிறுவனம் தனது மேடையில் ஏற்கனவே ரூ.5 கோடி முதலீடு செய்துள்ளது. வரும் பிப்ரவரி மாதம் இதே அளவு தொகைய முதலீடு செய்ய உள்ளது. ஊழியர்கள் எண்ணிக்கையையும் அதிகரிக்க உள்ளதாக மஸந்த் கூறியுள்ளாhர்.
[ad_2]